இக்கட்டுரை எழுதுவதன் நோக்கம் நேயர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை தோற்றுவிக்கவே. எம்மில் பலர் சுற்றுலா செல்லும் போது கேரளாவில் பல பாகங்களுக்கு செல்வது வளக்கம். எங்கு செல்வதாக இருந்தாலும் தகுந்த பாதுகாப்போடு செல்வதுதான் புத்திசாலித்தனம்!

கேரளா என்றாலே ரம்மியமான பச்சைப்பசேல் என்ற இயற்கை அழகு கொட்டும்  சுற்றுலா தளங்கள் ஞாபகத்திற்கு வரும்.

 இந்தியாவில் கேரளா ஒரு சிறந்த சுற்றூலா தலம் என எண்ணிக்கொண்டிருக்கையில், அங்கே அதிர்ச்சியூட்டும் மிருகத்தனமான ஈனச்செயல்களும் வெளியுலகத்திற்கு தெரியாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

பல நாட்களாக அரங்கேறிவரும் இந்த மிருகத்தனதை, பாதிக்கப்பட்டவர்களே வெளிச்சத்திற்கு கொண்டுவராததுதான் இன்னமும் மனவருத்தத்திற்குரிய விடயம்.

சரி, அப்படி என்னதான் அங்கு நடந்துவிட்டது?

கற்பனையில் நாமும் அங்கேயே செல்வோம்…

கும்பாவுருட்டி அருவி!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் மேல்கரை வழியாக, கேரள அச்சன் கோயில் செல்லும் பாதையில், கேரள மேக்கரை செக்போஸ்ட்டில் அனுமதிச் சீட்டு வாங்கி, சாலையில் இருந்து இடதுபுறம் இறங்கும் கரடுமுரடான மலைப்பாதையில் 500 மீட்டர் நடந்தால்… மனதை வருடும் இயற்கை எழில் கொஞ்சும் கும்பாவுருட்டி அருவியைத் தரிசிக்கலாம்.

 இயற்கை எழில் கொஞ்சும் இடம். சுமாராக யாரும் எளிதில் வந்துவிடமுடியாத கரடுமுரடான பாதை, வாகனங்கள் அருகில் வரமுடியாத அளவிற்கு மோசமான பள்ளத்தாக்கு. என்றாலும் இந்த அருவிக்கு செல்வது ஒரு சாகசம் போல் இருக்கும்.

+2 படித்த காலத்தில் இந்த அருவியில் நண்பர்களுடன் குளிந்த அந்த நினைவு இன்னமும் மனதில் பசுமையாக இருக்கின்றது. அண்மையில் இதே அருவில் எம்முடன் குளித்த நண்பன் ஒருவன் தொடர்புகொண்டு விடயத்தை சொல்ல, அதிர்ச்சியில் உறைந்தேவிட்டேன்.

இது ஏதோ திரைப்படக் காட்சி இல்லை. கேரளா வில் கும்பாவுருட்டி அருவியில் குளித்து மகிழக் குதூகலமாகச் சென்ற தமிழகக் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம்தான் இது.

இதை செய்தது, சமூகவிரோதிகளோ ரவுடிக் கூட்டமோ இல்லை. வனத்தையும் வனப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்களையும் பாதுகாக்கவேண்டிய ‘வன சம்ரக்ஷண சமிதி’ எனப்படும் கேரள வனக்குழு உறுப்பினர்கள்தான் அந்த ஓநாய்கள்!

சுற்றுலா சென்ற  தமிழ்  நாட்டைச்சேர்ந்த  தாயையும் மகளையும்  நிர்வாணமாக்கிக் கதறவிட்டு, அதை செல்போனில் படம் பிடித்தும் ரசித்து இருக்கிறார்கள்.

வன ஊழியர் ஒருவர், அந்த செல்போனை கடை ஒன்றில் சார்ஜ் ஏற்றத் தந்து, அதை மறந்துவிட்டுச் சென்றபோது… அதை நோண்டிய கடைக்காரரின் கண்ணில் பெண்களை நிர்வாணமாக்கிக் கொடுமைப்படுத்தும் படங்கள் ஏராள மாகச் சிக்கி இருக்கிறது. உடனே, தன் செல்லுக்கு அதை டவுன்லோட் செய்திருக்கிறார். அவற்றில் ஒரே ஒரு காட்சிதான் மேலே விவரிக்கப்பட்டு இருப்பது.

