ஓகஸ்ட் 2011


3D தொலைக்காட்சி…

இப்படி கண்ணாடியைச் சூடிக்கொண்டு எவ்வளவு நேரம் தான் ஒருவர் நடுஅறையில் அமர்ந்திருக்க முடியும். சாத்தியமில்லையென்றே தோன்றிற்று. HTC Evo 3D செல்போன், 3டி பற்றிய எண்ணங்களையே முழுதாக மாற்றிக்கொள்ள வைத்தது. வெறும் கண்ணால் 3டி படங்களை, 3டி வீடியோ மூவீக்களை செல்போன் திரையில் பார்ப்பது மட்டுமல்லாமல் இந்த கேமராவால் 3டி போட்டோக்கள், 3டி வீடியோக்களும் எடுக்க முடிவது கூடுதல் அதிசயம்.

இப்போது புரிகின்றது 3டி புகுந்து இன்னொரு ரவுண்டு வந்து நம் வீட்டு நடுஅறை டிவிகளையெல்லாம் ஒருவழி செய்துவிடும் என்று. இப்போதைக்கு ஒருசில 3டி சேனல்களே உள்ளன. அதுவும் போட்டதையே திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் போகின்ற போக்கில் எல்லாருமே சீக்கிரத்தில் மாறிவிடுவார்கள். அப்போது இப்போது உசத்தியாய் பேசப்படும் HD படங்கள் கூட நமக்கு அந்தக்கால பிளாக் அண்ட் ஒயிட் படம் பார்ப்பது போன்ற பிரம்மையைத்தரும்.

3டி பற்றி சில கொசுறு தகவல்கள்:

•யூடியூப் ஏற்கனவே 3டி வீடியோக்களை கொண்டுள்ளன.
•வலதுகண்பார்வை,இடதுகண் பார்வையென இரு பார்வை கேமராக்கள் கொண்டு 3டி படங்கள் எடுக்கப்படுகின்றன.ஆதலால் இப்போது வரும் 3டி செல்போன்கள் எல்லாம் மூன்று கேமராக்களோடு வருகின்றன.
•3டி படங்கள் MPO எனப்படும் multi-picture file format அல்லது JPS எனப்படும் stereo JPEG ஃபார்மேட்டில் இருக்கும்.

அடுத்ததாக 4டி எனச்சொல்லி தியேட்டரில் நாற்காலிகள் படக்காட்சிகளுக்கேற்ப அதிரவும், திரைப்படங்களில் மழைபெய்தால் தியேட்டரிலும் சாரலடிக்கவும், திரையில் புயல்வீசினால் நிஜமாகவே தியேட்டரில் மின்விசிறிகளைக் கொண்டு காற்றுவீசவும், திரையில் தோன்றுவதற்கேற்ப தியேட்டரிலும் நறுமணங்களை (Aroma-scope)வீசவும், புகை எழும்புதல், நீர்க்குமிழிகளை பறக்கவிடுதல் எனப் பல யுத்திகளை செய்ய முயன்றுகொண்டு இருக்கின்றார்கள். அப்படியாக இந்த ஆண்டு 4டியாக வெளியாகவிருக்கும் படம் Spy Kids.

HTC Evo 3D தவிர LG யும் Optimus 3D என 3டி செல்போன் வெளியிட்டுள்ளது. செப்டம்பரில் அடுத்த ஐபோன் மாடல் வரவிருக்கின்றது. அதில் என்ன மாதிரி என்று

நீங்கள் பார்க்க ரசிக்க சில வீடியோகிராப் படங்கள் இங்கே.

 

 

தேங்காய்ப் பாலுக்கு அடுத்ததாக மிக எளிமையான பாயசமாக பருப்புப் பாயசத்தைத் தான் நினைக்கிறேன். அதிகம் நெய் எல்லாம் சேர்க்காமல் செய்தால் விரத நாள்களில் கூட ஒரு இடைக்கால உணவாக சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – 1 கப்
பால் – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
நெய்
ஏலக்காய்
பச்சைக் கற்பூரம்

paruppu paayasam

செய்முறை:

  • வாணலியில் சிறிது நெய் விட்டு பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் வேகவைக்கவும்.
  • இலைப் பதமாக வெந்ததும் வெல்லம் சேர்த்து நிதானமான தீயில் வைக்கவும்.
  • வெல்லம் கரைந்து பச்சை வாசனை போனதும், பால் சேர்க்கவும்.
  • 2 டீஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி பொரித்துச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.

* குக்கரிலும் வேக வைக்கலாம். ஆனால் அதிகம் வெந்து குழைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பாயசம், பருப்பு கீர் மாதிரி ஆகிவிடலாம்.

