தோற்றம் 07.08.1931 —- மறைவு 20.02.2011

காலம் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைப்பாறிய மாவட்டக் காணி  உத்தியோகத்தர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்  துணைவியார்  பார்வதிப்பிள்ளை  அவர்கள் (20.02.2011) ஞாயிறு  காலை 06.30 மணியளவில் வல்வை ஊறணி வைத்தியசாலையில் காலமானார்.

அன்னார்  மனோகரன் (டென்மார்க்) திருமதி. ஜெகதீஸ்வரி  மதியாபரணம் (தமிழ்நாடு), திருமதி. விநோதினி இராஜேந்திரன் (கனடா), திரு. பிரபாகரன் (தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகள்) ஆகியோரின் அன்புத் தாயாராவார்.

அன்னாரின் பூதவுடல் தீருவிலில்  பொது  மக்கள்  அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு வரும் 22.02.2011 அன்று செவ்வாய்க்கிழமை  காலை 11.00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனக்கிரியைகள் நடைபெறும்

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் ; வே. மனோகரன் டென்மார்க்

தொலைபேசி : 0045 75325654