நவம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 324வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.

 • 1917 – உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
 • 1947 – இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் புரிந்தார்.
 • 1977 – ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
 • 1979 – சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சுணி முஸ்லிம் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
 • 1985 – மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
 • 1988 – ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.
 • 1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

பிறப்புக்கள்

 • 1750 – திப்பு சுல்தான், மைசூர் பேரரசன் (இ. 1799)
 • 1901 – நாசிம் ஹிக்மட், துருக்கிய கவிஞர் (இ 1963)
 • 1942 – ஜோ பைடன், அமெரிக்க துணைத் தலைவர்
 • 1980 – ஷாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

 • 1910 – லியோ தல்ஸ்தோய், ரஷ்ய எழுத்தாளர் (பி. 1828)

சிறப்பு நாள்

 •   யுனிசெஃப் – குழந்தைகள் நாள்
 • மெக்சிக்கோ – புரட்சி நாள் (1910)
 •  வியட்நாம் – ஆசிரியர் நாள் (Ngày nhà giáo Việt Nam)