புதன், நவம்பர் 30th, 2011


மீனம்:

பூரட்டாதி(4);உத்திரட்டாதி; ரேவதி ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

இந்த 2012-ம் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ராகு 9-ம் இடத்திலும், கேது 3-ம் இடத்திலும் சனி உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும், குரு மே மாதம் 16-ம் தேதிவரை 2-ம் இடத்திலும்  மே மாதம் 17-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.

ராகு, கேது மற்றும் குருவின் சஞ்சாரம் மே மாதம் 16-ம் தேதிவரையிலும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நற்பலன்கள் நடக்க வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தை மற்றும் தாய்வழி உறவுகள் சிறக்கும். அவர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பிரயாணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் வர்த்தகம் மேம்பட்டு சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் வரும். சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த சமயத்தில் வேற்று இன மத மக்கள் அந்நிய மொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவியாகவும் நட்பாகவும் இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்கம் நூதனமான பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள் மேன்மையான நிலையினை அடைவார்கள். ஏற்றுமதி –இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு தற்போது ஏற்ற காலமாகும். இந்த காலத்தில் இவர்கள் ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். சிலருக்கு கோவில், மடாலயம் [போன்ற  இடங்களில் கௌரவப் பட்டங்களும் பதவி, பொறுப்புகளும் கிடைக்கும். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் ஆசியும் கிடைக்கும்.சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்ளுதல் போன்ற வாய்ப்பினைப் பெருவார்கள். பூர்வீகச் சொத்து மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் மேன்மையும் கிடைக்கும். சிலர் இந்த சமயத்தில் தர்ம நியாயங்களுக்கு உட்படாத தவறான  வழிகளில் பணம் தேடுவார்கள். எதிர்பாராத வருமானம் ஈட்டுவார்கள். அதன் காரணமாக தன்னுடைய பரம்பரை குலதர்மம் ஆகியவற்றை விட்டுவிட்டு கேவலமான நிலையில் பணமே பிரதானமாக அலையும் வாய்ப்புண்டு. அரசாங்கம் ,அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகளால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுடைய எதிரிகளும்கூட இப்போது உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள்கூட உங்களை எதிகொள்ளத் துணிய மாட்டார்கள்.  . அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். இந்த சமயம் ஊதிய உயர்வு, பணிஉயர்வு கிடைக்கும். சொந்த ஊரை விட்டு வேற்றூரில் வேலைபார்த்துக்கொண்டு, குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றி உத்தரவு வரும். மேலதிகாரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பாத்திரமாவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான நிலை ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். செய்யும் தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக  லாபம் வரும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். எடுத்த காரியங்களை உங்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி திறமையாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மனைவி வழி உறவினரால் நன்மை கிடைக்கும். இதுவரை குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு கூட்டுத்தொழில் வாய்ப்பு கிடைக்கும். நல்ல கூட்டாளி கிடைப்பார். சிலர் ரிப்பேர் செலவு கொடுத்துவந்த வன்டியை விற்றுவிட்டு புதிய வண்டி வாங்குவார்கள். புதிய வீடுகட்டி கியரகப்பிரவேசம் செய்வார்கள். புதிய ஆடை ஆபரணம் வாங்குவார்கள். மாணவர்கள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். மாமன் வழி உறவினர்களால் தற்போது உதவிகள் கிடைக்கும். தொழிலாளி, வேலைக்காரர்களால் நன்மை கிடைக்கும்.மாற்று மத நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றும். உங்கள் முகத்தில் உள்ள பொலிவு அனைவரையும் கவர்ந்திழுக்கும். தொழிலில் மேன்மை ஏற்படும். புத்திர- புத்திரிகள் மேன்மை அடைவார்கள். புத்திர- புத்திரிகள் கல்வியில் ஏற்றம் அடைவார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பெரியோர்கள் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் இப்போது திருமணம் ஆகும். மாணவராக இருந்தால் தற்போது உன்னதமான நிலையை அடைவீர்கள். மனதில் தைரியமும் செயலில் சுறுசுறுப்பும் ஏற்படும். கல்வி, வங்கி,பத்திரிக்கை, எழுத்துத்துறை,ஆசிரியர் பணியில் உள்ளோர் மேன்மை அடைவார்கள். உங்களுடன் பழகும் நண்பர்களுக்கு தக்க சமயத்தில் உதவிகள் பல் செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். நல்ல வருமானம் கிடைப்பதுடன், பல பொறுப்புகளும் உங்களுக்கு ஏற்படும். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வாங்குவீர்கள். உங்களுக்கு அதிகாரமான பதவி ஒன்று கிடைக்கும்.சிலருக்கு விதவைப் பெண்களுடன் பழக்கவழக்கங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அந்தப் பெண்களுக்கு துன்பங்களைக் கொடுப்பார். உங்களுடைய பராக்கிரமும் வீரதீரச் செயல்களும் மற்றவர்களால் பாராட்டப்படும். உங்களுடைய முயற்சி இல்லாமலே வருமானம் உங்களைத் தேடி வரும். ஆகவே இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும்.

சிலர் மத விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி அதன்மூலம் நல்ல புகழை அடைவார்கள். சிலர் அதைப் பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். அதனால், எதிர்காலத்தில் இவர்களுடைய கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் வெற்றிபெற்று சாதனை வீரராக வலம் வருவார்கள். குடும்பத்தாரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேண்டியதையெல்லாம் வாங்கித் தருவீர்கள். அதனால் குடும்பத்தினர் உங்கள்மீது அன்பைப் பொழிவார்கள்.

கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தந்தை உடல்நலம் பெறுவார். மருத்துவச் செலவுகள் குறையும். மாமன் மற்றும் மாமன் வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். அரசு வங்கியில் கடன்பெற்று தொழில் தொடங்கவும் இது நல்ல நேரம். இதுவரை அனுபவித்து வந்த துன்பம் தொல்லை வறுமை அனைத்தும் நீங்கி வளம் பெறுவீர்கள். இதுவரை குடத்துக்குள் இட்ட விளக்காக உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த நிலை மாறி இனிமேல் உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரிய வரும். சொன்னது சொன்னவாறு நடந்துகொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்வீர்கள். அதனால் நாணயம் மிக்கவர் என்று பெயரெடுப்பீர்கள். இதுவரை வராமல் இருந்த கடன்கள் இப்போது வசூலாகும். தற்போது உங்களுக்கு எதிராக உங்கள் எதிரிகளால் செய்யப்படும் காரியங்கள் கூட சாதகமாக மாறி உங்களை மேம்படுத்தும்.

இனி மே மாதம் 17-ம் தேதியன்று குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்துக்கு மாறப்போகிறார். அந்த சஞ்சாரம் நல்லது என்று சொல்ல முடியாது. அதோடு சனியின் 8-ம் இடத்து சஞ்சாரமும் அவ்வளவு சுகமில்லை. இந்தசஞ்சார பலன்களைப் பார்ப்போம்.

நீங்கள் செய்யும்  செயல்கள், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் தங்கள் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலை செய்வதற்காக வெளியூருக்கு சென்றுவிடுவார்கள். உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சகோதரர்கள் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். அவர்களுடன் நல்லுறவு பாதிக்கப்பட்டு கருத்து வேறுபாடுகள் ஏற்டும். கல்வி கேள்விகலில் தடை ஏற்படும். படிப்பில் கவனம் செல்லாமல் போகும். மனதில் தைரியம் இல்லாமல் எந்த வேலைக்கும் தயங்கியபடி தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பீர்கள். பேச்சில் வேகம் காணப்படும். யாரிடமும் சட்டென்று கோபித்துக்கொள்வீர்கள். அதனால், பல விரோதங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரும். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும், உங்கள் உறவினர்களுக்கும் ,உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு பாதிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் யாருக்காவது வாக்குறுதி கொடுத்துவிட்டு தவிப்பீர்கள். மேலும் நாணயம் தவறுவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எதிர்பாராத வருமானம் கிடைத்தால்கூட கையில் காசு இல்லாமல் போகும். ஆனால், நீங்கள் பெரும் குழப்பத்தில் தத்தளிப்பதால் கையில் காசு இல்லாத சமயத்தில் அவசியமான செலவுகளை விட்டுவிட்டு அனாவசியமான செலவுகளை செய்வீர்கள். பிறகு அவசியத்துக்கு தவிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குஏறையும். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். உங்கள் வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். தெய்வதரிசனம் குலதெய்வ வழிபாடுகள் த்ள்ளிப்போகும். சிலர் கோவில் கட்டுமானப் பணிகளிலும் தடை ஏற்பட்டு திண்டாடுவார்கள்.  சிலருக்கு தீர்த்த யாத்திரை தட்டிப்போகும். தான தரும காரியங்கள் செய்யமுடியாமல் தடை ஏற்படும். சிலருக்கு கல்வியில் தடைகள்ஏற்படும். சிலர் அவசிய செலவுகளுக்காக நகைகளையும் சொத்துக்களையும் அடகு வைப்பார்கள். ஞானிகள், சாதுக்கள், பெரியோர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாவார்கள். தொழிலில் மந்த நிலை ஏற்படும். சிலருக்கு அலுவலகத்தில் வேலைப்பளு ஏற்படும்.  சிலர் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வேண்டாத பணிமாற்றம் ஏற்படும். கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசம் ஏற்படலாம். அல்லது வேறு சிக்கல் உண்டாகலாம். சிலருக்கு புத்திரர்களின் போக்கு கவலையைக் கொடுக்கும். அவர்களது கல்வி மற்றும் முன்னேற்றம் தடைப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் தாமதமாகும். அவர்களுக்கான சுபகாரியங்கள் தடைப்படும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையற்ற பிரச்சினைகளும் ,மனக்கசப்பும் ஏற்படும். பிதுர் காரியங்கள் தள்ளிப்போகும். அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளால் தொல்லை ஏற்படும்.உங்கள் அந்தஸ்து குறையும்.

மூன்றாமிட குருவோடு அஷ்டமச் சனியும் சேர்ந்துகொள்வதால், கொஞ்சம் கடுமையான பல்ன்களாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. எந்த செயலைச் செய்தாலும் குறுக்கீடும் அதனால் மனம் தளர்வதுமன சூழ்நிலை ஏற்படும். பணவரவைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொது இடங்களில் அதிகம் பேசி பிரச்சினையை வரவழைத்துக்கொள்வீர்கள். சகோதரர்கள் உதவுவதாக எண்ணி சிரம நிலையை உருவாகி விடுவார்கள். எக்காரணம் கொண்டும், விலை உயர்ந்த பொருட்கள் சொத்து ஆவணங்களைபிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தின் தேவைகளை நிறவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் ஊள்ளவர்களால் மிகவும் கஷ்டப்படுவீர்கள். அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்படும். ரியல் எஸ்டேட் , நிதிநிறுவனம், கலவி நிறுவனம்,  ட்ரேவல்ஸ், லாட்ஜ், ஹோட்டல்ஸ்,டிபர்ட்மென்டல் ஸ்டோர், ஆட்டோமொபைல், மின்சார ,மின்னணு சாதனங்க்ள ஃபர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி  முதலிய தொழில்களில் ஈடுபட்டவர்கள் பின்தங்கிய நிலை காண்பர். மற்ற தொழில் செய்பவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கும். வாகன வகையில் அதிகம் செலவாகும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பெண்களுக்கு பணியில் கவனமின்மையால் அவப்பெயர் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான விஷயங்களில் தாமதம் ஆகும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். உங்களின் சிரமங்களைக் கண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாததால், நீங்கள் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். விவசாயிகள் நிலம் சம்பந்தமான பத்திரங்களையும் அத்ற்குண்டான ஆவணங்களையும் பிறரை ந்ம்பி ஒப்படைக்கக்கூடாது. கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும்.அஷ்டமச்சனி சிலசமயம் பணவரவைக் கொடுப்பார். ஆனால், நீங்கள் ஏமாந்துவிடவேண்டாம். பின்னாலேயே அதிக செலவைக் கொடுத்து கடனாளியாக்குவார். கஷ்டத்தில் உங்களைச் சிக்க வைப்பதற்காகவெ அஷ்டமச்சனி இந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவார். கூட்டுத் தொழில் செய்வோருக்கு பார்ட்னருடன் பிரச்சினை ஏற்பட்டு கோர்ட் வழக்குவரை போகும். நல்ல செழிப்பான சூழ்நிலை இருக்கும். அது ஒரு  நிஜத் தோற்றம் இல்லை என்பதுபோல ஒரு பெரிய சரிவை சந்திக்க நேரும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன்வேலை செய்யும் பெண்ணிடம் அளவுக்கு மீறி உறவாடி பெயரைக் கெடுத்துக்கொள்ள நேரும். குடும்ப கௌரவமும் இதனால் பாழாகும்.  இந்தசனி உச்ச சனியாக இருப்பதால் ஒரேயடியாக கவிழ்த்துவிட மாட்டார்.  நிதிநிலைமை ரொம்ப மோசமாகி விடாமல் காப்பாற்றுவார். ஆனால், அஷ்டமச்சனி என்பதால், எதையும் உறுதியாக நம்பிவிட முடியாது.

