படம்: மயங்குகிறாள் ஒரு மாது
பாடகர்: பாலு
இசை:: விஜயபாஸ்கர்
வருடம்:
1975

சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில்
இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது
ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை
சிறந்த ஏடு
அது ஆசை கிளியின் கூடு
என் வாழ்க்கை சிறந்த ஏடு
அது ஆசை
கிளியின் கூடு

பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற
ஜோடி இல்லை
ஹஹ இது போன்ற ஜோடி இல்லை

மணம் குணம் ஒன்றான
முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில்
இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

தைமாத மேக நடனம்
என் தேவி காதல்
நளினம்
தைமாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்

இந்த காதல் ராணி
மனது
அது காலம்தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும்
திரைகள் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது
வீணை
சந்தோசம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான
முல்லை

Advertisements