சனி, ஜனவரி 1st, 2011


New Year பாடல் ஒன்று, அழகாக Re-Mix செய்யப்பட்டுள்ளது.

80களில் மிகப்பிரபலமான ABBA இசைக்குழுவினரின் Happy New Year பாடல்

நேயர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!!!

ஆதாம் ஏவாள் தோன்றிய காலத்திலிருந்தே காதலும் தோன்றியிருக்க வேண்டும்!

ஆரம்பத்தில் கையிற்கு எட்டிய பூக்களையும், பழங்களையும் தான் காதலுடன் ஒப்பிட்டார்கள்.

போகப்போக நிலா, நட்சத்திரம்  என  அறிவுக்கு எட்டிய தூரம் வரை எட்டிப்பார்த்து இழுத்து வந்தான் கவிஞன்.

உண்மையில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஜடங்களை இனம் கண்டு காதலுக்கு மெருகேற்றிய முறையில் இருந்து வேறுபட்டு, தன்  உடம்பில் உள்ள அணுக்களையே பிளந்து அதிலிருந்து நியூட்ரான், எலெக்ட்ரான்களை உசுப்பேத்தும் இந்த பாடல்  கடந்த ஆண்டில் வந்த பாடல்களில் ஜீவன்மிக்க பாடல் என்று சொன்னால் மிகையாகாது!

இயந்திரத்திற்கே காதல் வந்துவிட்டது! அப்புறமென்ன, காதல் அணுக்கள் உள்ள உங்களுக்கு சொல்லத்தேவையே இல்லை.

உண்மைதான்,  பாடல்  வரிகளைப்போல்  அனைவரினதும்   காதல்  இவ்வாண்டில் உணர்சியுள்ளதாய் அமையுமென நம்பி இந்த ஆண்டின் முதலாவது பதிவு பதிவேற்றப்படுகின்றது.

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை அந்த அணுக்களில் உள்ள நியூட்ரான் எலெக்ட்ரான் மொத்தம் எத்தனை… ? உன்னை நினைத்தால் திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ….

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா
நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்
தீம் தோம் தோம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்
தீம் தோம் தோம் மனதில் சித்தம்

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்

ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம்
பெண்ணே வா வா வா

காதல்காரா…
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே

காதல்காரி…
உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
அன்பே

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி….

…….