ஒக்ரோபர் 2011


 

திருமண வாழ்வில் வைரவிழா காண்பது இன்றைய உலகில் சாதனைகளுக்கெல்லாம் பாரிய சாதனையாகும். அத்தகைய சாதனையை தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் திரு. திருமதி வடிவேல் தம்பதியர் புரிந்துள்ளனர்.

வல்வையைச் சேர்ந்த ரதி அப்பாத்துரை(கலைச்சோலை – இலங்கை), ரவீந்திரன்(கனடா), யோகேந்திரன்(ஜேர்மனி), காலம்சென்ற விமலேந்திரன், மகேந்திரன்(கனடா), தெய்வேந்திரன்(டென்மார்க்), சுரேந்திரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பெற்றோர்கள் திரு.வடிவேல் – திருமதி நல்லம்மா வடிவேல் ஆகியோர் இன்று தமது 60ம் கல்யாணத்தைக் இங்கிலாந்தில் கொண்டாடுகின்றனர்.

இவர்களை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,

 பூட்டப்பிள்ளைகள், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும்

வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்

.

உலக மக்கள் தொகையானது இன்னம்  சில வாரத்தில் ஏழு பில்லியனை நெருங்குகிறது.

இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் வசதி ஒன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் நாம் பிறந்தது எத்தனையாவது என் தருகிறது இந்த இணைப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு விஜயம் செய்யுங்கள்

ஆப்பிளின் ஐபோன் 4S வெளியாகி விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

SIRI எனும் சூப்பர் தொழில்நுட்பத்தின் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு மிக திறமையாக பதலளிக்கிறது ஐபோன் 4S.

அலாம் செட் செய்தல் , காலநிலை அவதானிப்பு போன்ற என்னும் பலவற்றை குரல் வழியாகவே நிறைவேற்றலாம்.

மக்கள் தொகை என்ன? அருகில் இருக்கும் உணவகம் எது? புளூட்டோ கிரகம் எவ்வளவு தூரத்தில்? என்ற கேள்விகளுக்கு உடனேயே பதிலைத் தேடி வழங்குகிறது.

ஐபோனை வாங்கியதும் டெமோ காட்டுவதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம் என பலரும் ஐபோனிடம் என்னவெல்லாம் கேட்க முடியுமோ கேட்டு யூடீயூப்பில் வெளியிடுகிறார்கள்.

உனது தந்தை யார் என்று கேட்கும் கேள்விக்கு, அது நீர்தான் நாங்கள் வேலையை பார்ப்போமா என பதிலளித்து அசத்துகிறது SIRI.

சாதாரண மெமரி கார்டுக்கு உயிர்கொடுக்கும் தொழில் நுட்பம் இது.

memory card + Wi-Fi = Eye-Fi எனும் சமன்பாட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது உங்கள் SDHC மெமரிகார்டால் Wi-Fi எனப்படும் வயர்லஸ் நெட்வொர்க்கோடு இணைய முடியும். அவ்ளோதான்.

இதனால் என்ன பயன்? உங்கள் சாதாரண டிஜிட்டல் கேமராவில் இந்த Eye-Fi மெமரிகார்டை பயன்படுத்தினால் உங்கள் கேமரா உங்கள் வீட்டு வயர்லஸ் நெட்வொர்க்கோடு இணைக்கப்பட்டு விடும்.விளைவு போட்டோ எடுக்க எடுக்க அப்படியே வை-பை வழி உங்கள் கணிணிக்கோ அல்லது ஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டுக்கோ போட்டோக்களை எளிதாக கடத்திவிடலாம்.

 உங்கள் மெமரி கார்டு எப்போதுமே போட்டோக்களால் நிரம்பிவழியாது. never run out of space again, எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்? இங்கு Wi-Fi வைபைகள் ஊரெங்கும் உள்ளன. எனவே எங்கிருந்து வேண்டுமானாலும் போட்டோக்களை சாதாரண டிஜிட்டல் கேமராவிலிருந்து அப்லோடு செய்துவிடலாம். இன்னும் அநேக நம்ம வீட்டு சாதனங்கள்  சீக்கிரத்தில்  உயிர்பெற்று  வீட்டு  வயர்லெஸ்  நெட்வொர்க்கோடு  இணைக்கப்படும். அந்த வழியில் குளிர்சாதனப்பெட்டி, அடுப்பு,  துணிதுவைக்கும் WASHER & DRYER , MICROWEN  இப்படி அனைத்து   பொருட்களைக்கூட நெட்வொக்கில் இணைக்க நாம் ரொம்ப கஷ்டப்படவேண்டியதில்லை என்பதை இந்த ஐ-பை நிரூபிப்பதாய் உள்ளது.

