எம் நேயர் Marcil Francis ( Francis மாஸ்டர்) என்பவர் தமிழ் ஆர்வம் மிக்க ஒருவர். தம் சமுதாயத்திற்காக பல உதவிகளை முன்னின்று செய்த பெரிய கல்விமான். Cambridge, Guelph, Kitchiner மற்றும் watterloo இடங்களில் உள்ள தமிழர்கள் இவரை Francis மாஸ்டர் என அழைப்பர்.

இவர் இன்று ஆழ் கடலில் உள்ள ஒரு அற்புதமான முத்தை முக்குளித்து கண்டுபிடித்து கொண்டு வந்திருக்கின்றார். ஆமாம், ஒரு இனிய தமிழ் பயிலும் வலைத்தளத்தை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார்.

சிறுவர்களுக்கு தமிழ் பயிலும் பல வலைத்தளங்கள் இருப்பது எமக்கு தெரிந்ததது. ஆனால் இது பெரியவர்களுக்கான தமிழ் பயிலும் தளம்!

அருமையாக உள்ளது.  நீங்களும் முக்குளித்து முத்தை எடுங்கள்!

இதோ இணைய வகுப்பறை