நவம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 319வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன.

 • 1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
 •  1926 – என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.
  1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
 •  1949 – நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
 •  1970 – சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.
 •  1971 – இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.
 •  1978 – டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.
 •  2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
 •  2007 – வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்

பிறப்புக்கள்

 •  1738 – வில்லியம் ஹேர்ச்செல், விண்கோள் யுரேனசைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி (இ. 1822)
 •  1986 – சானியா மிர்சா, இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை

இறப்புகள்

 • 1949 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1910)
 •  1949 – நாராயண் ஆப்தே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1911)
 •  1961 – இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர்.

சிறப்பு நாள்

 •  பிரேசில் – குடியரசு நாள் (1889)
 •  பாலஸ்தீனம் – விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)