வெள்ளி, நவம்பர் 11th, 2011


இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் மறைந்தால் அதுபற்றி செய்தி வெளியிடும் முறை பற்றி ஊழியர்களுக்கு பிபிசி பயிற்சி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து லண்டனில் வெளியாகும் தி சண்டே டைம்ஸ் நாளிதழில் இடம்பெற்ற செய்தி வருமாறு: 2002ம் ஆண்டில் இங்கிலாந்து ராணி(குயின் மதர்) இறந்தபோது அதை இங்கிலாந்து அரசு செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்ட விதம் கடும் சர்ச்சைக்கு உள்ளானது.

அனுபவம் வாய்ந்த செய்தி வாசிப்பாளர் பீட்டர் சிசன்ஸ் பழுப்பு நிற கோட், பிரவுன் நிற டை அணிந்து ராணி மறைவை அறிவித்தார். அதுபோன்ற தவறு ஏற்பட்டு விமர்சனத்துக்கு உள்ளாகாமல் இருக்க ராணி 2ம் எலிசபெத் மறைவை அறிவிப்பதற்கான பயிற்சியை பிபிசி தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இதற்கான போலி வீடியோ ஒளிபரப்பி ஊழியர்களுக்கு செய்தி வெளியிட பயிற்சி தரப்படுகிறது. துக்க செய்தியை அறிவிக்கும்போது செய்தி வாசிப்பாளர்கள் அணிய வேண்டிய உடைகள் அலமாரிகளில் வைக்கப்பட்டன. மற்ற நிகழ்ச்சிகள் ரத்து, தேசிய கீதம் ஒலிபரப்பு, வாழ்க்கை வரலாறு வீடியோ ஆகியவை பற்றியும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ராணி மறைந்தால் 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதன் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை மட்டுமின்றி அதன் பிறகு சில நாட்களும் கொமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப கூடாது என்றும் பயிற்சி தரப்படுகிறது. இவ்வாறு தி சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 315வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 50 நாட்கள் உள்ளன.

  • 1675 – குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவானார்.
  • 1919 – இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
  • 1930 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
  • 1933 – யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
  • 1992 – இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.

பிறப்புக்கள்

  •  1898 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர் (இ. 1994)
  •  1821 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)
  •  1937 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர்

இறப்புகள்

  •  1982 – லெப்டினன்ட் சங்கர், ஈழப்போரில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி.
  •  2004 – யாசர் அரபாத், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர், நோபல் பரிசாளர் (பி. 1929)