வேற்று கிரக வாசிகளின் வருகை பற்றி ஏராளமாக சலிக்க, சலிக்க புத்தகங்களும், ஹாலிவுட் திரைப் படங்களும் வந்தவண்ணம் உள்ளன. இதில் அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தைச்(Cornell University) சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரசியமான ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டுள்ளனர். இதில் 
 1. 1. வேற்று கிரக வாசிகள் (ETI எனப்படும் Extra Terrestrial Intelligence) இந்த பரந்த அண்டத்தில் எங்காவது இருக்கிறார்களா?, அல்லது 
 2. 2. நாம் மட்டும்தான் இருக்கிறோமா?, 
 3. 3. அவ்வாறு அவர்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் இதுவரை நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை?, 
 4. 4. நாம் கிட்டத்தட்ட 50 வருடங்களாக முயன்றும் ஏன் நம்மால் எந்தவிதமான தொடர்பும் (Contact) ஏற்படுத்த முடியவில்லை? 
 5. 5. அவர்கள் நம்மைவிட அதி புத்திசாலிகளாக இருப்பதால் நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லையா அல்லது நம்மைப் போலவே அவர்களும் இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நம்மைத் தேடுகிறார்களா?
 6. நம்முடைய தேவை நாளுக்குநாள் வளர்ந்துவரும் நேரத்தில், நம்முடைய அகோரப் பசிக்கு உலகம் அழியும் முன் காப்பதற்கு அவர்கள் முயற்சிப்பார்களா?

ஒரு வேளை அவ்வாறு அவர்கள் இவ்வுலகிற்கு வந்தால் என்னென்ன நடக்கலாம் என்று இந்த விஞ்ஞானிகள் மூன்று விதமான அனுமானங்களை வெளியிட்டுள்ளனர்.

(பெரிதாக பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)
(Beneficial): நன்மை
 • நம்முடன் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நம்மிடம் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தின் நன்மைகளை பற்றி விவாதிக்கலாம்.
 • நம்முடைய உலகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற நமக்கு வழி காட்டலாம்.
 • நம்முலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லலாம்.
 • ஒருவேளை, நம்முடன் சுமுகமாக இல்லாத பட்சத்தில் நாம் அவர்களை வெல்ல முயற்சிக்கலாம்.
(Neutral): நடுநிலை
 • அவர்கள் ஒருவேளை வேண்டுமென்றே நம்முன் வராமல் ஒளிந்து கொண்டிருக்கலாம்.
 • நம்முடன் தொடர்பு கொள்ள முடியாமல் வெகுதொலைவிலோ, அல்லது நம் அறிவுக்கெட்டாத வேறு புதிய வடிவில், உருவத்தில், பரிமாணத்தில் இருக்கலாம், அல்லது 
 • நம்முடன் தொடர்பு கொள்ள ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.
 • இப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நமக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லாமல் இருக்கலாம் அல்லது நமக்கு சிறிய அளவில் தொந்தரவு கூட கொடுக்கலாம்.
(Harmful): தீமை
 • சுயநலத்துடன் இவ்வுலகை ஆக்கிரமிக்கலாம்.
 • நம்மை சாப்பிட்டுவிடலாம்
 •  நம்மை  அடிமைப்படுத்திவிடலாம்
 •  நம்மை அழித்துவிடலாம்.
 • இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது, அவர்களே முழு பிரபஞ்சத்தையும் ஆளவேண்டும் என்ற தீவிர நோக்கில் பலவிதமான முறைகளில் நம்மை ஒழிக்க திட்டமிடலாம்.
 இப்படி பலவிதமான சுவாரசியங்களுடன் விரிகிறது இந்த ஆராய்ச்சி கட்டுரை. முழு கட்டுரைக்கு இங்குள்ள இணைப்பை சொடுக்கலாம்:

http://arxiv.org/abs/1104.4462

ம்….காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

PDF Fileலை நேரடியாக Download செய்ய இங்கு கிளிக் பண்ணுங்கள்