நவம்பர் 2010


இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 65 ஆவது பிறந்த தினம்.

 நாளை வெள்ளிக்கிழமை 19ம் திகதி இவர் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பதவிக்கு சத்தியப் பிரமாணம் செய்து கொள்கிறார். இவற்றை நினைவு கூறும் வகையிலேயே இன்று இவரது சொந்த மண்ணில் இத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய துறைமுகத்தல் இன்று நங்கூரமிடப்பட்ட கப்பலில் இருந்து சரக்குகள் ஜனாதிபதி முன்னிலையில் இறக்கப்பட்டன.

இத்துறைமுக நிர்மாணத்துக்கு சீனா இலகு கடனாக 300 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி உள்ளது.இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் பாதையில் அமைந்துள்ள இத் துறைமுகத்தின் மொத்த நிர்மாணப் பணிகளுக்கு 1.5 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பி டப்பட்டுள்ளது.

நேபாளத்திலும் இலங்கையிலும் ரயில்வே திட்டங்களில் கூட முதலீடுகள் செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் சீனா இலங்கைக்கு 1.2 பில்லியன் டொலரை வழங்கியதன் மூலம்,இலங்கைக்கு உதவி வழங்குவதில் ஜப்பானையும் முந்திவிட்டது.

ஒரு தகவலின் நிமித்தம் கீழே உள்ள வீடியோவை பார்த்து வையுங்கள்…

உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

காலை

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைபடலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுபடுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுபாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது. 

மதியம்

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைபிடித்தால் சில வியாதிகளை கட்டுபடுத்த முடியும். காலை உணவுக்கு பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளி போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள். உணவுக்கு பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது. 

இரவு

 இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம். மற்றொரு ஆய்வு, `பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை’ என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.

பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் David பேஸ்புக்கினது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார். 

இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 

‘data mining’எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் . 

இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த திகதியும் இடமும்:- இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம். 

தாயின் கன்னிப் பெயர்:-  பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

விலாசம்:-  நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு. 

விடுமுறைகள்:-  உங்களது விடுமுறைத் திட்டங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது. 

வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள்:- இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது. 

முறையற்ற படங்கள்:- பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம். 

ஒப்புதல்கள்:- இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.

 தொலைபேசி இலக்கம்:- உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது ‘data mining’ திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் “Lost my phone” அல்லது “Need Ur number”.போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம். 

பிள்ளைகளின் பெயர்கள்:-  இதுவும்  அடையாளத்திருடர்களால்  அல்லது  சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது. 

பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம்:- பேஸ்புக்கில்  இத்தகைய  விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.

அந்தக்காலத்தில் அடுப்பு என்றால் ஒரே கரியும், அழுக்குமாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாக அடுப்புத்தான் மிக நவீனமாக, அழகாக வடிவமைக்கப்படுகின்றன.

விறகை வைத்து ஊதி… ஊதி சமைந்த இடத்தில் இருந்து இன்று எவ்வளவு முன்னேற்றம்!

இதோ தற்போது வந்துள்ள நவீன அடுப்பு ஒன்று…

தோற்றம்- 04.20.1928                           மறைவு-11.04.2010

வல்வையை பிறப்பிடமாகவும் Pickering Canada வில் வசித்தவரும் ஆன திரு.சுப்ரமணியம் நாகமுத்து அவர்கள் நவம்பர் 4 ம் திகதி அன்று கனடாவில் காலமானார்.

இவர் காலம் சென்ற தபால் அதிபர் திரு.நாகமுத்து திருமதி.சிவகாமி தம்பதியினரின் அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற சந்திரசேகரம் தங்கரத்தினம் அவர்களின் அன்பு மருமகனும், இந்திராணியின் அன்பு கணவரும்,

பிரியா, சுரேஷ், ஜெயராம், அனுஷா, ஆகியோரின் அன்பு தந்தையும்,

கமலக்கண்ணன், உமா, ரிஷானா, ஹரிஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வாணி, ராகவன், ரிஷி, சரண்யா, சேலன், ஆர்கன், தாரிணி ஆகியோரின் அன்பு பேரனும்,

சந்திரவதனா, கமலவதனா பெரியதம்பி ( கமலா Teacher ) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

ஆன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Ave Est இல் அமைந்துள்ள Highland Funeral Home (Sheppard & Warden ) இல் November 7 ஆம் திகதி 2010 மாலை 5 முதல் 9 மணி வரை பார்வைக்காக வைக்கப்படும்.

November 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் 10 மணி வரை தகனக் கிரியைகள் செய்யப்பட்டு, 256 Kingston Road இல் அமைந்துள்ள St John’s Crematorium த்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர் .

தொடர்புகளுக்கு – 905 239 5563

தீபாவளி வந்து விட்டால் பலகாரம் என்ன செய்வது என்ற திணறலும் கூடவே வந்து நிற்கும்.

நம்முடைய அம்மாக்கள், பாட்டிகள் காலத்தில் எல்லாம் சில நாட்களுக்கு முன்பாகவே பலகாரங்களை தயார் செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள். நாமெல்லாம் குட்டிப் பாவாடைகளை தூக்கி மடித்துக் கொண்டு அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து ஆர்வத்தோடு பார்த்து ரசிப்போம். சுட்டு அடுக்கும்போது நைசாக இரண்டைத் தூக்கிக் கொண்டு ஓடவும் செய்வோம்.

ஆனால் இன்று உட்கார்ந்து ஆற அமர பலகாரம் சுடுவதற்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை, இன்டரஸ்ட்டும் குறைந்து போய் விட்டது.

இருந்தாலும், தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான். இந்த தீபாவளிக்கு படு சுவாரஸ்யமான அதிரசம் செய்து சாப்பிடுங்களேன்.

எப்படி செய்வது என்பதை கீழே பார்க்கலாம்…

2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு.

சரி அடுத்து என்ன செய்ய வேண்டும்?.

அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.

சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.

சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.

அடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும்.

சாப்ட்டுப் பாருங்க, அதிரசம் அட்டகாசமாக இருக்கும்.

7 கப் (செவன் கப்)

இதுவும் ஒரு ஸ்வீட் ஐட்டம்தான். செய்வது மிக மிக சுலபம். செய்முறைக்குப் போகலாமா?

தேவையான பொருட்கள்

1 கப் பால், 1 கப் தேங்காய்த் துறுவல், 1 கப் நெய், 1 கப் கடலை மாவு, 3 கப் சர்க்கரை. (மொத்தம் 7 கப் வருகிறதா, அதனால்தான் இதற்குப் பெயரே 7 கப்.)

அனைத்தையும் சேர்த்து கடாயில் போட்டு கரண்டியால் மெதுவாக கிண்டி வரவும். நன்கு, மைசூர் பாகு போல வந்ததும் அதை இறக்கி, ஒரு தட்டில் நெய் இறக்கி அதில் இந்த பாகை ஊற்றவும்.

சிறிது நேரம் அப்படியே விடுங்கள். பிறகு இறுகியதும், அதை சதுரம் சதுரமாக எடுத்து பரிமாறலாம்.

தேவையானால் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவற்றையும் சிறிது சிறிதாக கட் செய்து அதைத் தூவியும் சாப்பிடலாம், இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.

அதிரசம் பாரம்பரியப் பலகாரம், செவன் கப் திடீர் பலகாரம். பெரிய அளவில் பொருட்கள் தேவைப்படாது, நினைத்தவுடன் செய்யக் கூடியது. இதையும் செய்து தீபாவளியை மேலும் தித்திப்பாக்குங்கள்.