வல்வெட்டித்துறை பதினோராவது நகரசபைத் தலைவராக
திரு.நடராஜா அனந்தராஜ் அவர்கள் 20-08-1011 அன்று பதவி ஏற்றார்.

 திரு.ந.அனந்தராஜ் அவர்கள் வல்வெட்டித்துறையின் பதினோராவது நகரசபைத் தலைவராக யாழ்நகரில் நடந்த பதவியேற்பு வைபவத்தில் தமிழ்த் தேசியஅமைப்பின் தலைவர் திரு.இரா..சம்பந்தன் அவர்கள் முந்நிலையில் இன்று 20-08-1011 பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

 திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். முன் நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரைரத்தினம், திரு.த.இராசலிங்கம் ஆகியோரின் வெற்றிக்கு துணைநின்றவர். இவரை ஆசிரியராக, உடுப்பிட்டி அமெரிக்கன்மிஷன் கல்லூரி அதிபராக, வடகிழக்குமாகாண உதவிக்கல்விப் பணிப்பாளராக ஈழத்தின் படைப்பு இலக் கியவாதியாக, யாழ் பல்கலைக்கழக கலைமாமணி (B.A) சிறப்புப்பட்டதாரியாக, முதுமா னிப்பட்டதாரியாக (M.A), கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வெகுஜனத் தொடர்புசாதன பட்டப்படிப்பின் டிப்ளோமா பட்டதாரியாகவும், கிழக்குப்பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரை யாளராக, இவற்றிற்கு மேலாக தாயகத்தின் போர்க்கால வன்முறைகளை ஆவணப்படுத் துவதில் அக்கறைகொண்ட சமூகவியலாளராக, செல்வச்சந்நிதியானின் பூத் தொண்டனாக பல்வேறு பரிமாணங்களில் மிளிர்கின்றவர்.

அனந்தராஜ் அவர்கள் 1989 ஆகஸ்ட் 2,3,4ம் திகதிகளில் வல்வையில் இந்திய இராணுவம் படுகொலை தொடர்பான வல்வைப் படுகொலையை மிகவும் துல்லியமாக உலகின் கவனத்தைப் பெறும்வகையில் “இந்திய மையலாய்” என்ற பெயரில் ஆங்கிலத் திலும் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தவர். இந்நூல் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கும் ஒரு காரணமாக இருந்தது. நெருக்கடியான கட்டத்தில் பிரஜைகள் குழுவில் இருந்தும் சேவையாற்றியவர்.

1995ம் ஆண்டு செப்டெம்பர் 12ம் திகதி வடமராட்சி நாகர்கோயில் மகாவித்தியால யத்தின் மீது சிறிலங்கா விமானப்படை குண்டுவீச்சில் பலமாணவர்களை பலி எடுத்தது. இந்த வரலாற்றை “உதிரம் உறைந்த மண்” என்ற நூலின் மூலம் ஆவணப்படுத்தியதோடு மேலும் பதினொரு நூல்களுக்கும் சொந்தக்காரர். அனந்தராஜ் அவர்களின் தந்தையான நடராஜா கல்விக்கந்தோரில் அதிகாரியாக பணியாற்றிய பெருமைக்குரியவர். முன்நாள் வல்வைப் பட்டினசபைத் தலைவர் ச.நடனசிகாமணியின் மருமகனும், கனடா வல்வை வரலாற்று ஆவணக்காப்பக உரிமையாளர் ந.நகுலசிகாமணி அவர்களின் மைத்துனரும் ஆவார்.

ந.நகுலசிகாமணி
வரலாற்று ஆவணக்காப்பகம்
கனடா