ஏப்ரல் 2011


வல்வை புளுஸ் 50வது வருடம்(1961-2011)
பொன்விழா மலர் வெளியீடு
முக்கியஅறிவித்தல்

வல்வை புளுஸ் விளையாட்டுக கழகம் இலங்கைத்தீவின் விளையாட்டு அரங்கில் மிக ஆழமாக பெயர் பொறித்த கழகமாகும். இந்த ஆண்டு வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்துக்கு 50வது ஆண்டு நிறைவு வருடமாகும். கடந்த 50வருடங்களாக நீலநிற சீருடை அணிந்த வல்வை புளுஸ் வீரர்கள் தாயகத்திலும், புலத்திலும் ஒரு மிகப்பெரிய விளையாட்டுச் சக்தியாக தங்களை நிரூபித்தவாறு விளையாடி வருகிறார்கள். வல்வெட்டித்துறை என்றால் நினைவுக்குவரும் அதன் அடையாளங்களில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகமும் ஒன்றாகும்.

கடந்த 50வருடங்களாக மூன்று தலைமுறை வீரர்கள் வல்வைபுளுஸ் விளையாட்டுக் கழகத்துக்காக மைதானங்களில் விளையாடிவருகிறார்கள். இந்த 50வருடங்களில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும், இன்னும் உயிர்ப்புடன் இயங்கிவரும் அதன் மனோதிடத்துக்கும் பின்னால் ஏராளம் வல்வைபுளுஸ் வீரர்களின் வரலாறு எழுந்துநிற்கிறது. இந்த 50வது வருடத்துநிறைவின்போது வல்வைபுளுஸ் விளையாட்டுக்கழகம் பற்றிய ஒரு மிகப்பெரிய ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த ஆவணம் என்றென்றும் வல்வையர் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமானதாக விளங்கும்.

இந்த பொன்விழா மலரில், வல்வை புளுஸ் விளையாட்டுக்கழகத்தில் விளையாடிய, விளையாடிக்கொண்டிருக்கின்ற அனைத்து வீரர்களின்

1) விபரங்கள் (புகைப்படத்துடன்)
2) விளையாடிய போட்டிகள்
3) படைத்த சாதனைகள்
4) அரிய புகைப்படங்கள்
5) வல்வையின்ன் வீரர்கள் ஏனைய விளையாட்டுத்துறைகளில் படைத்த சாதனைகள்
6) சிறப்பு கட்டுரைகள்

என்பனவற்றை வல்வையில் இருந்தும் புலம்பெயர்தேசத்தில் வல்வையர்வாழும் அனைத்து தேசங்களில் இருந்தும் பெற்று ஆவணப்படுத்தி ஒரு புத்தகமாக வருகின்ற யூலை மாதமளவில் வெளியிட உள்ளோம். எனவே
அன்புக்குரிய வல்வை மக்களே !!!

நீங்களோ, உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுடைய நண்பர்களோ இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ, வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்திற்காக உதைபந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றி இருந்தால் தயவு செய்து புகைப்படத்துடன் விபரங்களை 30.04.2011 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியவாறு கீழ் வரும் email முகவரிக்கு அனுப்பிவைக்கவும்

Valvai50@hotmail.co.uk

இரண்டு வயது சிறுமியின் ஆற்றலைப்பாருங்கள்…!

உலக வரைபடத்தில் சில நாடுகளை நாமே தேடும் நிலையில் இந்த இரண்டுவயது சிறுமியின் அறிவாற்றலைப்பாருங்கள்.

இன்னும் இங்கேயா இருக்கின்றீர்கள்….? Computerக்கு முன்னால் இருந்து நேரத்தை வீணடிப்பதை விட்டு எழுந்து, உங்கள் சந்ததிகளுக்கு உபயோகமாக எதையாவது கற்பியுங்கள்!!

நன்றி, மீண்டும் உங்கள் வீட்டு குழந்தைகள் அருகில் இல்லாதபோது சந்திப்போம்!

« முன்னைய பக்கம்