திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளில் இருந்து கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் உள்ளி்ட்டவற்றை வைத்து என்ன செய்வது என்று யோசனைகள் வர ஆரம்பித்துவிட்டன.

திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள அறைகளில் இருந்து இதுவரை ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள், சிலைகள், காசுகள் என பல விலைமதிப்பற்றவை எடுக்கப்பட்டுள்ளன. இத்தனை நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் தான் பணக்கார கோவில் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால் திருப்பதி கோவிலை பின்னுக்குத் தள்ளிவிட்டு பத்பநாபசுவாமி கோவில் பணக்கார கோவிலாகிவிட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே பணக்கார சாமியாகவும் பத்மநாபசுவாமி உருவெடுத்துள்ளார்.

பத்பநாபசுவாமி கோவில் நகைகள் மதிப்பு விப்ரோ நிறுவனத்தி்ன் சந்தை முதலீடான ரூ. 1.04 லட்சம் கோடிக்கு இணையானது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பில் மூன்றில் பங்கு உள்ளது.

பாஸ்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக கூறியுள்ள 2 பில்லியன் டாலரை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தங்கக் குவியல் கோவிலுக்கா, கோவில் நிர்வாகத்திற்கா, மாநில அரசுக்கா அல்லது மத்திய அரசுக்கா என்று இனிமேல் போராட்டம்தான்.

 இவ்வளவு தங்கத்தை வைத்து என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பத்பநாபசுவாமி கோவில் வலைப்பக்கம் : http://www.sreepadmanabhaswamytemple.com/