இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 65 ஆவது பிறந்த தினம்.

 நாளை வெள்ளிக்கிழமை 19ம் திகதி இவர் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பதவிக்கு சத்தியப் பிரமாணம் செய்து கொள்கிறார். இவற்றை நினைவு கூறும் வகையிலேயே இன்று இவரது சொந்த மண்ணில் இத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய துறைமுகத்தல் இன்று நங்கூரமிடப்பட்ட கப்பலில் இருந்து சரக்குகள் ஜனாதிபதி முன்னிலையில் இறக்கப்பட்டன.

இத்துறைமுக நிர்மாணத்துக்கு சீனா இலகு கடனாக 300 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி உள்ளது.இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் பாதையில் அமைந்துள்ள இத் துறைமுகத்தின் மொத்த நிர்மாணப் பணிகளுக்கு 1.5 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பி டப்பட்டுள்ளது.

நேபாளத்திலும் இலங்கையிலும் ரயில்வே திட்டங்களில் கூட முதலீடுகள் செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் சீனா இலங்கைக்கு 1.2 பில்லியன் டொலரை வழங்கியதன் மூலம்,இலங்கைக்கு உதவி வழங்குவதில் ஜப்பானையும் முந்திவிட்டது.

ஒரு தகவலின் நிமித்தம் கீழே உள்ள வீடியோவை பார்த்து வையுங்கள்…