மரண அறிவித்தல்

 

 


மலர்வு 13. 06. 1946
உதிர்வு 08. 10. 2011

 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.சண்முகசிகாமணி நடனசிகாமணி அவர்கள் 08-10-2011 அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி பார்வதிப்பிள்ளை அவர்களின் மகனும், காலஞ்சென்ற இராமநாதன், திருமதி.ரோகிணி ஆகியோரின் மருமகனும், சந்திரப்பிரபா அவர்களின் அன்புக் கணவரும், நேசசிகாமணி, சந்திரசிகாமணி, ஈஸ்வரன், கீதாஞ்சலி ஆகியோரின் தந்தையும் செல்வமதி, வாஹினி, சிவகுமாரி, அருள்தாஸ் ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்ற ராதாகிருஸ்ணன், பிரேம்குமார், ஜீவச்சந்திரன், ராஜசேகரன், காலஞ்சென்ற ஞானசேகரம், பிரேமலோஜனி தியாகராஜ்,
உமாசேகரன் ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற யோகசிகாமணி, சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு, நகுலசிகாமணி, வனிதாமணி அனந்தராஜ், ஜெயவீரசிகாமணி,
ருபமணி ஜெயக்குமார் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூத உடல் 18.10.2011 செவ்வாய்க்கிழமை Imperial Fields, Bishopsford Road, Morden, Surrey SM4 6BF முகவரியில் அமைந்த மண்டபத்தில் காலை 9.30 முதல் 12.30 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு மதியம் 1.15 அளவில் Lambeth Crematorium, Blackshaw Road SW17  OBY (Near St.Georges Hospital) தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:

சுpவா:            0793 2721 607
ராஜூ:     0794 1667 277
ஈஸ்வரன்:     0785 4107 373
அருண்:     0794 6633 102

Advertisements