இப்படியாக கிரகங்களின் பலவித சஞ்சாரங்களால், ஏற்படும் பலன்களைப் பார்த்தோம். மொத்தத்தில் ஆண்டின் பிற்பகுயில்தி மட்டுமே கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். முற்பகுதி யோகமாக இருக்கும்.  எதையும் தெய்வ வழிபாட்டின் மூலம் சரிபண்ணிக்கொள்ளலாம்.

பரிகாரம்:

மே மாதம் 17-ம் தேதி முதல் குரு 3-ம் இடத்துக்கு செல்வது நல்ல சஞ்சாரமல்ல. எனவே வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று கொண்டக்கடலை மாலையும் மஞ்சள் நிற மாலையும் சாத்தி வழிபடவும். சனீஸ்வரனின் 8-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லை. சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள்தீபம் ஏற்றவும். தினமும் காக்கைக்கு அன்னமிடவும். . கறுப்புப் பொருள்களை தானம் செய்யவும். வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும். ‘ஹனுமான் சலீஸா’ படிக்கவும்.

பல் வளமும் சிறப்பும் பெற்று புத்தாண்டில் புது மகிழ்ச்சி காண வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறோம்.

கும்ப ராசி

 

இந்த வருடம் சனியின் சஞ்சாரம் உங்களுக்கு சாத்கமாக இருக்கிறது. அஷ்டமசனியின் பிடியிலிருந்து நீங்கள் விடுபட்டது ஒன்றே போதும். சொல்லவொண்ணா வேதனைகளை அனுபவித்துவந்த நீங்கள், இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். ஆனால் குருவின் சஞ்சாரமும் ராகு கேதுக்களின் சஞ்சாரங்களும் சரியாக இல்லை. எனவே இனி பலன்களைப் பார்க்கலாம்.

