நவம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 322வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள் உள்ளன.

 • 1421 – நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
 • 1477 – இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான “Dictes or Sayengis of the Philosophres” வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து..
 • 1493 – கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
 • 1978 – கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
 • 1989 – கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

பிறப்புக்கள்

 •  1923 – அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (இ. 1998)
 •  1945 – மகிந்த ராஜபக்ச, இலங்கையின் 6வது ஜனாதிபதி

இறப்புகள்

 •  1936 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், (பி. 1872)
 •  1952 – போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1895)
 •  1962 – நீல்ஸ் போர், இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)

சிறப்பு நாள்

 •  லாத்வியா – விடுதலை நாள் (1918)
 • ஓமான் – தேசிய நாள்

 

Advertisements