இறப்பதற்கு முன் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய 5 ரகசியங்கள்: படித்ததில் பிடித்தது
 
ஜான் பி.இஸோ (John B .Isso) எழுதிய The  Five Secrets You Must Discover Before You Die என்ற மிக அருமையான புத்தகத்தைப் பற்றி நேயர்களுக்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
 
வாழ்வின் குறிக்கோள் என்ன? நாம் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும்? அமைதியான, மகிழ்வான வாழ்வு வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை மிகச் சுருக்கமாக, மிகத் தெளிவாக கூறும் நூல் இது.
 
கோடீஸ்வரனாக வேண்டும், சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும்,  என்றெல்லாம்  உசுப்பேற்றாமல்  யதார்த்தமான விஷயங்களை சொல்லி இருக்கிறார் இந்த புத்தக ஆசிரியர்.
 
ஒரு முழுமையான, அர்த்தமுள்ள வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும், அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களை தேடிப் பிடித்து கிட்டத்தட்ட 200 பேருக்கும் மேல் இன்டர்வியு செய்து அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் என்னென்ன செய்தார்கள்/செய்கிறார்கள் என்று அலசி, அதை 5 ரகசியங்களாக மாற்றி இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார் ஜான்.
 
பணம் இருக்கிறதோ இல்லையோ, வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியுடன் வாழும் நிறையப் பேரை நாம் பார்த்திருப்போம். பணம், வசதி, சொகுசு வாழ்வு என்று எல்லாம் இருந்தும் மன அமைதி இல்லாமல், எதிலுமே ஈடுபாடு இல்லாமல் ஒரு வித விரக்தியுடன் இருக்கும் மனிதர்களையும் பார்க்கிறோம். ஜான் இந்த வேறுபாட்டை காரணம் காண முயன்றிருக்கிறார். 
 
அடிக்கடி பயணம் மேற்கொள்ளும்  பலருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த ஊருக்கு போவதானாலும் (உள்நாடு/வெளிநாடு) ட்ரிப் அட்வைசர் (Trip Advisor) என்ற வலைத் தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட ஊரில் எங்கு தங்கலாம், எங்கு சாப்பிடலாம், எந்தெந்த இடங்களை சுற்றி பார்க்கலாம் என்று பார்ப்பது உண்டு. இதற்கு முன் பயணம் செய்த பலபேர் வேலை மெனக்கெட்டு தான் பெற்ற இன்பங்களை/நல்ல அனுபவங்களை/துன்பங்களை இங்கு எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்க்கை அனுபவமும் அது போலத்தான் என்கிறார் ஜான். வாழ்க்கையில் நிறைவாக, மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் நாம் ஏன் கருத்து கேட்கக்கூடாது?
 
இதற்காக ஜான் ஒரு குழுவுடன் நிறைய நாடுகளுக்கு பயணம் செய்து, தான் கற்றுக் கொண்ட விஷயங்களை இதில் விளக்கியுள்ளார். சுருக்கமாக அந்த 5 ரகசியங்கள் என்ன, என்ன என்று பார்ப்போம்:
 
ரகசியம் #  1 :உனக்கு நீ உண்மையாக இரு
 
கடவுள் நம்பிக்கை  இருக்கிறதோ இல்லையோ, உன் மேல் உனக்கு நம்பிக்கை வேண்டும். உனக்கு நீ உண்மையாக இல்லை என்றால், எவ்வளவு பணம் வந்தாலும் வாழ்வில் நிம்மதி வராது.

