வல்வெட்டித்துறை பட்டினசபை, நகரசபை

Valvettiturai Town Council

பதினோராவது தலைவராக ந.அனந்தராஜ் பதவி ஏற்றுள்ளார்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 ந.நகுலசிகாமணி,
வரலாற்று ஆவணக்காப்பகம், கனடா
 www.vvthistory.com

திரு.ந.அனந்தராஜ் அவர்கள் வல்வெட்டித்துறையின் பதினோராவது நகரசபைத் தலைவராக யாழ்நகரில் நடந்த பதவியேற்பு வைபவத்தில் தமிழ்த் தேசியஅமைப்பின் தலைவர் திரு.இரா..சம்பந்தன் அவர்கள் முந்நிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

வல்வெட்டித்துறை யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 16மைல் தூரத்திலும், கிழக்கே 9மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5மைல் தூரத்திலும், தென்இந்தியா விலிருந்து தெற்கே கடல்மார்க்கமாக 30மைல் தூரத்திலுள்ள ஓர் துறைமுகப்பட்டினம். இதன் பரப்பு ஒன்றேமுக்கால் சதுரமைல். 1946ம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசனமதிப்பின்படி 5035 இந்துசமயத்தவர்களும் 85 கிறிஸ்தவசமயத்தவர்களும்  இருந்துள்ளார்கள்.

 1947ம் ஆண்டுமுதல் பட்டினசபையாக இயங்கி வந்த ஆதி வல்வை இன்று நகர சபையாக இயங்குகிறது. பட்டினசபைக்காலத்தில் எல்லைகள் வகுக்கப்பட்டு இவைகள் ஐந்து வட்டாரங்களாகப் பிரித்துக் கோயில் வட்டாரம், பஜார் வட்டாரம், ரேகுவட்டாரம், வாடிவட்டாரம், வல்வெட்டி வட்டாரம் ஆகிய பெயர்களில் வாக்காளர் தேர்தல் மூலமாக தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கள் பட்டினசபை வேலைகளைக் கவனித்து வந்தார்கள். இச்சபையின் முக்கிய பணிகள் சுகாதாரம், சந்தை, தெருக்கள், ஒழுங்கைகள் பரிபாலித் தல், மின்சாரம் முதலியனவாகும். வல்வைக்கு ஆரம்பகாலத்திலிருந்து மின்சாரம் பருத்தித்துறை நகரசபையின் இயந்திரம் மூலம் வழங்கிவந்தனர். பின்னர் இரண்டு பாரிய இயந்தி ரங்களைச் சொந்தமாக வாங்கி நவீனசந்தையாக மாற்றிய பழையசந்தையை ஓர் புறத்தில் இயக்குவித்து மின்சாரத்தை வழங்கினார்கள். பின்னர் 1971ம் ஆண்டளவில் “லக்சபானா” மின்சாரம் தென்பகுதியிலிருந்து யாழ்மாவட்டத்திற்கு வந்தபோது வல்வெட்டித்துறைக்கு மின்சாரத்தை அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரை ரத்தினம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 வல்வைப் பட்டினசபையின் தலைவர்களாக இருந்து அளப்பெரிய சேவைகளை ஆற்றியவர்களின் பெயர்களும் ஆண்டுகளும்.

திரு.சபாரத்தினம் 1961ம் ஆண்டு சத்தியாக்கிரக தமிழினப் போராட்டப் பங்களிப்பின்போது தடுப்புக்காவலில் இருந்தபோது பதவியில் இருந்தார்

 

திரு.ஐ.திருப்பதி

 திரு.ஐ.திருப்பதி   1947
(இரண்டு தடவைகள்)

திரு.ச.நடனசிகாமணி

திரு.ச.நடனசிகாமணி   1953

திரு.சோ.சுந்தரலிங்கம்

திரு.சோ.சுந்தரலிங்கம்   1956

திரு.இ.அப்புக்குட்டியாபிள்ளை

திரு.இ.அப்புக்குட்டியாபிள்ளை  1959

திரு.க.சபாரத்தினம்

திரு.க.சபாரத்தினம்   1960(இரண்டுதடவைகள்)

திரு.க.சு.கதிரிப்பிள்ளை

திரு.க.சு.கதிரிப்பிள்ளை ஒரு வருடம்

திரு.மு.இரத்தினவடிவேல்

திரு.வி.இரத்தினவடிவேல்  1968

திரு.து.நவரத்தினம்

திரு.ச.ஞானமூர்த்தி

 

