எம் நேயர்  திரு.ரமேஸ்  அவர்கள், செல்லமாக Dada என்று அழைக்கப்படுபவர் ஒரு ஐயப்ப பக்தர். வருடாவருடம் கனடாவில் இருந்து சபரிமலைக்கு செல்லும் சாமிகளில் ஒருவர். நேற்று ஒரு நிகழ்வின்போது கீழே உள்ள இந்த பிரசுரத்தை தந்தார்.

வளக்கமாக மனிதனின் வாழ்வியல் வளிகளை கிறிஸ்தவ மதத்தினர்தான் தம் மதத்தில் சொல்லப்பட வாழ்வியல் தத்துவங்களை பிரசுரங்களாக அச்சிட்டு அதனை கிறிஸ்த்தவ நண்பர்கள் மூலம் கொடுப்பார்கள்.

இந்துமதத்திலும் அர்ச்சனை, யாகம், மந்திரம் என்பன பெரும்பாலும் நடைபெற்றாலும் இதனைச் செய்யாத மற்ற மக்களுக்கு எதுவுமே சென்றடைவதில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம்!

எனவே இன்று இந்த Dada அவர்கள் செய்துள்ள முயற்சி, மதத்தை மட்டும் சுமக்காமல் கூடவே மனிதன் வளமுடன் வாழ வளிகளையும் சுமந்து வந்துள்ளது.

Dada வின் முயற்சிக்கு பாராட்டுக்கள்!