தொழில் சம்பந்தமான மாற்றம் ஏற்படும். சிலர் பழைய தொழிலைக் கைவிட்டு புதிய தொழிலை மேற்கொள்வார்கள். சிலர் தற்சமயம் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்ய புதிய யுக்திகளையும் புதிய டெக்னிக்குகளையும் பயன்படுத்துவார்கள். தொழில் சம்பந்தமாக இருக்கும் இடம்விட்டு வேறு இடத்துக்கு செல்வார்கள். என்னதான் நீங்கள் முயபன்றாலும்,தொழிலில் முன்னேற்றம் இருக்காது. தொழில் காரணமாக சிலர் பயணங்களை மேற்கொள்வார்கள். அதன் காரணமாக அதிகமான அலைச்சலால், உங்கள் உடல்நிலை மோசமடையும். சுகக்குறைவு, உடல் அசதி, காலம் தாழ்த்தி உண்ணுதல், உறங்குதல் போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும். சிலர் கடன் வாங்கித் தொழிலை மேம்படுத்த முயல்வார்கள். இருப்பினும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் அடுத்தவர் தலையீடு இருந்துகொண்டிருக்கும். இது உங்களுக்கு எரிச்சலையும் மனவேதனையையும் ஏற்படுத்தும். எவ்வளவுதான் புத்திக்கூர்மையுடனும் திறமையுடனும் செயல்பட்டாலும்,முன்னேற்றம் என்பது உங்கள் உழைப்புக்கு ஏற்ற அளவு  இல்லாமல் போகும். சகோதரர்களுடன் கருத்துவேற்பாடுகளும் விரோதங்களும்  உண்டாகும். சண்டையும், வம்பு வழக்குகளும் ஏற்படும். நிலம் வீடு இவற்றால் விரயச் செலவுகள் ஏற்படும். ரசாயனம், உரம்,ரியல் எஸ்டேட் மற்றும் மருந்துப் பொருள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இது சோதனையான காலம். இந்த ராசிக்காரர்கள் தற்சமயம் போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டால் நிச்சயம் மாட்டிக்கொள்வார்கள்.  உங்கள் மனோபலம் குறையும். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்வதில் மனதிற்குள் தயக்கம் ஏற்படும். சிலரது குடும்பத்தில் வயதான ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும். துக்க நிகழ்ச்சிகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. தேவையற்ற வம்பு வழக்குகள், சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடிவரும். சிலர் கோர்ட், கேஸ், வழக்குகள் என்று அலைந்து திரிந்து சண்டை சச்சரவுகளுக்கு ஆளாவார்கள். சிலருக்கு தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் கருத்தொற்றுமை ஏற்படாமல் விவகாரங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். மேலதிகாரிகள் கடிந்துகொள்வார்கள். குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். தற்போது வழக்குகளிலிருந்து தீர்ப்பு வருமானால், அது உங்களுக்கு சாதகமாக இருக்காது. விரயச் செலவுகள் அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். அலைச்சல் அதிகரிக்கும். தூக்கம் கெடும். அதனால் ஆதாயம் கிடைக்காது. புத்திர-புத்திரிகளால் மனக்கவலை அதிகரிக்கும். அவர்களின் போக்கு உங்களுக்கு வேதனை தரும். புதல்வர்களின் காரணமாக சிலர் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு சிரமப்படுவார்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை உண்டாகும். தாய் மற்றும் தாய் மாமனால் தொல்லை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப்போகும்.தெய்வ காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். நீங்கள் சும்மா இருந்தாலும் வேண்டாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் முகத்தில் பொலிவு குறையும். எந்தக் காரியத்தையும் முடிக்க முடியாமல் தள்ளிப்போகும். வேலைக்காரர்கள், தொழிலாளர்களால், தொல்லை துயரங்கள் எற்படும். மனதில் சோம்பலும் குழப்பமும் தேவையில்லாத கவலையும் பயமும் இருந்துகொண்டே இருக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் குறையும். வருமானக் குறைவினால், குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப்போகும். வேலை வாய்ப்புகளிலும் தடை ஏற்படும். கல்வியில் கவனம் குறையும். பெரியோர்கள், ஞானிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். சிலருக்கு பணம் ,பொருள் தொலைந்துபோகும். தாயாரின் உடல்நலம் கெடும். தாய்வழி உறவுகளால்பிரச்சினை ஏற்படும். பெரியோர், ஞானிகளின் கோபத்துக்கு ஆளாவதுடன் அவர்களுடைய விரோதத்துக்கும் காரணமாவ்ர்கள். குடும்பத்தாரிடம் உங்கள் கோபதாபங்களைக் காட்டுவதால், குடும்பத்தார் உங்களிடம் கோபப்பட்டு எரிச்சலைடைவார்கள். உங்களிடம் வேலை பார்த்து உங்களிடம் தொழில் கற்றுக்கொண்ட ஒரு தொழிலாளியே இப்போது உங்களுக்குப்  போட்டியாக தொழில் தொடங்கி உங்களுக்கு பிரச்சினையாவார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு ஃபைலைத் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். அரசுக்கு சொந்தமான செக்,பணம் இவற்றை தொலைத்துவிட்டு அல்லாட வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். இதனால், மேலதிகாரிகளிடம் தண்டனை பெறவேண்டிய நிலை ஏற்படும். வெளியூர் செல்லும்போது வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புண்டு. உங்கள் உடல்நலம் கெட்டு மருத்துவச் செலவு வைக்கும். சிலர் குடும்பத்தாருடனும் உறவினருடனும் கோபதாபம் ஏற்பட்டு வீட்டை விட்டுச் செல்லும் நிலை வரும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடனும் பிர்ச்சினை ஏற்பட்டு நிம்மதி கெடும். சிலருக்கு வண்டி வாகனங்களில் ரிப்பேர் ஏற்பட்டு விரயச் செலவு ஏற்படும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டவர்களும், வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கும் அந்த வேலை பாதியில் நின்று விடும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நஷ்டம் ஏற்படும். இதயம், நுரையீரல் சம்பந்தமான நோய் ஏற்படும். சிலர் சொத்து சுகங்களை இழந்துவிட்டு வேறு ஊருக்கு செல்வார்கள். சிலர் தீய பழக்கங்களைக் கற்றுக்கொண்டு அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.

குருவின் சஞ்சாரத்தால் சில நன்மைகளும் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைத்து அவர்களால் உதவி கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை நலம் ஆரோக்கியம் பெறுவார். தந்தை மேன்மை அடைவார். சனியுடன் சேர்ந்து குரு சில நன்மைகளைச் செய்தாலும், பெரும்பாலும் மேலே சொன்ன சில கஷ்டங்களும் வந்து சேரும். இனி, சனி சஞ்சாரத்தைப் பார்க்கலாம்.

சனியின் 9-ம் இடத்து சஞ்சாரம் நன்றாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். இந்தவருடம் சாதகமான சனிப் பெயர்ச்சியினால், வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். மாலை கிடைக்காத்வர்களுக்கு மாலை கிடைக்கும். மழலை கிடைக்காதவர்களுக்கும் மழலை கிடைக்கும். சகோதரர்கள் அடிக்கடி உங்களுக்கு பிரச்சினை கொடுத்தாலும், முடிவில் உங்கள் கருத்துக்கு ஒத்துவருவார்கள். தொழில்ரீதியாக உடன்பிறப்புடன் சேர்ந்து செய்து வந்த கூட்டு வியாபாரம் இப்போது  உங்கள் உடன்பிறப்பு உங்களை விட்டுப் பிரிவதால் பின்னடைவை சந்திக்க விடாமல் தக்க ஒருவரின் துணையோடு எடுத்து நடத்தி செயல்படக்கூடிய நிலை உருவாகும். எதிரிகள் சரணடைவர். இல்லம் தேடி நல்ல செய்தி வரும். உத்தியோக மாற்றம், இலாகா மாற்றம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு குறிப்பிட்டபடி வந்து சேரும். வங்கிக் கடன் பெற்று சுய தொழில் செய்வீர்கள். பொருளாதாரப் பிரச்சினை அகலும். பொருள் வளர்ச்சி கூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வுகள், வியாபாரத்தில் நல்ல பணவரவு ,தொழிலுக்காக வெளியூர்- வெளிநாடு செல்லுதல் என்று நல்ல பலன்கள் கூடிவரும். படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருபவர்களுக்கு ந்ல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். பிரச்சினையால் பிரிந்து வாழும் தமப்தியரை அவர்களது குடும்பத்திலுள்ள பெரியவர்கள் சேர்த்து வைப்பார்கள். மகன்-மகள் திருமணம் சிறப்பாக நடைபெறும் யோகம் வந்துவிட்டது. பூர்வீகச் சொத்து குடும்ப உறவுகள் போன்ற பிரச்சினைகளில் இருந்துவந்த வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வந்து கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வரும். மூட்டு வலி , மூச்சிறைப்பு ,சர்க்கரை நோய் , நெஞ்சுவலி , ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களிலிருந்து மீண்டு ஆரோக்கியம் பெறுவீர்கள். விவசாயம் செய்பவர்கள் பெருத்த லாபத்தை ஈட்டுவார்கள். எந்தத் தொழில் செய்தாலும் அதில் சிறந்த விருத்தி வந்து சேரும்.ஆரோக்கியம் பெறுவார்கள். மிகப் பெரிய நல்ல மாற்றங்கள், அதிர்ஷ்ட திருப்பங்கள் மீண்டிம் தலையெடுக்கப்போகிறது. விட்ட கோட்டையை மீண்டும் பிடித்தே தீருவீர்கள். தோல்விமேல் தோல்வி ஏற்பட்டு மிகுந்த கவலையில் இருந்த நீங்கள் இப்போது வெற்றிமேல் வெற்றியைக் குவிக்கப் போகிறீர்கள். கவலை ஏற்படுத்திய கடன்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். சொத்துக்கள் குவியும். இப்படிப்பட்ட நல்ல நேரத்தை உபயோகித்துக்கொள்வீர்கள். நீங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வராமல் நின்றுபோன பணம் தற்போது வந்து சேரும். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். தொழிலில் இருந்துவரும் பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் இருந்துவரும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணத்தால் நன்மை கிடைக்கும்.  இப்படியாக சனிபகவானின் 9-ம் இடத்து சஞ்சாரம் நன்மைகளைக் கொடுக்கும். குருவின் சஞ்சாரம் சரியில்லாவிட்டாலும், சனி குரு பார்வை பெறுவதால் நல்ல பலன்களையே கொடுப்பார்

