ஜூன் 2010


சீனப்பெண் ஒருவர் சின்னச் சின்ன ஆசை பாடுகின்றார். கேட்டுப்பாருங்கள்

அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

மூத்தவன் முருகன் முழு நாளும் வேலை
இளையவன் ராசன் ராப்பகல் வேலை
நடுவிலான் நகுலன் அங்குமிங்கும் வேலை
எப்பவுமே நித்திரை தான் எங்களுக்கு வேலை

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

மரக்கறி மட்டின் கறி பிறிஜ்ஜினில் பல நாளில்
சூடு காட்டிச் சாப்பிட்டு என் நாக்குச் செத்துப் போச்சுதடி
சனி ஞாயிர் தும்மலடி ஹீற்றராலே தலையிடி
உயிர் வாழ இங்கு வந்து உருமாறிப் போனேனடி

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

பேரப்பிள்ளை பலரடி பெயர்களோ புதிதடி
ஆசையாகக் கதைத்திட இங்கிலீசு வேணுமடி
அந்தரத்தில் வாழ்க்கையடி எவருமே பிசியடி
உண்ணாணைத் தான் சொல்லுறேண்டி
எங்கள் வாழ்க்கை போச்சுதேடி

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

குளிருக்கு விஸ்கியடி வெயிலுக்கு பியறடி
குறுக்காலை போவார் கண்டதுக்கும் தண்ணியடி
ஆணென்ன பெண்ணென்ன எதுக்குமே சமமடி
இங்கத்தையன் டான்ஸ் தான் எங்களுக்கு ஸ்ரைலடி

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

கலைக்கூடப் பள்ளிக்கூடக் கொமிற்றிகள் பலதடி
கூட்டத்தையே கேள்வி கேட்டுக் கண்டபடி கெடுபிடி
படிச்சவர் பழையவர் எனப்பல பேரடி
பதவிக்கும் பெயருக்கும் போட்டி போட்டு அடிபிடி

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

கூழ் தன்னோ கஞ்சி தன்னோ குடிச்சிடப் போறேனடி
வயல்வெளி வரம்பிலே நடந்திட வாறேனடி
கொண்ட நாடு விட்டு வந்து கந்தறுந்து போனோமடி
கப்பலிலோ வள்ளத்திலோ முத்தம் வரப்போறேனடி

அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ

 ID !# 009

1983ம் ஆண்டு பிறந்த மணமகளுக்கு மணமகன் தேவை

இலங்கையைச் சேர்ந்த இந்து மணமகள், தற்போது கனடாவில் வசித்து வருகின்றார். Graduated in University of Toronto. மணமகளுக்கு ஏழில் செவ்வாய் குற்றம் இருக்கின்றது.

இம்மணமகளுக்கு ஏற்ற, வரனை எதிர்பார்க்கின்றனர்.

10.06.2010

…………………………………………………………………………………………………

ID # 008

1978 ம் ஆண்டு பிறந்த மணமகளுக்கு மணமகன் தேவை

இலங்கையில் பிறந்து, கனடாவில் பட்டப்படிப்பினை முடித்துவிட்டு தற்போது அமெரிக்காவில் வேலைபார்க்கின்றார்.

இம்மணமகளுக்கு ஏற்ற, வரனை எதிர்பார்க்கின்றனர்.

07.06.2020

……………………………………………………………………………………………….

ID # 007

1976 ம் ஆண்டு March மாதம் பிறந்த மணமகளுக்கு மணமகன் தேவை

இலங்கையைச் சேர்ந்த மணமகள், தற்போது கனடாவில் வசித்து வருகின்றார். Diploma in Accounting (3 years) படிப்பினை  முடித்துவிட்டு  தற்போது Rogers Home phone ல் Technical Support Consultant ஆக பணிபுரிகின்றார்.

இம் மணமகளுக்கு ஏற்ற, வரனை எதிர்பார்க்கின்றனர்.

07.04.2010

…………………………. ……………………………………………………………………

ID # 006

1985 ம் ஆண்டு June மாதம் பிறந்த மணமகனுக்கு மணமகள் தேவை.

இலங்கையைச் சேர்ந்த மணமகன், தற்போது இந்தியாவில் வசிக்கின்றார்.  இந்தியாவில் BBA (Bachelor of Business Administration) படிப்பினை April, 2010ல் பூர்த்தியாக்க உள்ளார்.

இவருக்கு கனடாவில் உள்ள மணமகள் விரும்பத்தக்கது என் எண்ணுகின்றனர்.

30.03.2010

………………………………………………………………………………………………..

ID # 005

பெண் Doctor ஒருவருக்கு மணமகன் வேண்டும்.

பிறந்த திகதி: 23.08.1973

பிறந்த இடம்: யாழ்ப்பாணம்

வதிவிடம்: யாழ்ப்பாணம்

வேலை: யாழ்.வைத்திய சாலையில் டாக்டராக பணியாற்றுகின்றார்.

இவருக்கு ஏற்ற நல்ல வரனை எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டு மணமகனும் சம்மதம்.

27.03.2010

…………………………………………………………………………………………….

ID # 004

ச.செழியன்
தஞ்சாவூர் பல்கலைக் கழகம்
கணினி இயக்குபவர்.

நான் 1.4.1976 இல் பிறந்தேன்

ராசி: மேஷம்
நட்சத்திரம்: அசுவினி
பிறந்த நேரம்: வியாழன் காலை 8.30 மணியிலிருந்து 8.45
செவ்வாய் தோஷம் இருப்பதாக கூறினார்கள்
Personal Data
Name : S. SEZHIAN
Date of Birth : 1st April 1976
Marital Status : Single
Nationality : Indian
Religion : Hindu
Community : Backward
Experience
 Worked as DTP Operator Cum Designer in Dhinashakthi Publications
Worked as Computer Operator in Thozil Ulagam Publications
Qualification
Technical : D.C.A, D.T.P, Type-Writing (Tamil & English)
Educational : (B.Com) in Madras University
Contact Details
Current Residence Address :
#67/26, 3rd Palla Street, Vyasarpadi, Chennai – 600 039
Permanent Residence Address :
Vanigar Street, Dusi Village, Cheyar Taluk – 631 702
நான் ஒரு கால் ஊனமுற்றவன். மேலும் விவரம் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும். E-mail id : vssezhian@gmail.com

27.03.2010

……………………………………………………………………………………………….

ID # 003

1986 ம் ஆண்டு பிறந்த, கனடா Torontoவில் வசிக்கும், பட்டப்படிப்பு முடித்து வேலைசெய்யும் அழகிய பெண்ணிற்கு, இந்து சமயத்தைச் சேர்ந்த படித்த மணமகன் தேவை.

26.03.2010

………………………………………………………………………………………………….

ID # 002

1986 ம் ஆண்டு June மாதம் பிறந்த, கனடா ஓட்டோவாவில் வசிக்கும்  மணமகள் ஒருவருக்கு இந்துமதத்தை சேர்ந்த படித்த மணமகன் தேவை.

26.03.2010

………………………………………………………………………………………………….

ID # 001

1981 ம் ஆண்டு November மாதம் பிறந்து, அமெரிக்காவில் chemical engineer ஆக பணிபுரியும்  மணமகன் ஒருவருக்கு, படித்த அழகிய  இந்துமதத்தை உடைய மணமகள் தேவை.

 26.03.2010

பொதுவாக உங்கள் தேவைகளை பின்வரும் விபரங்களுடன் அனுப்பிவைத்தால் நன்றாக இருக்கும் என் எண்ணுகின்றோம்.

உங்கள் விபரங்கள்

 • பிறந்த வருடம், மாதம்
 • மணமகள்/மணமகள் தேவை
 • வசிக்கும் இடம்
 • சமயம்(விரும்பினால்)
 • கல்வித்தகுதி
 • வேலை
 • புகைப்படம் (விரும்பினால்)
 • ஜாதகத்தில் ஏதேனும் முக்கிய விடயம் (இருந்தால்)

நீங்கள் எதிர்பார்க்கும் வரனின் விபரங்கள்

 • எதிர்பார்ப்பவரின் கல்வி தகமை
 • எதிர்பார்ப்பவரின் சமயம் (வேண்டுமானால்)
 • ஜாதகத்தில் ஏதேனும் முக்கிய விடயம் (இருந்தால்)
 • வேறு ஏதேனும் தேவையான முக்கிய விடயம்.

பங்குனி திருநாள் வெள்ளியில் (27.03.2010) எம் தமிழ் நெவிக்கேஷன்  திருமணசேவையை ஆரம்பித்து வைத்துள்ளது.

ஒவ்வொரு திக்கொன்றும் திசையொன்றுமாய்  சிதறி இருக்கும் நாம், எமக்கு ஒரு வரனைத்தேட எவ்வளவு கஸ்ட்டப்படுகின்றோம் என்று வரன் தேடியவர்களுக்கு தெரியும். சரியான தொடர்புகள் கிடைக்காமல் காலதாமதம் ஆதல், தேடியபடி கிடைக்காமல் போதல் என்பனவற்றினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் என்பனவற்றை கருத்தில் கொண்டு இந்த சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாராவது ஒரு சகோதரனோ, சகோதரியோ கரை சேரும் சந்தோஷம் மட்டுமே எமக்கு!

