நவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 330வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன.

 • 1922 – எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே
 • 1941 – இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
 • 1949 – இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
 • 1957 – சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
 • 1965 – சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செய்மதியை விண்ணுக்கு அனுப்பியது.
 • 1983 – லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.
 • 2002 – இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.

பிறப்புக்கள்  1936 – லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)

 •  1939 – அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்
 • 1948 – எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
 • 1948 – வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்
 • 1954 – வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்
 •  1939 – டீனா டர்னர், அமெரிக்க ராக் அன் ரோல் இசைக்கலைஞர்.

இறப்புகள்

 • 1930 – சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தமிழ்த் தலவர் (பி. 1851)
 • 2006 – ஜி. வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை