அண்மையில் சில பிரபல தமிழ் வலைப்பக்கங்கள் இந்த மரணவெளி பற்றி தவறான கருத்தை அதீத கற்பனையுடன் உண்மைக்குப் புறம்பான வகையில் எழுதியுள்ளன. பல லட்சம்பேர் செற்று செய்திகளை பார்க்கும் இந்தமாதிரி பிரபலமான தமிழ் வலைத்தளங்கள் – “பத்துத்தலை பாம்பு” என்றும், “வைத்தியசாலலயில் நடமாடிய பேய் வீடியோவில் பதிவு” என்றும் இதுபோல் பகுத்தறிவற்ற செய்திகளை வெளியிட்டுள்ளது.

அதுபோல் இந்த மரணவெளி பற்றியும் செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பாலான தமிழர்கள் இந்த மாதிரி செய்திகளை படித்துவிட்டு அதனை அப்படியே நம்பிவிடும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். அறிவூட்டும் நிலையில் உள்ள இம்மாதிரியான மீடியாக்கள், அன்னிலையிலிருந்து மாறி,  மக்களை மந்தைகள் ஆக்கவேண்டாம் என்பது எம் தாழ்மையான கருத்து.

 உண்மையில் கற்கள் நகர்வது உண்மைதான்! ஆனால் அதற்கான காரணம் மர்மம் என்பதல்ல!! வேண்டுமானால் “அதிசயமான” என்னும் செற்பிரயோகத்தை செய்யலாம்.

அமெரிக்காவின் ‘Racetrack Playa” என்னும் பிரதேசம். இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். பார்ப்பதற்கு ஒருவித வெறுமையை தோற்றுவிக்கும் தோற்றத்தை கொண்டது இந்த மரண வெளிப்பிரதேசம்!  இருந்தாலும் சிறு தாவரங்களும், நரி, சிலந்தி, ஓணான், ஆடுகள் போன்ற விலங்கினங்களும் இப் பிரதேசத்தில் வசிக்கின்றன.

 

 

இந்தப் பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன.  இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.

இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும்  சுற்றி  வருவதாக  ஆய்வுகள் கூறுகின்றன. இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது.

இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற் துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே  இந்தப்  பூமியெங்கும் நடமாடுகின்றன. இவை நகர்ந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன. இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கற்கள் மர்மமாக நகர்வதற்கு  அங்குள்ள  களிமண்  தரையும், அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கினனல் ஏற்படும் நீரின் உந்துதலும், பனியின் வழுக்குத்தன்மையும், கூடவே வீசும் காற்றும் காரனம் என்று  ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.  

வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்பதை இது காட்டுகிறது.

எந்தக் கல் வழுக்குவதற்கு உகந்ததாக இருக்கின்றதோ, மற்றும் நீரோட்டத்திற்கும்-காற்றின் வேகத்திற்கும் நகர ஏதுவான உருவத்தில் இருக்கின்றதோ அத்தகைய கற்கள் இலகுவாக நகர்கின்றன.

தற்போது இது ஒரு சுற்றுலாத் தலமாகியுள்ளது இந்த மரணவெளி!