இந்தப் புத்தாண்டு நல்லதும் கெட்டதும் கலந்ததாகவே இருக்கும்.  அஷ்டமச்சனியின் பிடியிலிருந்து நீங்கள் விடுபட்டது நல்ல ஆரம்பத்தின் அறிகுறியாகும்.

பரிகாரம்:

குருவின்  3 மற்றும் 4-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லாததால், வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்த்தி கோவிலுக்குச் செல்லவும். கொண்டக்கடலை மாலையும் மஞ்சள்பூ மாலையும் சாத்தி வழிபட்வும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. எனவே துர்க்கையம்மனை வழிபடவும். கேதுவின் சஞ்சாரமும் சரியில்லை. அதனால், வினாயகர் கோவிலுக்குச் சென்று கோவிலைச் சுத்தம் செய்து சேவை புரியவும்.

இந்தஆண்டு உங்களுக்கு வளம் பொங்கும் ஆண்டாக விளங்க வாழ்த்துக்கள்!!.

மகர ராசி

இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு நல்ல ஆண்டாகவே இருக்கும். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் மே மாதம் 16-ம் தேதிவரையும்,  மே மாதம் 17-ம் தேதி முதல் 5-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார். சனி உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும்,.கேது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள் .இனி பலன்களைப் பார்க்கலாம்.

கேது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது நல்லதல்ல. அதுபோல குரு உங்கள் ராசிக்கு மே மாதம் 16-ம் தேதிவரை 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதும் சரியில்லை. இதனால், புத்திர –புத்திரிகள் வகையில் பலவித மனக் கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருடைய புத்திர –புத்திரிகள் வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். உங்கள் புதல்வர்களின் விஷயத்தில் செலவினங்கள் அதிகரிக்கும். நீங்கள் போதைப்பொருள் உபயோகியத்து அதிலிருந்து விடுபட முடியாமல், அதிலேயே அமிழ்ந்துபோய்விட நேரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சினைகளும் வில்லங்கங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வழியுண்டு. சூதாட்டத்தில் மயங்கி அதில் வரும் சொற்ப லாபத்தை நம்பி, மீண்டும் மீண்டும் அதிலேயே மயங்கிஈடுபட்டு கைப்பொருளை இழப்பீர்கள். லாகிரி வஸ்துக்களை விட்டுவிடாமல் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்வீர்கள். அரசு சம்பந்தமான விஷயங்களில் இழுபறி ஏற்படும். சிலருக்கு மந்திர தந்திரங்களில் ஆர்வமேற்படும். மாணவர்கள் கல்வியில் நாட்டம் குறைந்து காதல் விஷயங்களில் மாட்டிக்கொண்டு படிப்பை கெடுத்துக்கொள்வார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படக்கூடும். உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு தலைவலி, தலையில் கட்டி, காய்ச்சல் போன்ற தலை சம்பந்தமான நோய்கள் உண்டாகும். சிலரது குடும்பத்தில் பாகப் பிரவினை ஏற்படும். உங்கள் பங்கு சொதப்பப்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலம் பாதிக்கப்படும். குடும்பத்துக்குள் தேவையற்ற பிரச்சினைகள் வரும். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தாலும், அரசு அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் பாதிப்புகள் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். உங்கள் தந்தையே பிரச்சினைக்கு காரணமாகக்கூட இருக்கும். சொத்து சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும். சொத்து சம்பந்தமாக வம்பு வழக்குகள் வந்து சேரும். உறவுகள் பகையாகலாம். தேவையான சமயத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்படுவதால், சிரமங்கள் தலை விரித்தாடும். உங்கள் சொந்த பந்தங்களிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்ட்டினீர்கள் என்றால் , அவர்கள் உங்களைவிட்டுப் பிரிந்துபோய்விடுவார்கள். எவ்வளவுதான் கட்டுப்பாடாக இருந்தாலும் விரயச் செலவுகள் அளவுக்கு அதிகமாகவே இருக்கும்.கல்வியில் மந்த நிலை ஏற்படுவது மட்டுமின்றி கிடைக்கக்கூடும் என்று நம்பிக்கையுடன் இருந்த வேலை வாய்ப்புகூட தவறிப்போகும். இதன் காரணமாக உங்கள் மனதில் துக்கம் மேலோங்கும். இதைக் காரணமாக வைத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தினர் உங்கள் மனம் புண்படும்படி , உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி உங்களை நோக அடிப்பார்கள். சிலருக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப்போகும். இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் யாருக்கும் பண விஷயத்தில் வாக்கு கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப்போட்டால் அவர்களுக்காக சிறை செல்லக்கூட நேரும்.அல்லது அவர்கள் கடனை நீங்களே அடைக்க வேண்டியிருக்கும். இந்த ராசியில் உள்ள தாய்மார்கள் நகைகளைப் போட்டுக்கொண்டு கூட்டத்தில் போனால், நகைகளைத் திருட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். சிலர் தங்களுடைய பணக் கஷ்டத்திற்காக நகைகளை விற்க வேண்டியிருக்கும். சிலருக்கு அவர்களுடைய வண்டி அடிக்கடி பழுதுபட்டு ரிப்பேர் செலவு வைக்கும். சிலருக்கு கால்நடைகளால் செலவு ஏற்படும். சிலர் தங்கள் நிலம் , வீடு இவைகளை விற்கவேண்டிய சூழ்நிலை வரும். சிலருடைய தந்தைக்கு சில பிரச்சினைகளும் வில்லங்க விவகாரங்களும் ஏற்படும். உள்ளுக்குள் புகைந்துகொண்டிருக்கும் சில பிரச்சினைகள் இப்போது வெளியே வரும். தாயாருக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய் வழி உறவினர்களுடன் பகையும் கருத்துவேறுபாடுகளும் ஏற்பட்டு கலகத்தில் முடியும். சிலருக்கு குல தெய்வ வழிபாடுகளும் தெய்வகாரியங்களும் தட்டிப்போகும். சிலர் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்து அது பாதியில் நின்று போகும். வீடு கட்டும் கட்டுமானப் பணிகளும் தடைப்படும்.  குருமார்கள், சாதுக்களின் தரிசனம்கூட தட்டிப்போகும். உங்களுடைய புத்திசாலித்தனம் இப்போது பயன்படாது. சகோதரர்களால் விரயமும் துன்பமும் ஏற்படும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்தப் பிரயாணங்களால் பைசா பிரயோசனம் இருக்காது. தேவையற்ற வம்பு வழக்குகள் , வீணான சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு மன நலம் ,உடல்நலம் பாதிக்கப்படும். நீதிமன்றத் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது.

