வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி இரத்தினசிங்கம் அவர்கள் 15.09.2010 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சின்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாமுத்து, கமலநாயகி தம்பதிகளின் மருமகளும்,

இரத்தினசிங்கம்(இளைப்பாறிய எழுதுவினைஞர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

மதியழகன்(வல்வெட்டித்துறை), அன்பழகன்(நோர்வே), அறிவழகன்(இலண்டன்), அருளரசி(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சடாட்சரசுந்தரம், மனோன்மணி, ஜெயலட்சுமி  மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சறோஜாதேவி, ஜான்சி, விஜயாம்பாள், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நித்தியா, நிதர்சன், சாரங்கா, தூரிகா, பிருந்தா, கரிகாலன், அச்சயா, ஆருண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 17.09.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்களுக்காக ஊறணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரத்தினசிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94213217838
அன்பழகன் — நோர்வே
தொலைபேசி: +4776948821
அருளரசி — பிரித்தானியா
தொலைபேசி: +442088642814