* அதிகம் பால் விட்டாலும் சுவையாக இருக்கும். ஆனால் பால் அதிகம் சேர்க்காமல் பருப்பின் சுவையும் மணமும் மேலோங்கி இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது.

* கொஞ்சம் நீர்க்க செய்து டம்ளரில் குடிக்கலாம். அல்லது ஓரளவு கெட்டியாக சேர்ந்தாற்போல் செய்து ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடலாம். நம் விருப்பம் தான்.

* ஆறியதும் அதிகமாக இறுகும்.

நன்றி ஜெயஸ்ரீ

தெய்வாதீனமாக உயிர் தப்பியவர் ஒருவர், அவரது நண்பன் ஆகியோர் தம் புது மோட்டார் சைக்கிளை படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது அவ்விடத்தில் நடந்த எதிர்பாராத விபத்தை தத்தூருபமாய் படம் பிடித்துள்ளனர். இதில் மயிரிழையில் நபர் உயிர்தப்பியுள்ளார்.

எம் இனிய நேயர், நண்பர்

திரு.ச. ஜெயசீலன் அவர்களுக்கு

இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்!

வல்வெட்டித்துறை பட்டினசபை, நகரசபை

Valvettiturai Town Council

பதினோராவது தலைவராக ந.அனந்தராஜ் பதவி ஏற்றுள்ளார்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 ந.நகுலசிகாமணி,
வரலாற்று ஆவணக்காப்பகம், கனடா
 www.vvthistory.com

திரு.ந.அனந்தராஜ் அவர்கள் வல்வெட்டித்துறையின் பதினோராவது நகரசபைத் தலைவராக யாழ்நகரில் நடந்த பதவியேற்பு வைபவத்தில் தமிழ்த் தேசியஅமைப்பின் தலைவர் திரு.இரா..சம்பந்தன் அவர்கள் முந்நிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

வல்வெட்டித்துறை யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 16மைல் தூரத்திலும், கிழக்கே 9மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5மைல் தூரத்திலும், தென்இந்தியா விலிருந்து தெற்கே கடல்மார்க்கமாக 30மைல் தூரத்திலுள்ள ஓர் துறைமுகப்பட்டினம். இதன் பரப்பு ஒன்றேமுக்கால் சதுரமைல். 1946ம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசனமதிப்பின்படி 5035 இந்துசமயத்தவர்களும் 85 கிறிஸ்தவசமயத்தவர்களும்  இருந்துள்ளார்கள்.

 1947ம் ஆண்டுமுதல் பட்டினசபையாக இயங்கி வந்த ஆதி வல்வை இன்று நகர சபையாக இயங்குகிறது. பட்டினசபைக்காலத்தில் எல்லைகள் வகுக்கப்பட்டு இவைகள் ஐந்து வட்டாரங்களாகப் பிரித்துக் கோயில் வட்டாரம், பஜார் வட்டாரம், ரேகுவட்டாரம், வாடிவட்டாரம், வல்வெட்டி வட்டாரம் ஆகிய பெயர்களில் வாக்காளர் தேர்தல் மூலமாக தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கள் பட்டினசபை வேலைகளைக் கவனித்து வந்தார்கள். இச்சபையின் முக்கிய பணிகள் சுகாதாரம், சந்தை, தெருக்கள், ஒழுங்கைகள் பரிபாலித் தல், மின்சாரம் முதலியனவாகும். வல்வைக்கு ஆரம்பகாலத்திலிருந்து மின்சாரம் பருத்தித்துறை நகரசபையின் இயந்திரம் மூலம் வழங்கிவந்தனர். பின்னர் இரண்டு பாரிய இயந்தி ரங்களைச் சொந்தமாக வாங்கி நவீனசந்தையாக மாற்றிய பழையசந்தையை ஓர் புறத்தில் இயக்குவித்து மின்சாரத்தை வழங்கினார்கள். பின்னர் 1971ம் ஆண்டளவில் “லக்சபானா” மின்சாரம் தென்பகுதியிலிருந்து யாழ்மாவட்டத்திற்கு வந்தபோது வல்வெட்டித்துறைக்கு மின்சாரத்தை அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரை ரத்தினம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 வல்வைப் பட்டினசபையின் தலைவர்களாக இருந்து அளப்பெரிய சேவைகளை ஆற்றியவர்களின் பெயர்களும் ஆண்டுகளும்.