இனி நற்பலன்களைத் தரக்கூடிய கிரகங்களான சனியும், ராகுவும் மே மாதம் 17-ம் தேதிக்குப்பின் சஞ்சாரம் புரியக்கூடிய குருவும் என்னென்ன நற்பலங்களை வழங்குவார்கள் என்று பார்க்கலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். அதன் காரணமாக தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். இந்த சமயத்தில் உங்களுக்கு பல வ்ழிகளிலிருந்தும் வருமானம் வரக்கூடும். இதன் மூலம் கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான சூழ்நிலை ஏற்பட்டு நாணயமானவர் என்று பெயரெடுப்பீர்கள். பணியாட்கள் விசுவாசமாக இருப்பார்கள். பெண்களால் நன்மையும் ,புத்திரர்களால், மனதுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். அலுவலகத்த்ல் பணிபுரிபவர்களுக்கு து சிறப்பான காலமாகும். விரும்பிய இடமாற்றம், பணிஉயர்வு, ஊதிய உயர்வு முதலியவை கிடைக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவதோடு உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்து அரிய வெகுமதிகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.புதிய வாகனமும், கால்நடைகளும் அமையும். ஆடை ஆபரணங்கள் விலை உயர்ந்த பொருள்கள் யாவையும் வாங்கிக் குவிக்கும் நேரம் இது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பினால் நல்ல லாபம் அடைவார்கள். சிலர் வீடு கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வார்கள். சிலருக்கு நிலங்கள்,வீட்டு மனைகள் தேடி வரும்.

தாயார் மேன்மை அடைவார். சிலருக்கு தாயார் மூலமாக பல நன்மைகள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு பொருளாதார ரீதியாக தடைப்பட்ட கல்வி தற்போது தொடர்வதற்கான வாய்ப்பு உண்டு. கல்வி ஸ்தாபனங்களில் வேலை பார்ப்பவர்கள் இப்போது மேன்மை பெறுவார்கள். குலதெய்வ வழிபாடு, கோவில் குளங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் முதலியவற்றை மேற்கொள்வார்கள் .சிலர் இஷ்ட தெய்வங்களுக்கு கோவில் கட்டுவார்கள். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்களது பெருமை இப்போது உங்களது தெவீகத் திருப்பணிகள் மூலமும், சமூக சேவைகள் மூலமும் வெளி உலகுக்குத் தெரியவந்து குன்றின் மேலிட்ட விளக்காக ஜொலிப்பீர்கள். இதுவரை உங்களைவிட்டு விலகி இருந்த உற்றார் உறவினர்கள் இனி உங்களைத் தேடி வருவார்கள். இதன் காரணமாக வீட்டில் விருந்தினர் வருகை அதிகமாகி மகிழ்ச்சி பொங்கும். கடந்த காலத்தில் பணக்கஷ்டத்தை அனுபவித்து வந்ததால் குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருந்தீர்கள். இப்போது பல வழிகளிலிருந்தும் வருமானம் வந்து செழிப்பாக இருப்பதால், குடும்பத்தினரின் தேவைகளை காலமறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதனால், குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது மிகவும் பிரியம் காட்டுவார்கள். இதனால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும். உங்கள் முகத்தில் ஒரு பொலிவு இருக்கும். உங்கள் அந்தஸ்து செல்வாக்கு இவை உயரும். சகலவித சௌகரியங்களும் பெருகும். இதுவரை தொல்ல செய்துவந்த உடல் நோய்களும் நீங்கும். வேலை கிடைக்காமல் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அவர்கள் படிப்பிற்கேற்ற நல்ல சன்பளத்தில் வேலை கிடக்கும்,. ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் தீர்ந்து ,சொத்து உங்கள் கைக்கு வரும். சாதுக்கள், ஞானிகள், குருமார்கள் இவர்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும். புதல்வர்களின் கல்வி, வேலை வாய்ப்பு முதலியவை சிறப்படையும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். சகோதர சகோதரிகள் மேன்மை அடைவார்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தந்தை மேன்மை அடைவார்.  உங்களுக்கு தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். இந்தக் காலத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் ஆககூடிய வேலைகள் மளமளவென முடிவடயும். கடன் சுமை குறையும். நீங்கள் கொடுத்திருந்த கடன் வசூலாகும்.  திரும்ப கைக்கு வராது என்று இழுபறியாக இருந்த கடன்கள் இப்போது வசூலாகிவிடும். கடந்த காலத்தில் கோர்ட் ,கேஸ் என்று அலைந்து பல தொல்லைகளுக்கு ஆளானவர்கள் இப்போது அவற்றிலிருந்து விடுபடுவது மட்டுமின்றி தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக வரும். சிலர் ஆடம்பப் பொருள்களை வாங்கி மகிழ்வர். விருந்து கேளிக்கை என்று உல்லாசம் பொங்கும் நேரம் இது. பிரபலமான பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். அனுகூலமான செய்திகள் வரும்.