திரு.க.சிவாஜிலிங்கம்

 

திரு.ந.அனந்தராஜ்

 

திரு.க.துரைரத்தினம்

 
 
(திரு.ஆர்.பிரேமதாஸ் (உதவி உள்ளூராட்சி அமைச்சர்),   அப்போது சிதம்பரா சாரணராக இருந்த திரு.பா.நடேசன், திரு.க.துரைரத்தினம் ஆகியோர் வல்வையில்)
 
பட்டினசபை வட்டாரங்கள் சிறிய மாற்றங்களுடன் ஆறு வட்டாரங்களாகவும், புதி தாகச் சேர்க்கப்பட்ட பொலிகண்டி ஒரு வட்டாரமாகவும், தொண்டமானாறு ஒரு வட்டார மாகவும், மயிலியதனை ஒரு வட்டாரமாகவும் ஒன்பது அங்கத்தவர்கள் கொண்ட சபை யாயிற்று நகரசபையின் தரத்தைப் பெற்றபின் நடைபெற்ற முதலாவது தேர்தலில் திரு. து.நவரத்தினம் அவர்கள் முதலாவது நகரமுதல்வரானார். இவர் சிறந்தபேச்சாளரும் இடது சாரிக் கொள்கைகளை ஆதரித்தவரும் சமசமாஜக்கட்சித் தலைவர் என்.எம்.பெரேராவின் நண்பருமாவார். 1979ம் ஆண்டு முதல்முதல் கட்சி அடிப்படையில் நடைபெற்ற நகரசபைத் தேர் தலில் திரு.ச.ஞானமூர்த்தி (சமாதான நீதிபதி) அவர்களைக் தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக்கூட்டணி நகரசபையை கைப்பற்றியது. அப்போது பாராளுமன்ற உறுப் பினர் திரு.த.ராஜலிங்கம் அவர்களின் உதவியாலும் நகரசபை அலுவலகக் கட்டிடம் காணி கொள்வனவு, நவீனசந்தை, குழாய் நன்நீர் திட்டம் ஜேர்மன் நாட்டு  G.T.Z நிறுவனத்தின் உதவியாலும், தொண்டமானாறு பொலிகண்டி கம்பர்மலை ஆகிய கிராமங்களுக்கு மின் சாரம் வழங்கல் ஆகிய வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டன.

தனித்தமிழ்நாடு கோரும் எவரும் அரசமைப்புக்கு விசுவாசம் தெரிவித்து சத்தியப் பிரமாணம் செய்யமுடியாத நிலையில், தமிழர்விடுதலைக் கூட்டணி சார்பில் பதவிவகித்த திரு.ஞானமூர்த்தி அவர்கள் பதவி துறந்தார். அவரது பதிவிக்காலத்தில் 1979 – 1983ல் நகரசபை புதுப் பொலிவு பெற்றது. அதன்பின்னர் 1998ம் ஆண்டுவரை நகரசபை நிர்வாகம் விசேட ஆணையாளர்களது (செயலாளர்களது) நிர்வாகம் நடைபெற்றது. மீண்டும் 1998ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது திரு.க.சிவாஜிலிங்கம் தலைவராக தெரிவுசெய்யப்பட் டார். நீண்ட போராட்டத்தின் காரணமாக அழிவுற்ற நகரசபையின் மீன்சந்தை, நவீனசந்தை, சனசமூகசேவா நிலையம் ஆகியவற்றை திருத்தியும் மீள மாடிக்கட்டிடமாக அமைக்க நடவடிக்கை எடுத்தார். 2001 வரை பதவிவகித்த சிவாஜிலிங்கம் மேலும் பலபணிகளை திறம்பட ஆற்றியிருந்தார். மீண்டும் அரசியல் சூழ்நிலை காரணமாக விசேட ஆணையாளர்களது நிர்வாகம் நடைபெற்றது.   

23-07-2011 கட்சி அடிப்படையிலும் விருப்பு வாக்கு முறையிலும் நடைபெற்ற தேர் தலில் முதலாவது தெரிவாக திரு.ந.அனந்தராஜ் அவருக்கும் மற்றும் உபதலைவர் க.சிவாஜிலிங்கம், மற்றும் தமிழ்த்தேசிய அமைப்பில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கும் கனடா வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தின் வாழ்த்துக்கள்.