திரு.சபாரத்தினம் 1961ம் ஆண்டு சத்தியாக்கிரக தமிழினப் போராட்டப் பங்களிப்பின்போது தடுப்புக்காவலில் இருந்தபோது பதவியில் இருந்தார்

 

திரு.ஐ.திருப்பதி

 திரு.ஐ.திருப்பதி   1947
(இரண்டு தடவைகள்)

திரு.ச.நடனசிகாமணி

திரு.ச.நடனசிகாமணி   1953

திரு.சோ.சுந்தரலிங்கம்

திரு.சோ.சுந்தரலிங்கம்   1956

திரு.இ.அப்புக்குட்டியாபிள்ளை

திரு.இ.அப்புக்குட்டியாபிள்ளை  1959

திரு.க.சபாரத்தினம்

திரு.க.சபாரத்தினம்   1960(இரண்டுதடவைகள்)

திரு.க.சு.கதிரிப்பிள்ளை

திரு.க.சு.கதிரிப்பிள்ளை ஒரு வருடம்

திரு.மு.இரத்தினவடிவேல்

திரு.வி.இரத்தினவடிவேல்  1968

திரு.து.நவரத்தினம்

திரு.ச.ஞானமூர்த்தி

 

திரு.க.சிவாஜிலிங்கம்

 

திரு.ந.அனந்தராஜ்

 

திரு.க.துரைரத்தினம்

 
 
(திரு.ஆர்.பிரேமதாஸ் (உதவி உள்ளூராட்சி அமைச்சர்),   அப்போது சிதம்பரா சாரணராக இருந்த திரு.பா.நடேசன், திரு.க.துரைரத்தினம் ஆகியோர் வல்வையில்)
 
பட்டினசபை வட்டாரங்கள் சிறிய மாற்றங்களுடன் ஆறு வட்டாரங்களாகவும், புதி தாகச் சேர்க்கப்பட்ட பொலிகண்டி ஒரு வட்டாரமாகவும், தொண்டமானாறு ஒரு வட்டார மாகவும், மயிலியதனை ஒரு வட்டாரமாகவும் ஒன்பது அங்கத்தவர்கள் கொண்ட சபை யாயிற்று நகரசபையின் தரத்தைப் பெற்றபின் நடைபெற்ற முதலாவது தேர்தலில் திரு. து.நவரத்தினம் அவர்கள் முதலாவது நகரமுதல்வரானார். இவர் சிறந்தபேச்சாளரும் இடது சாரிக் கொள்கைகளை ஆதரித்தவரும் சமசமாஜக்கட்சித் தலைவர் என்.எம்.பெரேராவின் நண்பருமாவார். 1979ம் ஆண்டு முதல்முதல் கட்சி அடிப்படையில் நடைபெற்ற நகரசபைத் தேர் தலில் திரு.ச.ஞானமூர்த்தி (சமாதான நீதிபதி) அவர்களைக் தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக்கூட்டணி நகரசபையை கைப்பற்றியது. அப்போது பாராளுமன்ற உறுப் பினர் திரு.த.ராஜலிங்கம் அவர்களின் உதவியாலும் நகரசபை அலுவலகக் கட்டிடம் காணி கொள்வனவு, நவீனசந்தை, குழாய் நன்நீர் திட்டம் ஜேர்மன் நாட்டு  G.T.Z நிறுவனத்தின் உதவியாலும், தொண்டமானாறு பொலிகண்டி கம்பர்மலை ஆகிய கிராமங்களுக்கு மின் சாரம் வழங்கல் ஆகிய வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டன.

தனித்தமிழ்நாடு கோரும் எவரும் அரசமைப்புக்கு விசுவாசம் தெரிவித்து சத்தியப் பிரமாணம் செய்யமுடியாத நிலையில், தமிழர்விடுதலைக் கூட்டணி சார்பில் பதவிவகித்த திரு.ஞானமூர்த்தி அவர்கள் பதவி துறந்தார். அவரது பதிவிக்காலத்தில் 1979 – 1983ல் நகரசபை புதுப் பொலிவு பெற்றது. அதன்பின்னர் 1998ம் ஆண்டுவரை நகரசபை நிர்வாகம் விசேட ஆணையாளர்களது (செயலாளர்களது) நிர்வாகம் நடைபெற்றது. மீண்டும் 1998ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது திரு.க.சிவாஜிலிங்கம் தலைவராக தெரிவுசெய்யப்பட் டார். நீண்ட போராட்டத்தின் காரணமாக அழிவுற்ற நகரசபையின் மீன்சந்தை, நவீனசந்தை, சனசமூகசேவா நிலையம் ஆகியவற்றை திருத்தியும் மீள மாடிக்கட்டிடமாக அமைக்க நடவடிக்கை எடுத்தார். 2001 வரை பதவிவகித்த சிவாஜிலிங்கம் மேலும் பலபணிகளை திறம்பட ஆற்றியிருந்தார். மீண்டும் அரசியல் சூழ்நிலை காரணமாக விசேட ஆணையாளர்களது நிர்வாகம் நடைபெற்றது.   