தொழில் இல்லாதவர்களுக்கு ந்ல்ல தொழிலும், ஏற்கெனவே செய்துவரும் தொழிலில் நல்ல விருத்தியும் உண்டாகும். கூடுதல் வருமானத்துக்காக மற்றொரு தொழிலும் புதிதாக தொடங்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல தற்போது செய்துவரும் வியாபாரத்தோடு மேலும் ஓர் வியாபாரத்தையும் இணைத்துச் செய்வதற்கான வாய்ப்பும் அமையும். வெளிநாடு சென்று, தொழில், உத்தியோகம் செய்ய நினைப்பவர்களுக்கும் நினைத்தது நடக்கும். சிலருக்கு ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் ஈடுபாடு உண்டாவதால், அத்தொழிலில் ஈடுபட்டு ஏற்றம் பெறுவர். வாடகை வீட்டில் இருப்போர் சொந்த வீடுகட்டி குடியேறுவர். அதிக ரிப்பேர் செலவு கொடுத்துவந்த பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பெருகும்.  நீங்கள் எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கூடும்.

இப்படியாக ராஜ கிரகங்களான சனியும், குருவும் காத்து அருள் புரியும்போது, நீங்கள் இந்தப் புத்தாண்டில் ஏற்றம் பெறலாம். இது ஒரு மகிழ்ச்சியூட்டும் புத்தாண்டு என்பதில் சந்தகமில்லை.

பரிகாரம்::

கேதுவின் 5-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லை. அதனால் நீங்கள் ஒரு வினாயகர் கோவிலுக்குச் சென்று செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கோவிலைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவும். கொள்ளுதானம் செய்யவும். குருவின் சஞ்சாரம் ஆண்டின் முன்பாதியில் சரில்லாமல் உள்ளதால் நீங்கள் வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று, கொண்டக்கடலை மாலையும மஞ்சள் மாலையும் சாத்தி வழிபடவும்.

புத்தாண்டு இனிதே சிறக்க வாழ்த்துக்கள் !

தனுசு ராசி

 

இந்த 2012-ம் ஆண்டு, உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த ஆண்டின் கிரக சஞ்சாரங்களைப் பார்க்கும்போது, சனி உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குரு பகவானும் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராகு 12-ம் இடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இதில் சனி, கேது, குரு போன்ற கிரகங்கள் மே மாதம் 16-ம் தேதி வரையிலும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிக்கிறார்கள். ராகுவும், குருவும் மே மாதம் 17-ம் தேதி முதல் செய்யப்போகும் சஞ்சாரங்களும், உங்களுக்கு சாதகமாக இருக்காது.  ஆனால், சாதமகமற்ற பலன்களையும், குரு பகவானின் சாதக சஞ்சாரம் மாற்றி விடும். இனி பலன்களைப் பார்க்கலாம்.

கேதுவின் 6-ம் இடத்து சஞ்சாரமும் சனியின் 11-ம் இடத்து சஞ்சாரமும், குருவின் மே 16-ம் தேதிவரையிலான சஞ்சாரமும், தக்க அளவில் தொழில் துறையில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார்கள். உங்களுக்கு இதுவரை தொல்லை கொடுத்து வந்த எதிரிகளையும், போட்டியாளர்களையும் அழித்தொழிப்பார்கள். சிலருக்கு பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்பு ஏற்படும். அதே சமயம் தொழிலை வளப்படுத்தி மேம்படுத்தும் வாய்ப்பு உண்டாகும் .வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் பண வரவு கிடைப்பதற்கும் வாய்ப்புகள்  உள்ளன. சிலர் நூதனமான பொருள் விற்பதன் மூலம் நல்ல லாபத்தை அடைவார்கள். இதுவரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தொல்லை கொடுத்துவந்த உடல்நலிவுகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். அதே சமயம் இதுவரை இருந்துவந்த மருத்துவ செலவுகள் இனிமேல் இருக்காது. உங்கள் கௌரவம் உயரும். தேவைக்கேற்ற பணம் கிடைப்பதால்,கொடுக்கல்-வாங்கலில் நல்ல சூழ்நிலை நிலவும். எப்படியாவது உங்கள் நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்வீர்கள். முயற்சிகள் அனைத்திலும் உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகள்,பொதுத்துறையில் உள்ளவர்கள், மக்கள் மத்தியில் பணிபுரிபவர்கள்,பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் மேன்மையடைவார்கள். தொலைத் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கும், கலைத்துறையில் உள்ளவர்களுக்கும் பெயரும் புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய பட்டம், பதவிகள் கிடைக்கும். சேவைத் துறையில் உள்ளவர்கள் மேன்மையடைவார்கள். அவர்களுக்கு பதவி உயர்வுகள், பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். இதுவரை சுபகாரியபங்களில் ஏற்பட்டிருந்த தடை நீங்கி சுகாரியங்கள் நல்லபடியாக நடந்தேறும். இதுவரை விடை தெரியாமல் இருந்த பிரச்சினைகள் வெளிப்பட்டு நல்ல தீர்வுக்கு வரும். வேலைப்பளு அதிகமாகி அதற்குரிய வருமானம் கிடைக்கும். தாயார் உடல்நலம் பெறுவார். தாய்வழி உறவினர்களால், தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு, மண், மனை, நிலம், வீடு இவைகளை வாங்கும் பாக்கியத்தை அடைவார்கள். பொழுதுபோக்கு அம்சங்களான விருந்து கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதிற்குள் அசாத்தியமான துணிவு ஏற்படும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவார்கள். கோர்ட் கேஸ்களிலிருந்து தற்போது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். எந்தச் செயல் செய்தாலும் அதில் நல்ல பலன் கிடைக்கும். உறவினர் ,நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். புத்திர-புத்திரிகள் மேன்மையடைவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகளும், நல்ல மதிப்பும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான காரியங்கள் நடைபெறும்.

