மார்ச் 2011


கனடாவில் முதல் முறையாக, எம் நெயர்கள் சிலர் சேர்ந்து ஒரு Wedding Showவை வரும் சனிக்கிழமை March 26 அன்று MARKHAM EVENT CENTRE (Kennedy Rd/14th ave) வில் நடத்துகின்றனர். இந்த showவில் அனைத்து விதமான தமிழ் மற்றும் தென்னிந்திய கல்யாணத்திற்கு தேவையான தேவைகளை ஒரே கூரையின்கீழ் கொண்டு வருகின்றனர்.

திருமணம் மட்டும் அல்லாது – பிறந்தநாள் விழாவாகட்டும், பூப்புனித நீராட்டுவிழாவாகட்டும், அரங்கேற்றமாகட்டும்,   ஒன்றுகூடலாகட்டும்,  இன்றைய தலைமுறையின் இனிய வைபவங்களாகட்டும் எமக்கு புகைப்படக்காரர்கள், DJ, மண்டப அலங்காரம்,  உணவு வகைகள்,  உடை வகைகள், என்பன சிறப்பாக அமைந்திடவும் இந்த Wedding Show எமக்கு ஒரு நல்ல வழிகாட்டலாய் அமையும்.

அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் நடன நிகழ்சியும் fashion showவும் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. fashion show 1.00 மணிக்கும், 5.00 மணிக்கும் நடைபெறும்.

இப்போது உள்ள  நிலவரப்படி கல்யாணத்திற்கென்று தனியாக எந்த சஞ்சிகையும் இல்லை. OHM Wedding Showவை நடாத்துபவர்கள் முதல் முதலில் தமிழில் 200 பக்கங்களை கொண்ட OHM Wedding Magazineனை பெருமையுடன் வெளியிடுகின்றனர். இந்த OHM Wedding Magazineஐ Markham Mayorரான பெரும் மதிப்பிற்குரிய Frank Scarpitti அவர்களால் வெளியிடப்படுகின்றது என்பது சிறப்பம்சம்!

எம் இளைஞர்களின் இந்த புதிய முயற்சிக்கு ஊக்கம் கொடுப்பது எம் சமுதாய கடமையாகும்.

மேலதிக விபரங்களுக்கு http://www.ohmwedding.com/

  Date: Saturday, March 26
  Time: 11:00am – 7:00pm
  Venue: MARKHAM EVENT CENTRE (Kennedy Rd/14th ave)
95 Duffield Drive
Markham, ON
L6G 0A8

*நுளைவுக்கட்டணம் $10.00 ( OHM Wedding Magazine இலவசம்)

என்னுடைய சிறுவயதில் வந்தபடம் இளமை ஊஞ்சலாடுகிறது (1978ல் வெளியானது). மிகப்பெரிய வெற்றிப்படமான இது. கமல், ரஜினி இருவரும் இருந்ததால் ஊரே ஓடிப்போய் பார்த்தது. ஸ்ரீதர் இயக்கிய படம். பாடல்களுக்காகவே பட்டிதொட்டியெல்லாம் ஓடியது. ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்படும் பாடல்களில் இளமை ஊஞ்சலாடுகிறது பாடல்களும் பல வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டே இருந்தன. காலை பொங்கும் பூங்குனலில் இந்தப்பாடலை கேட்காத நாளே இல்லை எனலாம்.

வாணிஜெயராமும் பாலுவும் சேர்ந்து வாலியின் வரிகளை அழகாகப் பாடியிருப்பார்கள். இசை இளையராஜா. கமலும் ஸ்ரீப்ரியாவும் நடித்திருப்பார்கள்.  ஆட்டுக்காது கொலர் சட்டையின் மேல் பொத்தான்களைத் திறந்துவிட்டுக்கொண்டு பெல்பாட்டம் போட்டுக்கொண்டு ஸ்டைலான மைனர் மாதிரி வருவார் கமல்.

படம் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாவிட்டாலும் இன்னும் மனதில்
ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் பாடல் இது.

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது…

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது…

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால்
இனிப்பதென்ன….

[ஒரே நாள்…]

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன…

[ஒரே நாள்…]

பஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க
பஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க

கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்

இரவும், பகலும், இசை முழங்க….

[ஒரே நாள்…]

ஒரு வீட்டை வாங்கும் முன்னரோ,  விற்கும்  முன்னரோ   தரமான ஆலோசனைகள் எமக்குத்தேவை.

