பிப்ரவரி 2011


Torontoவில் வசிக்கும்

திரு.பிரேம்குமார் திருமதி.மதிவதனா தம்பதிகளின்

செல்வப்புதல்வன் அனுஜனுக்கு இன்று பிறந்தநாள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஜன்!

தோற்றம் 07.08.1931 —- மறைவு 20.02.2011

காலம் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைப்பாறிய மாவட்டக் காணி  உத்தியோகத்தர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்  துணைவியார்  பார்வதிப்பிள்ளை  அவர்கள் (20.02.2011) ஞாயிறு  காலை 06.30 மணியளவில் வல்வை ஊறணி வைத்தியசாலையில் காலமானார்.

அன்னார்  மனோகரன் (டென்மார்க்) திருமதி. ஜெகதீஸ்வரி  மதியாபரணம் (தமிழ்நாடு), திருமதி. விநோதினி இராஜேந்திரன் (கனடா), திரு. பிரபாகரன் (தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள்) ஆகியோரின் அன்புத் தாயாராவார்.

அன்னாரின் பூதவுடல் தீருவிலில்  பொது  மக்கள்  அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு வரும் 22.02.2011 அன்று செவ்வாய்க்கிழமை  காலை 11.00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனக்கிரியைகள் நடைபெறும்

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் ; வே. மனோகரன் டென்மார்க்

தொலைபேசி : 0045 75325654

பனி பொழியும் காலங்களில் சாரதிகள் பெரும்பாலும் தமது வாகனத்தின் மெல் உள்ள பனிக்கட்டிகளை துப்பரவு செய்தபின்னர்தான் வாகனத்தை செலுத்த வேண்டும் என்று சட்டமே இருக்கின்றது.

ஆனாலும் சில சாரதிகள் அதனை அசட்டை செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இதனால் சிலவேளைகளில் விபத்துக்களும், ஏன் உயிரிழப்புக்களும் கூட ஏனையவர்களுக்கு ஏற்படும்.

இதோ ஒரு சாரதி தனது Truckன் மீதுள்ள பனிக்கட்டிகளை துப்பரவு செய்யாமல் வாகனத்தை செலுத்துவதும், அந்த பனிக்கட்டிகள் ஒரு பாலத்தில் மீது மோதி பின்னால் வரும் வாகனத்தின் மீது எவ்வாறு மோதுகின்றது என்பதையும் பாருங்கள்.

இந்தப்படம் ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள dashboard camera வினால் எடுக்கப்பட்டது.