நவம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 326வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன.

 • 1935 – பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)
 • 1963 – அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி டெக்சாசில் லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சாஸ் மாநில ஆளுநர் “ஜோன் கொனலி” படுகாயமடைந்தார். அதே நாளில் உதவி-ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காவின் 36வது அதிபராக ஆனார்.
 • 1990 – மார்கரட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியைத் துறந்தார்.
 • 2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
 • 2005 – ஜேர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
 • 2005 – எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.
 • 2007 – இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.

பிறப்புக்கள்

 • 1890 – சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் (இ. 1970)
 • 1939 – முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி
 • 1970 – மாவன் அத்தப்பத்து, இலங்கையின் துடுப்பாளர்.

இறப்புகள்

 • 1963 – ஜோன் எப். கென்னடி, 35-வது அமெரிக்க ஜனாதிபதி, (பி. 1917)
 • 1976 – மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் (பி. 1907)

சிறப்பு நாள்

 • லெபனான் – விடுதலை நாள் (1943)