அப்படிப்பட்ட தரமான சேவையினை தருவதில் நிகரற்றவராக விளங்கும் எம் நேயர் ஒருவர் Realtor ஆக கால் பதித்துள்ளார்.

‘விமி ரஞ்சன்’ என்னும் இவர் ஒரு சிறந்த தமிழ் உணர்வாளர், தமிழ் பற்றாளர்.

Home Life/Future Realty Inc. ல் இணைந்துள்ள இவர், எதிர்காலத்தில் இத்துறையில் மேன்மை அடையவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்!

எம் சமூகத்தினரின் நம்பிக்கையான, சினேகபூர்வமான சேவைக்கு இவரை தாராளமாக அழைக்கலாம்!

கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் வேதாக‌ம‌ புத்தகம் த‌மிழில் ஒரு ஐபோன்/ஐபேட் ப‌ய‌ன்பாடாக‌ ஆப்பிள் AppStore-ல் வ‌ந்துள்ள‌து. தேவையுள்ள‌வ‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து நிறுவிக் கொள்ள‌லாம்.
AppStore link to Tamil Bible – Reference iPhone iPad App by Joy Solutions

‘உயிரைப் பணயம்வைத்துக் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வயிறு வளர்க்கும் மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என்பதே இன்றைய உண்மை. நம்மைச் சுற்றி இருக்கும் அத்தனை நாடுகளுமே மனிதாபிமானத்துடன் நடந்துகொள்கின்றன. அதனால்தான், இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வருவதில்லை. வங்க தேசப் பகுதியில் மீன் பிடித்தார்கள் என்று மேற்கு வங்க மீனவர்​களை வங்க தேச ராணுவம் சுட்டது கிடையாது.

ஆனால், தமிழக மீனவர்கள் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து விரட்டப்பட்டு, மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டுக் கொல்லப்​படுகின்றனர். உடனே தமிழக அரசு சார்பில், நஷ்ட ஈடாக 5 லட்சம் வழங்கப்படும். டெல்லிக்கு தந்தி, போன் பறக்கும். இதுவெல்லாம் நடக்கும்போதே, மீண்டும் இலங்கைக் கடற்படை அட்டூழியம் செய்து மீண்டும் மீனவர்களின் உயிரைப் பறிக்கும்…  இது என்ன கன்னித்தீவு தொடர்கதையா, முடிவு இன்றி பல ஆண்டுகளாகத் தொடர்வதற்கு? இத்தனை உயிர்கள் பலியாகி உள்ளதே… இதற்கான காரணங்கள் கேட்டு இலங்கை அரசிடம் இருந்து, இந்திய அரசு பதில் பெற்றுள்ளதா?

‘இந்தியா வல்லரசாகப்போகிறது. உலக அரங்கில் முதலிடம் பெறப்​போகிறது…’ என்று தினமும் வாய் கிழியப் பேசுகிறோம். ஆனால், ஒரு சுண்டைக்காய் நாடு செய்யும் அட்டூழியத்தைக்கூட தட்டிக்கேட்டு, தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்த லட்சணத்தில் சீனாவை விஞ்சுவோம், அமெரிக்காவைத் தாண்டிச் செல்வோம் என்று சொல்வதெல்லாம் எத்தனை வெட்கக்​கேடு. நித்தமும் அப்பாவிகளை அந்நிய நாட்டுக்குப் பலி கொடுத்து, வல்லரசாக மாறி என்ன பயன்?

விகடனில் இப்படி ஒரு கட்டுரை எழுதியிருந்தது. நான் கேட்க நினைத்ததை அப்படியே சொன்னது போல இருந்தது. என்ன நியாயமான கேள்விதானே?

ஒரு விடயம்… இந்தக்கொடுமை எல்லாம் தமிழ் மீனவர்களுக்குத்தானே? வேறு ஏதாவது மொழிக்காரனுக்கு நடந்திருந்தால் இன்று நடப்பதே வேறு. உலகிலேயே முதல் முறையாக காலைச்சாப்பாட்டுக்கும் மதியச்சாப்பாட்டுக்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்தவர் ஆட்சிசெயும் மக்களைப்பற்றி என்ன ரேஞ்சில் கணித்து வைத்திருப்பான் அடுத்தவன்!!!???

இப்போ புரிஞ்சுதா?

எம் நேயர் கலையரசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இன்னாளில் சகல செளபாக்கியங்களும் பெற்று

சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகின்றோம்