23-07-2011 கட்சி அடிப்படையிலும் விருப்பு வாக்கு முறையிலும் நடைபெற்ற தேர் தலில் முதலாவது தெரிவாக திரு.ந.அனந்தராஜ் அவருக்கும் மற்றும் உபதலைவர் க.சிவாஜிலிங்கம், மற்றும் தமிழ்த்தேசிய அமைப்பில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கும் கனடா வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தின் வாழ்த்துக்கள்.

 

வல்வெட்டித்துறை பதினோராவது நகரசபைத் தலைவராக
திரு.நடராஜா அனந்தராஜ் அவர்கள் 20-08-1011 அன்று பதவி ஏற்றார்.

 திரு.ந.அனந்தராஜ் அவர்கள் வல்வெட்டித்துறையின் பதினோராவது நகரசபைத் தலைவராக யாழ்நகரில் நடந்த பதவியேற்பு வைபவத்தில் தமிழ்த் தேசியஅமைப்பின் தலைவர் திரு.இரா..சம்பந்தன் அவர்கள் முந்நிலையில் இன்று 20-08-1011 பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

 திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். முன் நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரைரத்தினம், திரு.த.இராசலிங்கம் ஆகியோரின் வெற்றிக்கு துணைநின்றவர். இவரை ஆசிரியராக, உடுப்பிட்டி அமெரிக்கன்மிஷன் கல்லூரி அதிபராக, வடகிழக்குமாகாண உதவிக்கல்விப் பணிப்பாளராக ஈழத்தின் படைப்பு இலக் கியவாதியாக, யாழ் பல்கலைக்கழக கலைமாமணி (B.A) சிறப்புப்பட்டதாரியாக, முதுமா னிப்பட்டதாரியாக (M.A), கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வெகுஜனத் தொடர்புசாதன பட்டப்படிப்பின் டிப்ளோமா பட்டதாரியாகவும், கிழக்குப்பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரை யாளராக, இவற்றிற்கு மேலாக தாயகத்தின் போர்க்கால வன்முறைகளை ஆவணப்படுத் துவதில் அக்கறைகொண்ட சமூகவியலாளராக, செல்வச்சந்நிதியானின் பூத் தொண்டனாக பல்வேறு பரிமாணங்களில் மிளிர்கின்றவர்.

அனந்தராஜ் அவர்கள் 1989 ஆகஸ்ட் 2,3,4ம் திகதிகளில் வல்வையில் இந்திய இராணுவம் படுகொலை தொடர்பான வல்வைப் படுகொலையை மிகவும் துல்லியமாக உலகின் கவனத்தைப் பெறும்வகையில் “இந்திய மையலாய்” என்ற பெயரில் ஆங்கிலத் திலும் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தவர். இந்நூல் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கும் ஒரு காரணமாக இருந்தது. நெருக்கடியான கட்டத்தில் பிரஜைகள் குழுவில் இருந்தும் சேவையாற்றியவர்.

1995ம் ஆண்டு செப்டெம்பர் 12ம் திகதி வடமராட்சி நாகர்கோயில் மகாவித்தியால யத்தின் மீது சிறிலங்கா விமானப்படை குண்டுவீச்சில் பலமாணவர்களை பலி எடுத்தது. இந்த வரலாற்றை “உதிரம் உறைந்த மண்” என்ற நூலின் மூலம் ஆவணப்படுத்தியதோடு மேலும் பதினொரு நூல்களுக்கும் சொந்தக்காரர். அனந்தராஜ் அவர்களின் தந்தையான நடராஜா கல்விக்கந்தோரில் அதிகாரியாக பணியாற்றிய பெருமைக்குரியவர். முன்நாள் வல்வைப் பட்டினசபைத் தலைவர் ச.நடனசிகாமணியின் மருமகனும், கனடா வல்வை வரலாற்று ஆவணக்காப்பக உரிமையாளர் ந.நகுலசிகாமணி அவர்களின் மைத்துனரும் ஆவார்.

ந.நகுலசிகாமணி
வரலாற்று ஆவணக்காப்பகம்
கனடா        

 

அதிசயமான ஒரு மன்மத தக்காளி Guelphல் விளைந்துள்ளது.  திரு.திருமதி ராஜா-நந்தினி அவர்களின் வீடுத் தோட்டத்தில்  விளைந்த  இந்த  மன்மத  தக்காளி  உங்கள் பார்வைக்காக இதோ.

அடுத்த பக்கம் »