இந்தோனேசியாவில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் 113 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் அதிகமானோரைக் காணவில்லை.

இந் நிலையில் இன்றும் அந்த நாட்டில் மீண்டும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலும் அந் நாட்டின் ஜாவா பகுதியில் உள்ள மெளன்ட் மெராபி எரிமலை நேற்று வெடித்துச் சிதறியது. இதில் 28 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.

முன்னதாக நேற்று முன் தினம் இரவு இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மென்டாவி தீவுக்கு அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து 10 அடி உயர சுனாமி அலைகள் ஏற்பட்டன.   Read:  In English கடலுக்கடியில் 20.6 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 புள்ளிகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டு பல கடலோர கிராமங்களுக்கு நீர் புகுந்து வீடுகள் தரைமட்டமாயின. இதில் 113 பேர் பலியாகிவிட்டனர். இதில் 15 உடல்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 500 பேரைக் காணவில்லை