ஜூன் 2011


ஒருவர் வித்தியாசமாக வெறும் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு ஒரு மிதக்கும் தீவினை அமைத்து அதில் தனது வீட்டையும் கட்டியிருக்கின்றார். கூடவே மரங்கள், செடிகள் கொண்ட வீட்டுத்தோட்டமும்!

வல்வெட்டித்துறையைப் பிறப்படமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவதாசன் பகீரதியம்மா அவர்கள் 28-06-2011 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேல்(ஆசிரியர்), பொன்னம்மா(வல்வெட்டித்துறை) தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி(Station Master – காங்கேசன்துறை), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவதாசன்(வயலடி வேவியர் காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும், ஞானகுரு(ராசா), புத்தளம், பற்குணம்(சாமி – வல்வெட்டித்துறை), காலஞ்சென்ற இராமராதன் பவளக்கண்டு(மயிலிட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னை மடியில் : 7 – 08-  1932 — ஆண்டவன் அடியில் : 28 – 06 –  2011

காலஞ்சென்ற சுரேந்திரன்(சுரேஸ்), காணாமல்போன தெய்வேந்திரன்(தெய்வா), மாலதி(பாப்பா – கனடா), ரவீந்திரன்(ரவி – ஜேர்மனி) அன்புத் தாயாரும், வசந்தகுமார்(பாபு – கனடா), மகேஷ்வரி(ஜேர்மனி), மல்லிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,

பற்குணம்(வல்வெட்டித்துறை), சிவபாக்கியம்(டென்மார்க்), ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும், பார்கவி(கவி – கனடா), தசாரா(சுபி – கனடா), அக்ஷயா(ஜேர்மனி), தேவானந்தன்(தேவா – ஜேர்மனி), சதீஸ்கண்ணா(சதீஸ் – மாசியப்பிட்டி), டினேஸ்குமார்(டினா – மாசியப்பிட்டி), சுமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-06-2011 வியாழக்கிழமை அன்று கொழும்பு பொரலை ஜெயவர்த்தனா மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பொரலை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவீந்திரன்(மகன்) ஜெர்மனி தொலைபேசி: +4917637718291 செல்லிடப்பேசி: +497645917694

மாலதி(மகள்) கனடா செல்லிடப்பேசி: +15147488555

எமது நேயர்

கேதீஸ்வரன் – கிருஜாந்தினி

தம்பதிகளின் செல்வப்புதல்வன் ‘தேஷான்’ க்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நகரில் இடம் பெற்ற எம்..வி. வீடியோ இசை விருது வழங்கும் வைபவத்திற்கு இறைச்சியிலான ஆடை அணிகலன்களை அணிந்து வந்து உலகப் பிரபல பொப் இசைப் பாடகி லேடி ககா பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தினார்.

இவ்விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட 15 விருதுகளில் 8 விருதுகளை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லேடி ககாவின் “பாட் ரொமான்ஸ்’ வீடியோ பாடல் தொகுதியானது மிகச் சிறந்த நடன வீடியோ, மிகச் சிறந்த பெண் கலைஞரின் வீடியோ, மிகச் சிறந்த பொப் இசை வீடியோ, மிகச் சிறந்த நடன அசைவு வீடியோ, மிகச் சிறந்த இயக்கம், மிகச் சிறந்த பதிப்பாக்கம், மிகச் சிறந்த வீடியோ என்ப வற்றுக்கான விருதுகளை வென்றிருந்தது.

திருமதி ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி
பிறப்பு : 3 செப்ரெம்பர் 1930 — இறப்பு : 13 யூன் 2011

   மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவடிவேல், சின்னமணி தம்பதியரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இரத்தினவடிவேல் தம்பதியரின் மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன் அவர்களின் துணைவியாரும்,

சிவராணி, செல்வராணி, கமலம், நவமணி, ஜெயமணி, சற்றனம், தரணம், பராபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விஜயலட்சுமி, காலஞ்சென்ற விஸ்வநாதன் மற்றும் ஸ்ரீபத்மநாதன், ராஜலக்ஷ்மி, ஸ்ரீசண்முகநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சற்குணலிங்கம், தெய்வேந்திரராணி, இராமகிருஷ்ணன், கமலகுமாரி, மங்கையர்க்கரசி ஆகியோரின் அருமை மாமியாரும்,

ஜெயசண்முகலிங்கம், தெய்வேந்திரலிங்கம், சுரேஷ்குமார், மதிவண்ணன், ராஜாராம், பார்த்திபன், ஜெயசந்திரஹாசன், ஸ்ரீகணேஷ், ஸ்ரீகுமரேஷ், பிரகாஷ், ரமாஸ்ராம், ஸ்ரீகைலாஷ், அபிலாஷா, மதிவதனி, சிந்து, சார்மினி, தர்சினி, வாசுகி, ரஜிதா, ரஞ்சிதா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

லக்ஷ்மி, சரண்யா, விஜித், லக்சீனா, ஜெயந்த், கிருஷாந்த், ஹரேஷ், மதுசன், ருஷான், நிலக்க்ஷா, சக்தி லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர் 
 
தொடர்புகளுக்கு
இராமகிருஷ்ணன்  +442085542980 செல்லிடப்பேசி: +447984674033
ராஜாராம் +447525132815
சுரேஷ்குமார் +447852953369

Watch….Practice….. Learn …..almost anything—for free.

Algebra,Arithmetic,Banking and Money, Biology, Chemistry, Cosmology and Astronomy, Calculus, Organic Chemistry, Physics, Statistics, Trigonometry and More…

அல்ஜீப்ரா தொடங்கி அரித்மேட்டிக், பிசிக்ஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ் என பல உருப்படியான காரியங்களை இலவசமாக கற்றுக்கொள்ள educational videos க்கள் இங்கு  கொட்டிக் கிடக்கின்றன.

முன்னேற துடிக்கும் இளசுகள் இதையும் முயன்று பார்க்கலாம்.

http://www.khanacademy.org/

அடுத்த பக்கம் »