இந்தக் காட்சிகளில் ஒன்றை மலையாளத்தில் வெளியாகும் ‘அன்வேஷணம்’ (விசாரணை) என்ற வெப்சைட் வெளியிட… விவகாரம் இப்போது கேரள சட்டமன்றம் வரை புயல் கிளப்பி, எல்லோரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.

”துணியை அவிழ்த்துப் போடு… ம்ம்… கழட்டு!”

”ஐயோ வேணாம் சாமீ…”

”ஏய், விடுடி… துணியை விடுடி…”

”வேணாங்க… கால்ல வேணும்னாலும் விழுறேங்க ஐயா… இனிமே இங்கே குளிக்க வரலீங்க… விட்ருங்க…”

”டேய்! இவளை மட்டுமில்ல… இன்னொருத்தி யையும் மதியம் வரை அம்மணமா நிறுத்தி வைக் கணும், தெரிஞ்சுதா? அவ துணியையும் கழட்டி எறி…”

இப்படி போகின்றது இந்த வீடியோ…

செங்கோட்டை வாடகைக் காரோட்டி கிருஷ்ணன் சொன்ன பதைபதைப்பு இது.

”நான் ரெண்டு மூணு முறை கும்பா வுருட்டிக்கு டூரிஸ்டுகளை கூட்டிப் போயிருக்கேன். ஃபேமஸான இடம்தான் ரொம்ப அழகா இருக்கும்…. ஆனால் ரொம்ப ஆபத்தான ஸ்பாட்டுங்க அது. பட்டப் பகல்ல கூட நடமாட்டம் இருக்காது. காரை ரோட்ல நிப்பாட்டி இறக்கி விடுவோம்…

அருவிக்கு போறவங்க யாரும் சந்தோஷமா வர்றதேயில்லை. என்ன நடந்தது என்று சொல்லவும் மாட்டார்கள். ஆனால் அழுது கொண்டே வருவார்கள். இலஞ்சியைச் சேர்ந்த ஒரு இளம்ஜோடி… கல்யாணமாகி ஒருசில நாட்களாகியிருக்கும். கும்பாவுருட்டி போக ணும்னு என் வண்டியில ஏறுனாங்க. அங்கே போனதும்… 1 மணி நேரத்தில் வர்றோம் வெயிட் பண்ணுனு சொல்லிட்டு போனாங்க… ஆனா 3 மணி நேரம் கழிச்சு சேலை ரவிக்கை எல்லாம் அலங்கோலமா… மூச்சிறைக்க ஓடி வந்தாங்க. “யூனிபார்ம் போட்ட மூணு நாலு ஃபாரஸ்ட் காரங்களும், இன்னும் நாலஞ்சு ரவுடிங்களும் என்னைக் கட்டிப் போட்டுட்டு என் மனைவியை கெடுக்கப் பார்த்தானுங்க… தப்பி ஓடிவந்தோம்’னு சொன்னாங்க…

 என்கிட்ட மறைக்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். போலீஸுக்கு போகலாம்னு சொன்னேன்… வேண்டாம்னு சொன்னாங்க. அன்னையில இருந்து யாரையும் நான் கும்பா வுருட்டிக்கு கூட்டிப் போனதில்லை!”

இப்படி இன்னும் வெளிச்சத்திற்கு வராத விடயம் எத்தனையோ?

எது எப்படியோ, சுற்றூலா என்றுவிட்டு ஆள் அரவம் இல்லாத இடத்திற்கொல்லாம் குறிப்பாக பெண்களை அழைத்துச் செல்வது மேலை நாடுகளில் சாத்தியமாகப் படலாம். ஆனால் இன்னும் பாரத பூமியில் பயங்கொள்ளும் விடயமாகவே இருகின்றது.

வீடியோவை பார்வையிட இங்கு கிளிக் பண்ணவும்