புதன், நவம்பர் 16th, 2011


     

சந்திரகுமார் தங்கவடிவேல்


தோற்றம் : 09.05.1955 மறைவு : 14.11.2011

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் டென்மார்க் கோசன்ஸ் நகரத்தை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகுமார் ( சிவா ) தங்கவடிவேல் அவர்கள் திங்கள் 14.11.2011 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வல்வையின் பிரபல வர்த்தகர் எட்வேட் தங்கவடிவேல் (அதிபர் யோகநாயகி தியேட்டர்), காலஞ்சென்ற யோகநாயகி ஆகியோரின் புதல்வனும்,

காலம் சென்ற நல்லதம்பி மற்றும் அல்லியம்மா தம்பதியரின் புதல்வி வசந்தியின் அன்புக் கணவரும்,

சாதனா, புஸ்ப்பா, காருணி ஆகியோரின் அருமைத் தந்தையும்.

 (காலம்சென்ற) த. திருநாவுக்கரசு, செ. வசந்தா, திரு. த. நந்தகுமார், (காலம்சென்ற) த. இராஜகுமார், திருமதி இ. தங்கரத்தினம், திரு. த. செல்லத்துரை, திருமதி ச. ரஞ்சிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 திருமதி தி. சந்திரநாயகி, (காலம்சென்ற) பொறியியலாளர். திரு. செந்திவேல், திருமதி ந. குமுதினி, திருமதி இ. சிறீஜெயந்தி, இளைப்பாறிய பேராசிரியர் திரு. சபா. இராஜேந்திரன், திருமதி செ.இந்துமதி, வைத்தியக்கலாநிதி திரு.க.சந்திரலிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார்.

 புதன் 16.11.2011 மதியம் 13.00 முதல் 14.30 வரை Horsens Syghus Kapel  இல் பார்வைக்கு வைக்கப்படும்.

அன்னாரின் இறுதிக் கிரியைகளும், தகனமும் எதிர்வரும் ஞாயிறு பகல்; 10.00 மணி முதல் 13.00 மணிவரை நடைபெறும்.

இடம் : Vester Kirke gaard, Silkeborgvej 24, 8700 Horsens.

தொடர்பு தொலைபேசி : 0045 46997145

சந்திரகுமார் அவர்களின் இளமைக்கால தோற்றம்

டென்மார்க் தமிழ் ஒன்றியம் விடுத்த அஞ்சல் மடல்

நவம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 320வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன.

 • 1384 – பெண்ணாக இருந்தாலும் பத்து வயது “ஜாட்வீகா” என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.
 •   1846 – இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
 •   1885 – கனடாவின் மேட்டிஸ் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்கிலிடப்பட்டார்.
 •  1896 – முதற்தடவையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது. இது நடந்தது நியூ யோர்க் நகரில்.
 •  1904 – ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
 •  1907 – ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.
 •  1920 – ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
 •   1945 – யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
  1965 – சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
 •  1973 – நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பியது.
 •  1988 – சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 •  2002 – சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

பிறப்புக்கள்

 •  1922 – ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய எழுத்தாளர்.
 •  1930 – சின்னுவ அச்சிப்பே, நைஜீரிய எழுத்தாளர்.
 •  1982 – அமாரே ஸ்டெளடமையர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

 •  1999 – டானியல் நேத்தன்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1928)
 •  2006 – மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் (பி. 1912)

சிறப்பு நாள்

 •  உலக சகிப்புத் தன்மை நாள்