என்னை பாதுகாப்பாகத்தான் வைத்திருக்கிறாள் என் மனைவி

ஆனாலும் பயமாக இருக்கிறது – உன் கருவறையில் இல்லை நான்…

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)