என்னுடைய சிறுவயதில் வந்தபடம் இளமை ஊஞ்சலாடுகிறது (1978ல் வெளியானது). மிகப்பெரிய வெற்றிப்படமான இது. கமல், ரஜினி இருவரும் இருந்ததால் ஊரே ஓடிப்போய் பார்த்தது. ஸ்ரீதர் இயக்கிய படம். பாடல்களுக்காகவே பட்டிதொட்டியெல்லாம் ஓடியது. ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்படும் பாடல்களில் இளமை ஊஞ்சலாடுகிறது பாடல்களும் பல வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டே இருந்தன. காலை பொங்கும் பூங்குனலில் இந்தப்பாடலை கேட்காத நாளே இல்லை எனலாம்.

வாணிஜெயராமும் பாலுவும் சேர்ந்து வாலியின் வரிகளை அழகாகப் பாடியிருப்பார்கள். இசை இளையராஜா. கமலும் ஸ்ரீப்ரியாவும் நடித்திருப்பார்கள்.  ஆட்டுக்காது கொலர் சட்டையின் மேல் பொத்தான்களைத் திறந்துவிட்டுக்கொண்டு பெல்பாட்டம் போட்டுக்கொண்டு ஸ்டைலான மைனர் மாதிரி வருவார் கமல்.

படம் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாவிட்டாலும் இன்னும் மனதில்
ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் பாடல் இது.

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது…

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது…

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால்
இனிப்பதென்ன….

[ஒரே நாள்…]

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன…

[ஒரே நாள்…]

பஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க
பஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க

கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்

இரவும், பகலும், இசை முழங்க….

[ஒரே நாள்…]