இப்பக்கத்தில் இலவசமாக உங்கள் மணமகன், மணமகள் விபரங்கள் வெளியிடப்படும். விரும்பியவர்கள் தொடர்புகொள்ளவும்.

barthee@hotmail.com

நீங்கள் தொடர்பு கொள்ளும் விபரங்கள் சம்பந்தப்பட்டவருக்கு மாத்திரம் அனுப்பிவைக்கப்படும்.

எம் நேயர் Marcil Francis ( Francis மாஸ்டர்) என்பவர் தமிழ் ஆர்வம் மிக்க ஒருவர். தம் சமுதாயத்திற்காக பல உதவிகளை முன்னின்று செய்த பெரிய கல்விமான். Cambridge, Guelph, Kitchiner மற்றும் watterloo இடங்களில் உள்ள தமிழர்கள் இவரை Francis மாஸ்டர் என அழைப்பர்.

இவர் இன்று ஆழ் கடலில் உள்ள ஒரு அற்புதமான முத்தை முக்குளித்து கண்டுபிடித்து கொண்டு வந்திருக்கின்றார். ஆமாம், ஒரு இனிய தமிழ் பயிலும் வலைத்தளத்தை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார்.

சிறுவர்களுக்கு தமிழ் பயிலும் பல வலைத்தளங்கள் இருப்பது எமக்கு தெரிந்ததது. ஆனால் இது பெரியவர்களுக்கான தமிழ் பயிலும் தளம்!

அருமையாக உள்ளது.  நீங்களும் முக்குளித்து முத்தை எடுங்கள்!

இதோ இணைய வகுப்பறை

முகப்பரு என்பது என்ன?

முகப்பருவரக் காரணம் என்ன??

பருவ வயதில் ஆன்ட்ரோஜன் என்னும் ஹார்மோன்  (Androgen Harmone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. (எல்லாம் வயசுக் கோளாறு என்று சிலர் நக்கல் செய்வதை கவனத்தில் கொள்ளவும்!)

சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை சீபம் (Sebum)என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில் படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்களை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக் கொள்கின்றன.

 பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வராமல் தடுக்கவும், பரு வடுவைப் போக்கவும் வழி உள்ளதா?

பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள்.

நகம் பட்டாலே வடு விழுந்துவிடும். அதனை உடனடியாக போக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும். சிலருக்கு பருக்கள் வந்து முகத்தில் சிறிய பள்ளங்களே ஏற்பட்டிருக்கும். சிலரது முகத்தைப் பார்த்தால் தேங்காய் சிறட்டை போல் இருக்கும்!

முக‌ப்பரு வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்குவத‌ற்கு மு‌ன்பு, ஐ‌ஸ் க‌ட்டிகளா‌ல் ஒ‌த்தட‌ம் கொடு‌த்த ‌பிறகு அ‌தி‌ல் கை வை‌ப்பது ந‌ல்லது. இதனா‌ல் பரு‌க்க‌ளி‌ன் வ‌ழியாக ர‌த்த‌ம் வெ‌ளியாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌கிறது. பொதுவாக பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அது மு‌ற்‌றிய ‌நிலை‌யி‌ல் அ‌தி‌ல் இரு‌க்கு‌ம் வெ‌ள்ளையான ‌திரவ‌த்தை எடு‌த்து ‌விடுவது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். அ‌திலு‌ம் ம‌ற்ற இட‌ங்க‌ளி‌ல் அவை படாம‌ல் எடு‌க்க வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது.

மேலு‌ம், பருவை ‌நீ‌க்குவது ‌எ‌ன்பதை கவனமாக செ‌ய்ய வே‌ண்டு‌ம். பருவை கைகளா‌ல் ‌கி‌ள்‌ளி எடு‌த்து‌விடு‌கிறோ‌ம். அ‌தி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியான ‌பிறகு ர‌த்த‌ம் வரு‌ம். அதனை துடை‌த்து‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு அ‌ப்படியே ‌வி‌ட்டு‌விட‌க் கூடாது. அ‌ப்படி ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌ன் பரு‌க்க‌ள் பரவு‌கிறது.

பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்‌கியது‌ம் உடனடியாக அதனை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌வி‌ட்டு அ‌தி‌ல் ஏதாவது ஒரு பே‌ஸ் பே‌க்கை (‌க்‌ரீ‌ம்) போட வே‌ண்டு‌ம். அ‌ப்படி போடா‌வி‌ட்டா‌ல், பரு‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்ட துளை‌‌க்கு‌ள் தூசு, துக‌ள்க‌ள் போ‌ய் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம்.

முகப்பரு வந்தவர்கள் அதிலும், அதிகமாக முகப்பருவினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பருக்கள் வருபவர்கள் எந்த விதமான க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது. அந்த அளவிற்கு வலி எடுக்கும். அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது.

அழகுக் கலை நிபுணரால் எல்லாமே செய்ய முடியாது. எனவே, அவர்களுக்கு அடிப்படையில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து கொண்டு அதற்கு முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பருவை ம‌‌ட்டு‌ம் ‌நீ‌க்‌கி‌வி‌ட்டா‌லு‌ம், உ‌ள்ளு‌க்கு‌ள் இரு‌ந்து ‌சீ‌‌ழ் போ‌ன்ற ஒ‌ன்று வ‌ந்து கொ‌ண்டே இரு‌க்கு‌ம். அதனை எ‌வ்வளவுதா‌ன் எடு‌க்க முடியு‌ம். ஒரு வேளை அது சரும‌த்‌தி‌ற்கு அடி‌யிலேயே த‌ங்‌கி‌வி‌ட்டாலு‌ம் ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம். அ‌திகமாக எடு‌த்தாலு‌ம் பரு இரு‌ந்த இட‌த்‌தி‌ல் வடு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம். எனவே பருவை அழகு‌க் கலை ‌நிபுண‌ரிட‌ம் செ‌ன்று ‌நீ‌க்‌கி‌க் கொ‌ள்வதை ‌விட, அ‌திகமாக பரு இரு‌ப்பவ‌ர்க‌ள் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்வதுதா‌ன் ந‌ல்லது.

பரு‌க்க‌ளி‌னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட வடு ‌நி‌ச்சயமாக போகு‌ம். அத‌ற்கு ஒரு ‌நீ‌ண்ட ‌சி‌கி‌ச்சை உ‌ள்ளது. முத‌லி‌ல் பரு உ‌ள்ளவ‌ர்க‌ள் பேஷ‌ிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளவே‌க் கூடாது. ஏ‌ன் அ‌ப்படி‌க் கூறு‌கிறே‌ன் எ‌ன்றா‌ல், பரு வரு‌கிறது எ‌ன்றா‌ல் அவ‌ர்களது சரும‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசை உ‌ள்ளது. மேலு‌ம், பே‌‌ஷ‌ிய‌லி‌ன் போது பய‌ன்படு‌த்து‌ம் ‌க்‌ரீ‌ம்க‌ள் அனை‌த்‌திலு‌ம் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசைதா‌ன் இரு‌க்கு‌ம். எனவே அவரகளது சரும‌த்தை பேஷ‌ிய‌ல் மேலு‌ம் ‌சி‌க்கலா‌க்கு‌ம்.

முக‌த்‌தி‌ல் அ‌திகமான பரு‌க்க‌ள் இரு‌ப்பவ‌ர்க‌ள் அவ‌சியமாக பேஷ‌ிய‌ல் செ‌ய்தே ஆக வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோசனை பெ‌ற்று‌வி‌ட்டு ‌பிறகு பேஷ‌ிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம்.

‌ப்‌ளீ‌ச் செ‌ய்யலா‌ம். ஏனெ‌னி‌ல் ‌ப்‌ளீ‌ச் செ‌ய்வதா‌ல் முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் எ‌ண்ணெ‌ய் த‌ன்மை ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌விடு‌ம். எனவே ‌ப்‌ளீ‌ச்‌சி‌ங் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். தவ‌றி‌ல்லை.

பயணுள்ள சில குறிப்புகள்

1.முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.

2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள் உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.

3. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.

4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ் கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.

5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.

6.தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள்.

7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
8. பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.

9. பருக்களில் சீழ் வைத்தால் டெட்ராசைக்ளின் (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.

10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன. அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்

நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்’ (கவனியுங்கள்: ‘மில்லியன்’ அல்ல ‘ட்ரில்லியன்’) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

“காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது.” என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்”.

பழைய சாதத்தை எப்படி செய்வது என்று சமையல் குறிப்பு எதுவும் கேட்டுடாதீங்க…!

« முன்னைய பக்கம்