வெள்ளி, ஜூலை 1st, 2011


புலம்பெயர் தமிழ் சமூகம் பெருமளவில் ஒன்றுகூடுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகின்ற கோடைகால விளையாட்டு விழாக்கள் மேற்குலக நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் அமெரிகாவின் நியூ யோர்க் நகரில் தமிழர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த சனி (யூன்25) அன்று இடம்பெற்றுள்ளன.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன.
குறிப்பாக தாயக உணர்வுகளை மீட்கின்ற வகையிலான தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தன.

சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு தமிழீழ தேசியக் கொடியை ஏற்றிய நா.த.அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் விளையாட்டுப் போட்டிகள் உணர்த்தி நிற்கின்ற ஒன்றுமையையும் ஒன்றுபடுதலும் எமது விடுதலையை வென்றெடுக்க எப்போதும் அவசியமென வலயுறுத்தி உரையாற்றினார்.