நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.

  • 1667 – கவ்காசியாப் பகுதியில் ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1703 – பிரித்தானியாவில் மிகப் பெரும் சூறாவளி பதியப்பட்டது. 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1867 – அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்

பிறப்புக்கள்

  • 1844] – கார்ல் பென்ஸ் ஜெர்மானிய வாகனப்பொறியாளர் (இ. 1929)
  • 1952 – இம்ரான் கான், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

  • 1974 – ஊ தாண்ட், பர்மியர், முன்னாள் ஐநா செயலாளர் (பி. 1909)
  • 1979 – பெல்ஜியத் தமிழறிஞர் டெசி (பி. 1898)

சிறப்பு நாள்

  • பொஸ்னியா ஹெர்செகோவினா – தேசிய நாள் (1943)
  • சுரிநாம் – விடுதலை நாள் (1975)
  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்