மத்திய அமெரிக்காவிலும் மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வரும் Bagheera kiplingi (பகீரா கிப்லிங்கி) எனப்படும்  சிலந்தி வகைள் தாவர உணவை மட்டும் உண்பவை.  இவற்றைவிட ஏனைய, இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும்.

அமெரிக்காவில் Pennsylvania மானிலத்தில் Villanova பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Robert L. Curry என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

பாயும் சிலந்திகள்  வகுப்பு வகுப்பைச் சேர்ந்த இவை 5-6மிமீ நீளமானவை. (நம்ம  வீடுகளில்  கூட  இதைப்போல்  பாயும்  சிலந்திகளைப்  பார்த்து இருப்போம்) புரதங்கள் நிறைந்த ant-acacia வகைத் தாவரங்களின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. (ant-acacia என்பது கிட்டத்தட்ட கருவேலம் மரத்தை ஒத்தது) ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலக்கியே வர வேண்டியிருக்கிறது.

 இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக Costa Rica வில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் மீகன் என்பவரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது பேராசிரியர் Robert L. Curry தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Robert L. Curry இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில் ‘தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இது ஒன்றே’ எனத் தெரிவித்தார்.

‘இவை பாயும் சிலந்திகளாதலால் தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை. அவ்வப்போது எறும்புகளால் ant-acacia தாவரங்கள் சூழப்படும் போது மாத்திரம் கீழ் இறங்கிய பின்னர் எறும்புகள் திரும்பிவிட அவையும் மீண்டும் ஏறிவிடுகின்றன. அத்துடன் அவற்றிற்கு போசரணக்குறைபாடு ஏற்படும் இடத்து எறும்புகளில் குடம்பிகளை உடைத்து அதன் சாற்றையும் குடிக்கின்றன.’

ant-acacia  ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை’

இவ்வகை சிலந்திக்கும், எறும்புகளுக்கும் இடையில் ஒரு சிறு போராட்டத்தை கீழே உள்ள வீடியோவில் பார்க்கல்லாம்.

பேராசிரியர் Robert L. Curry அவர்களின் வலைப்பக்கத்திற்குச் செல்ல இங்கு கிளிக்பண்ணவும்