திங்கள், நவம்பர் 28th, 2011


கனடா Bramptonல் வசிக்கும் வாசன் கீதா தம்பதிகளின் செல்வப் புதல்வி ‘சங்கமி’க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இன்று பிறந்தநாளைக்காணும் சங்கமியை அக்கா அஜிதா, தம்பி கிருஷன் மற்றும் நிலாணியா, அபிசன், அம்மம்மா ஆகியோர் சகல செளபாக்கியங்களும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என வாழ்த்துகின்றனர்.

நவம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 332வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன.

 • 1821 – பனாமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
 • 1979 – நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர்.
 • 1987 – தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்
 • 1990 – ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
 • 2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
 • பிறப்புக்கள்
 • 1820 – பிரெட்ரிக் ஏங்கல்ஸ், ஜேர்மன் அரசியல் மெய்யியலாளர் (இ. 1895).
 • 1864 – ஜேம்ஸ் ஆலன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1912)
 • 1984 – ஆன்டுரூ போக, ஆஸ்திரேலிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

 • 1694 – மட்சுவோ பாஷோ, ஜப்பானியக் கவிஞர் (பி. 1644)
 • 1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (பி. 1861)
 • 1954 – என்றிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1901)

சிறப்பு நாள்

 • அல்பேனியா – விடுதலை நாள் (1912)
 • மவுரித்தேனியா – விடுதலை நாள் (1960)