நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 331வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 34 நாட்கள் உள்ளன.

  • 1895 – ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
  • 1895 – பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
  • 1935 – இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது 1964 – பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
  • 1975 – கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரிஷ் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1989 – ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.
  •  2006 – கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்’ என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.

பிறப்புக்கள்

  • 1934 – யோசப் பரராஜசிங்கம், இலங்கை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர், (இ. 2005)
  •  1940 – புரூஸ் லீ, தற்காப்புக்கலை நிபுணர், நடிகர் (இ. 1973)
  • 1963 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி, உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1987)
  •  1965 – பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதுநிலைத் தளபதி (இ. 2008)

இறப்புகள்

  •  1982 – லெப்டினன்ட் சங்கர், ஈழப்போராட்டத்தில் இறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி (பி. 19-6-1960)
  • 2008 – வி. பி. சிங், முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1931)

சிறப்பு நாள்

  • தமிழ் ஈழம் – மாவீரர் நாள்