வெள்ளி, ஜூலை 22nd, 2011


வடக்குக் கிழக்கில் நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இன்று பேசப்படுகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொணடிருக்கின்றது.

பல இலட்சக் கணக்கான தமிழ் உறவுகளை வயது, பால் வேறுபாடின்றிக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்து, எமது வாழ்விடங்களை நாசம் செய்து பல இலட்சம் மக்களை ஏதிலிகளாக்கி புலம் பெயரச்செய்தும், பல்லாயிரம் பெண்களை விதவைகளாக்கியும், பலரை மானபங்கப்படுத்தியும் எமது மண்ணிலே வெறியாட்டம் நடத்தி, ஈழத் தமிழரின் துயரத்தில் சிங்கள தேசமெங்கும் வெற்றி விழாக் கொண்டாடியவர்கள் இப்பொழுது யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் முகாமிட்டு வாக்குகளைக கபளீகரம் செய்வதற்குக் காத்திருக்கின்றனர்.

சிங்கள தேசத்திற்கும், தமிழீழ தேசத்திற்கும் இடையிலான மாபெரும் போராகவே இது நோக்கப்படுகின்றது. கொழும்பில் நாட்டை நிர்வகித்து சமமாக நல்லாட்சி செய்யவேண்டியவர்கள், சிங்களப்படைகளுடனும், பல்லாயிரம் சிங்களவர்களுடனும் எமது மண்ணில் வந்து முகாமிட்டு எமது மக்களை இன்னுமொரு போருக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வெட்கம் கெட்டவிடயம், அற்ப சலுகைகளுக்காக எமது மக்களின் தன்மானத்தை விலை பேசுவதற்காக ஜனாதிபதி தொடக்கம், அமைச்சர்கள், சிற்றமைச்சர்கள், ஆளுனர் என படையெடுத்து வந்திருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தை நிலைநாட்டுவதற்காக உறுதியுடன் எமது மக்கள் இருக்கின்றார்கள். வாழ்வா சாவா என்ற நிலையில் சிங்கள தேசத்தின் முற்றுகையை முறியடிப்பதற்கு எமது மக்கள் தயாராகிவிட்டார்கள்.

நேற்று, இன்று, நாளை என எமது மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றி வாக்குகளைப் பறிப்பதற்காக வந்திருக்கும் கொலைகார அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவதற்காக எமது உறவுகள் களத்தில் இறங்கியுள்ள நிலையில் எமது புலம் பெயர் உறவுகள் ஈழத்தில் உள்ள உறவுகளின் வெற்றிக்குப் பலம் சேர்க்கவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உலகத் தமிழர்களின் வெற்றி. அந்த வெற்றி எமது தேசத்தினதும் மக்களினதும் எதிர்காலத்தை மாற்றியமைக்கும். இதற்கு உலகத் தமிழ் உறவுகள் தாயகத்தில் வாழ்கின்ற தமது உறவுகளுக்குத் தகவல்களை உடனடியாக அனுப்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு அனைவரும் சென்று நேரத்துடன் வாக்களிக்கச் செல்ல உற்சாகப்படுத்தவேண்டும்.

ஒரு நூறு மீன்பிடி வலைகளையும், துவிச்சக்கர வண்டிகளையும், நீர் இறைக்கும் இயந்திரங்களையும் கொடுத்து பல லட்சம் மக்களை ஏமாற்றி சர்வதேசத்திற்குத் தமது போர்க்குற்றங்களை மறைத்து தமிழ் மக்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து விட்டனர் என்று காட்டுவதற்கான கபட நாடகத்தை முறியடித்து, தமிழ் தேசிய உணர்வு இன்னும் சாகவில்லை என்பதை உலகுக்குக் காட்டவும்,

தாயகத்தை மீட்டெடுத்து சுதந்திரமான நாட்டில் தன்மானத்துடன் வாழ இந்தத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கும், ஆற்றலுள்ள தலைமைத்துவத்தையும் தமிழ் தேசிய உணர்வுள்ளவர்களையும், ஒரே கொள்கையுடன் செயற்படும் ஆற்றல் மிக்கவர்களையும் தெரிவு செய்யும் வகையில் அவர்களது விருப்பு இலக்கத்திற்கும் வாக்களித்து நூறு வீதமான வாக்குகளும் தமிழ் தேசியத்தை நோக்கியே அளிக்கப்படவேண்டும்.

எனது அன்பான உறவுகளே விரைந்த செயற்பட்டு குறுந் தகவல்கள் மூலமாகவோ, தொலைபேசி தொடர்பாடல் மூலமோ, மின்னஞ்கல் மூலமோ வீட்டுச் சின்னத்திறகு வாக்களிக்கத் தூணடுங்கள்.

யூலை 24 ம் திகதி வடக்குக் கிழக்கின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது என்ற அந்தச் செய்தி சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவேண்டும்.

அன்புடன்
உங்கள்
வல்வை.ந.அனந்தராஜ்
வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்பாளர்

 

சூரியன்தான் இப்பூவுலகில் உயில் வாழும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. பல் ஆயிரம் ஆண்டுகளாக சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை நம் முன்னோர்கள் ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோகா முறைகளுள் ஒன்றாக கருதப்படுவதால் இன்றும் பலர் அதனை கற்றுக்கொள்கின்றனர்.

சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரியமில வாயுவையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.

சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் மறைகின்றது. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்ககுவதில்லை என்பதால் உடல் உறுதியடைகின்றது.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும். நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.

உடல் பொலிவடையும்:

சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம்.

தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.

தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது. சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை. பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.

சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்க கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையான கைவரும். சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம். அரங்கிலும் செய்யலாம்.

அறையிலும் செய்யலாம். காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும். தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும்.

இனி இவ் ஆசனத்தை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தோர் நகரில் அமைந்துள்ள பட்டல் பாணி நீர்வீழ்ச்சியில் அள்ளுண்டு 3 பேர் உயிரிழந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நீர்வீழ்ச்சியானது அப்பிரதேசத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்விடத்திற்கு  சுற்றுலா  சென்றவர்களில்  5  பேர் திடீரென பெருக்கெடுத்த நீர் ஓட்டத்தால் அந்நீர்வீழ்ச்சியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்தனர்.

இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவ்விடத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி  எழுப்பப்பட்டு அங்கு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எனினும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அணையில் ஏற்பட்ட நீர்க் கசிவே இவ்வாறு திடீரென நீர் பெருக்கெடுத்தமைக்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தாமையே இதற்கான முக்கிய காரணமென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது மொத்தமாக ஐந்து பேர் அடித்துச் செல்லப்பட்டபோதும் அவர்களில் 2 பேர் பின்னர் காப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.