மல்லிகையின் வாசத்துக்கு மயங்காத மாந்தரே இல்லை! அப்படி ஒரு 100 மல்லிகையின் வாசத்தை ஒரே பூ கொண்டிருந்தால் எப்படியிருக்கும்?

அப்டியொரு பூத்தான் இந்தப்பூ!  இதன் பெயர் Gardenias.  நம்ம ஊரு நந்தியாவிட்டை குடும்பத்தைச் சேர்ந்தது.

அன்பான அக்கா ஒருவர் எம் வீட்டுக்கு வரும்போது பரிசாக அளித்தார். கிட்டத்தட்ட 3 வருடங்களாகியும் பூக்காமல் இருந்த இந்த பூமரம், இன்று தன் குணாதிசியங்களுடன்  முதல் முறையாக மொட்டவிழ்ந்துள்ளது.

நீங்களும் இந்த செடியை உங்கள் வீட்டிலும் வளர்க்கலாம்! ஒரு இரண்டு பூ பூத்தாலே போதும், உங்கள் வீட்டிற்கு எந்த வாசனைத்திரவியமும் தோவையில்லை! ( சிலவேளை மூன்று வருடங்கள் காக்க வேண்டிவரும்!)