ஒக்ரோபர் 2011


 

மரண அறிவித்தல்

 

 


மலர்வு 13. 06. 1946
உதிர்வு 08. 10. 2011

 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.சண்முகசிகாமணி நடனசிகாமணி அவர்கள் 08-10-2011 அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி பார்வதிப்பிள்ளை அவர்களின் மகனும், காலஞ்சென்ற இராமநாதன், திருமதி.ரோகிணி ஆகியோரின் மருமகனும், சந்திரப்பிரபா அவர்களின் அன்புக் கணவரும், நேசசிகாமணி, சந்திரசிகாமணி, ஈஸ்வரன், கீதாஞ்சலி ஆகியோரின் தந்தையும் செல்வமதி, வாஹினி, சிவகுமாரி, அருள்தாஸ் ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்ற ராதாகிருஸ்ணன், பிரேம்குமார், ஜீவச்சந்திரன், ராஜசேகரன், காலஞ்சென்ற ஞானசேகரம், பிரேமலோஜனி தியாகராஜ்,
உமாசேகரன் ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற யோகசிகாமணி, சிவகாமசுந்தரி திருநாவுக்கரசு, நகுலசிகாமணி, வனிதாமணி அனந்தராஜ், ஜெயவீரசிகாமணி,
ருபமணி ஜெயக்குமார் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூத உடல் 18.10.2011 செவ்வாய்க்கிழமை Imperial Fields, Bishopsford Road, Morden, Surrey SM4 6BF முகவரியில் அமைந்த மண்டபத்தில் காலை 9.30 முதல் 12.30 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு மதியம் 1.15 அளவில் Lambeth Crematorium, Blackshaw Road SW17  OBY (Near St.Georges Hospital) தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:

சுpவா:            0793 2721 607
ராஜூ:     0794 1667 277
ஈஸ்வரன்:     0785 4107 373
அருண்:     0794 6633 102

நம் வீடுகளில் உபயோகிப்பதற்காக கணினியை மாற்றியமைத்தவர், எலக்ட்ரானிக் துறையை முற்றிலும் புரட்டிப் போட்டவர்… எட்டாக் கனியாக இருந்த கணினியை சாமானியர்களுக்கும் எட்டச் செய்தவர்… இன்னும் என்னென்னவோ சொல்லலாம் அவரைப் பற்றி.. 
ஸ்டீவ் ஜாப்ஸ்  என்ற ஒரு  சகாப்தம் நிறைவடைந்தது… அவரின்  ஆன்மா  சாந்தியடைய  அனைவரும் வேண்டிக்கொள்வோம்…

கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் (வயது56) மரணமடைந்தார். புற்று‌நோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார்.

1980ல் இவரால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் இதை தனது 21வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கி ஆப்பிள் கம்ப்யூட்டர் மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 லட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.

எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே.

புதிய வரலாற்றைப் படைத்தது: 2007ல் ஐ‌ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது.

இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார்.

அமெரி்க்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில்  1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிறந்தார் ஸ்டீவன்பவுல் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் இன்ஜினியராக தனது பள்ளி வாழ்க்கையை துவக்கினார். 300-க்கும் மேற்பட்ட தனது எலெக்ட்ரானிக் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுள்ளார். கடந்த 1977-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு ஜனவரி 27-ம் ஆண்டு முதன்முதலாக ஐ-பேடினை அறிமுகம் செய்து நவீன கணினி உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார். அவர் விலகினாலும் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணியை உலகம் மறக்கவில்லை.

அவரைப்பற்றி ஒரு வீடியோ கீழே!

« முன்னைய பக்கம்