இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும்  இலவசமாக காணலாம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம்.

இதற்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உங்கள் கணினியில் இணைய இணைப்பு நல்ல நிலையில் இருந்தாலே போதுமானது. வேறு எதுவும் நீங்கள் செய்ய தேவையில்லை. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை கூகுல் நிறுவனம் பட தயாரிப்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
இந்த சேவைக்கு இன்டெல் நிறுவனம் முழு ஸ்பான்சர் செய்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இன்டெலின் விளம்பரம் 15 நொடிகள் ஒளிபரப்பாகும். இதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு முழு திரைப்படத்தையும் காணும் போது சுமார் 10-12 விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.

இந்த தளத்திற்கு செல்ல – youtube.com/boxoffice