கிரிகோரியன் ஆண்டின் 317வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.

  • 1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).
  • 1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1970 – போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).
  • 1971 – ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.
  • 1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டு இந்நாளில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1990 – உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

  •  354 – ஹிப்போவின் அகஸ்டீன், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 430)
  • பாடகி P.சுசீலா (1935)

இறப்புகள்

  •  1989 – ரோகண விஜேவீர, இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (பி. 1943)
  •  2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)