 
ரகசியம் # 2 : எதையும் நினைத்து வருந்தாதே 
 
பின்னாளில் வாழ்க்கையில் ஐயோ, இப்படி செய்துவிட்டோமே என்று நினைத்து வருந்தும் அளவுக்கு எந்தத் தவறையும் நாம் செய்யக்கூடாது. ஒருவேளை, அப்படி ஏதேனும் செய்துவிட்டால் பின்னர் அதை நினைத்து, நினது தூக்கத்தையும், நிம்மதியையும் இழப்பது அர்த்தமற்ற செயல். இதனால் நம் வாழ்வு வீணாகிவிடும்.
 
ரகசியம் # 3 : அன்பாக மாறு 
 
வேறெந்த  முயற்சியும் செய்ய வேண்டாம், வாழ்க்கையில் எல்லோரிடமும் அன்பாக, பகைமை பாராட்டாமல் இருந்தாலே போதும் என்கிறார் ஜான். பிறரிடம் அன்பாக இருப்பது என்பது மிகச் சுலபமான செயலே, முயற்சித்துப் பாருங்கள்.
 
ரகசியம் # 4 : இன்று வாழ கற்றுக்கொள் (live the moment ):
 
ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகத்தில் “carpe diem” என்றொரு லத்தீன் வார்த்தை வரும்; அதன் அர்த்தம் “இன்று வாழு (enjoy the day)”  என்பதாகும். சமீபத்தில் வெளிவந்த 180 படத்தின் கதாநாயகன் கூட இப்படி சொல்வதாக ஒரு காட்சி இருக்கிறது. நேற்று என்பது இறந்த காலம், நாளை என்பது நிச்சயமில்லை. இன்று என்பதே நிச்சயம். இன்று நாம் மகிழ்ச்சியுடன் இருந்தாலே பெரிய விஷயம், நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி நினைக்காமல் இன்றைய நாள் மகிழ்சியாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். நல்ல சாப்பாடு சாப்பிடாமல், நல்ல உடை உடுத்தாமல், வெளியே எங்குமே செல்லாமல் வாழ்நாள் பூராவும் சேர்த்து வைத்து என்ன பயன் என்று தெரியாமலேயே நிறைய பேர் பணம், பணம் என்று சேர்த்து வைப்பதில் குறியாக இருக்கிறார்கள். இவர்கள் யாருக்குமே வாழ்வு நிறைவாக இருக்காது, இவர்கள் குழந்தைகள் சந்தோஷமாக வளரமாட்டார்கள். பெற்றோரை மதிக்க மாட்டார்கள். இது போன்றோரின் கடைசி காலம் மிகுந்த துன்பமாகவே இருக்கும் என்கிறார் ஜான்.
 
ரகசியம் #5 : நீ அடைவதைவிட  அதிகமாக கொடு:
 
Bill Gates, Warren Buffet போன்ற உலக மகா கோடீஸ்வரர்கள் இதைத்தான் செய்கிறார்கள். குழந்தையே இல்லாமல் இருக்கும் நிறைய பேர் வாழ்க்கையை வாழத் தெரியாமல், தேவையே இல்லாமல் கஞ்சத்தனமாக இருப்பதை பார்த்திருப்போம். இவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள்? இறந்த பிறகு இவர்களுடைய சொத்து யாருக்கு பயன்படப் போகிறது?
 
மகிழ்ச்சியாக வாழ்ந்தால், மகிழ்வுடன் நிம்மதியாக இறக்கலாம். 
 
இதில் என்ன புதுமை? நமக்கு தெரியாத புதிய விஷயம் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லையே என்று சிலர் நினைக்கலாம்; உண்மைதான். ஆனால், எதையுமே நாமாக புரிந்து கொள்ளாமல், வாழ்க்கை கடினமாக இருக்கிறது, சுவாரசியம் இல்லாமல் இருக்கிறது என்பவர்களுக்கு இது ஒரு நல்ல ஊக்கியாக இருக்கும்
 
இப்புத்தகத்தை PDF உருவில் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் பண்ணவும்

அமரர் விஷ்வரூபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி 

நாளை  சனிக்கிழமை (Oct 15, 2011) அன்று காலை 10.30 மணிக்கு –  

Unit 10 இலக்கம் 1960 Ellesmere Rd, SCARBOROUGH, ON வில் நடைபெற உள்ளது.

