புதன், நவம்பர் 23rd, 2011


நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 327வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன.

 • 1936 – முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.
 • 1978 – இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
 • 1980 – தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1985 – எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1996 – எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2005 – லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
 • 2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
 •  2007 – ஆர்ஜெண்டீனாவுக்குத் தெற்கோ பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பெர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

 • 1921 – சுரதா, கவிஞர் (இ. 2006)
 • 1926 – சத்திய சாயி பாபா, இந்திய ஆன்மிகவாதி

இறப்புகள்

 • 1973 – வி. அ. அழகக்கோன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
 • 1990 – ரூவால் டால், ஆங்கில எழுத்தாளர் (பி. 1916)