நவம்பர் 8 கிரிகோரியன் ஆண்டின் 312வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 53 நாட்கள் உள்ளன.

  • 1811 – இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
  • 1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

பிறப்பு

  • 1680 – வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1847)
  • 1900 – ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர்.(இ. 1976)
  • 1902 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், (இ. 1977)
  • 1927 – லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி
  • 1984 – நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்பு

  • 1958 – சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1878)