உறவினர், நண்பர்கள் அனைவரையும் இன் நிகழ்வில் கல்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொலைபேசி 416 4392089

.-000-.

அறிவித்தல் மனைவி சுகந்தி விஷ்வரூபன்.

 

வேற்று கிரக வாசிகளின் வருகை பற்றி ஏராளமாக சலிக்க, சலிக்க புத்தகங்களும், ஹாலிவுட் திரைப் படங்களும் வந்தவண்ணம் உள்ளன. இதில் அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தைச்(Cornell University) சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரசியமான ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டுள்ளனர். இதில் 
 1. 1. வேற்று கிரக வாசிகள் (ETI எனப்படும் Extra Terrestrial Intelligence) இந்த பரந்த அண்டத்தில் எங்காவது இருக்கிறார்களா?, அல்லது 
 2. 2. நாம் மட்டும்தான் இருக்கிறோமா?, 
 3. 3. அவ்வாறு அவர்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் இதுவரை நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை?, 
 4. 4. நாம் கிட்டத்தட்ட 50 வருடங்களாக முயன்றும் ஏன் நம்மால் எந்தவிதமான தொடர்பும் (Contact) ஏற்படுத்த முடியவில்லை? 
 5. 5. அவர்கள் நம்மைவிட அதி புத்திசாலிகளாக இருப்பதால் நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லையா அல்லது நம்மைப் போலவே அவர்களும் இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நம்மைத் தேடுகிறார்களா?
 6. நம்முடைய தேவை நாளுக்குநாள் வளர்ந்துவரும் நேரத்தில், நம்முடைய அகோரப் பசிக்கு உலகம் அழியும் முன் காப்பதற்கு அவர்கள் முயற்சிப்பார்களா?

ஒரு வேளை அவ்வாறு அவர்கள் இவ்வுலகிற்கு வந்தால் என்னென்ன நடக்கலாம் என்று இந்த விஞ்ஞானிகள் மூன்று விதமான அனுமானங்களை வெளியிட்டுள்ளனர்.

(பெரிதாக பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)
(Beneficial): நன்மை
 • நம்முடன் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நம்மிடம் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தின் நன்மைகளை பற்றி விவாதிக்கலாம்.
 • நம்முடைய உலகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற நமக்கு வழி காட்டலாம்.
 • நம்முலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லலாம்.
 • ஒருவேளை, நம்முடன் சுமுகமாக இல்லாத பட்சத்தில் நாம் அவர்களை வெல்ல முயற்சிக்கலாம்.
(Neutral): நடுநிலை
 • அவர்கள் ஒருவேளை வேண்டுமென்றே நம்முன் வராமல் ஒளிந்து கொண்டிருக்கலாம்.
 • நம்முடன் தொடர்பு கொள்ள முடியாமல் வெகுதொலைவிலோ, அல்லது நம் அறிவுக்கெட்டாத வேறு புதிய வடிவில், உருவத்தில், பரிமாணத்தில் இருக்கலாம், அல்லது 
 • நம்முடன் தொடர்பு கொள்ள ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.
 • இப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நமக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லாமல் இருக்கலாம் அல்லது நமக்கு சிறிய அளவில் தொந்தரவு கூட கொடுக்கலாம்.
(Harmful): தீமை
 • சுயநலத்துடன் இவ்வுலகை ஆக்கிரமிக்கலாம்.
 • நம்மை சாப்பிட்டுவிடலாம்
 •  நம்மை  அடிமைப்படுத்திவிடலாம்
 •  நம்மை அழித்துவிடலாம்.
 • இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது, அவர்களே முழு பிரபஞ்சத்தையும் ஆளவேண்டும் என்ற தீவிர நோக்கில் பலவிதமான முறைகளில் நம்மை ஒழிக்க திட்டமிடலாம்.
 இப்படி பலவிதமான சுவாரசியங்களுடன் விரிகிறது இந்த ஆராய்ச்சி கட்டுரை. முழு கட்டுரைக்கு இங்குள்ள இணைப்பை சொடுக்கலாம்:

http://arxiv.org/abs/1104.4462

ம்….காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

PDF Fileலை நேரடியாக Download செய்ய இங்கு கிளிக் பண்ணுங்கள்

அடுத்த பக்கம் »