மேலும் இந்த சனிப்பெயற்சியில் மிகுந்த நன்மையை அடையப்போவதில் நீங்களும் ஒருவர்தான். உத்தியோகத்தில் வர வேண்டிய உயர்வுநிலைகள் தானாகவே வந்து சேரும். சிலருக்கு உயர் பதவிகளும், உயர்ந்த சம்பளமும் வந்துசேரும். அலுவலகத்திலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பக்கூடிய கௌரவமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த பணம் இல்லையே என்று கவலைப்படுவோருக்கு தேவையான விதத்தில் தக்கசமயத்தில் மூலதனமும் வந்துசேரும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு உயர்வான கம்பெனியிலிருந்து நல்ல சம்பளத்தில் நல்ல வேலைக்கு அழைப்பு வரும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடிக்கொண்டு ஓடிவரும். தொழிலில்கூடுதலான அபிவிருத்தியும், புதிய மாற்றுத் தொழில்களும் அமையும். நீங்கள் உங்கள் உள் மனதில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற அதிர்ஷ்டமான வாய்ப்புகள், உங்கள் வாய்ச் சொல்லுக்குப் புகழ் ஆகியவை கிடைக்கும். நடைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு சிறப்பைத் தரும். கணவன்- மனைவி பிரிவால் வாடுபவர்கள்கூட உறவினர்கள் முயற்சியில் ஒன்று சேருவார்கள். வாடகை வீடு ,இனி கிடையாது. சொந்த வீட்டுக்குப் போகும் நேரம் வந்துவிட்டது. சொந்த வீட்டை இன்னும் வசதியாக மாற்றி கட்டிக்கொள்வீர்கள். தீராத நோய்களான சர்க்கரை நோய், இருதயநோய், ரத்த அழுத்தம் முதுகுவலி, மூட்டுவலி போன்ற நோய்கள் படிப்படியாகக் குறைந்து ஆரோக்கியம் ஏற்படும். புதிய குடும்ப உறவுகள் இணைவார்கள். பலவிதத்திலும் , பல திசைகளிலிருந்தும் இருந்துவந்த தொல்லைகள் குறையும். நல்ல மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உங்கள் முன்னேற்றம் உங்கள் எதிரிகளை பயமுறுத்தி அலற வைக்கும். கடுமையான போராட்டத்துக்குப்பிறகு கிடைக்கவேண்டிய நன்மைகள்கூட வெகு எளிதில் உங்களுக்கு கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் அனைத்திலுமே நீங்கள் வகுக்கும் திட்டம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். சரியான பணியாட்கள் அமைவார்கள். தள்ளிப் போன குல தெய்வ வழிபாடுகளை இப்போது தொடருவீர்கள். சிலர் குலதெய்வங்களுக்கு அல்லது இஷ்ட தெய்வங்களுக்கு கோவில் கட்டுவார்கள். இதுவரை குடத்துக்குள் இட்ட விளக்காக இருந்துவந்த உங்கள் திறமைகளும் புகழும் இனிமேல் வெளிஉலகுக்குத் தெரிய ஆரம்பிக்கும். கடந்த காலத்தைப்பொல் அல்லாமல் குடும்பத்தாரின் தேவையறிந்து அவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இதன் காரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரின் பிரியத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத் துணை உடல்நலிவுற்றிருப்பார்களேயானால், அவர்கள் அந்த நலிவு நீங்கி இப்போது ஆரோக்கியம் பெறுவார்கள். பெரியோர்கள், சாதுக்கள், குருமார்கள் இவர்களின் ஆசிகள் கிடைக்கும்.

இனி சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கும் ராகு மற்றும் மே மாதம் 17-ம் தேதிக்குப் பிறகு சஞ்சரிக்கப்போகும் குரு இவர்களால் சாதகமற்ற பலன்கள் நிகழும். ஆனால்,  மேலே கூறப்பட்ட சாதகமான கிரகங்கள் நல்ல திருப்பங்களைக் கொடுத்துக் காப்பாற்றிவிடும். இனி சாதமற்ற நிலைகள் என்ன என்று பார்த்து அதற்குரிய உஷார் நிலைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். ராகுவின் 12-ம் பயணம் உங்களுக்கு அலைச்சலைக் கொடுக்கும். இதன் காரணமாக உங்களுக்கு அலைச்சல் அதிகமாகுமே தவிர ,வேலைப்பளு கூடுமே ஒழிய அந்தப் பயணங்களால், உங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது. அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்படும். அடிக்கடி அலைவானேன் என்று சிலர் வெளியூரிலேயே தங்கிவிடுவர். பூர்வீகச் சொத்தில் தற்சமயம் வில்லங்க விவகாரங்கள் ஏற்பட்டு, பின்னர் பஞ்சாயத்து மற்றும் உடன்பாடுகள் மூலம் பிரச்சினை நிவர்த்திஆகும். குழந்தைகள் ,பேரன்-பேத்திகள், புத்திர-புத்திரிகளின் வகையில் செலவு ஏற்படும். இந்த நேரத்தில் சிலருக்கு அரசாங்கத்தால், அரசியல்வாதிகளால், அரசு ஊழியர்களால், விரயச் செலவு ஏற்பட்டு மன வருத்தத்தைக் கொடுக்கும். மறைமுக எதிரிகளால் ஆபத்து இருந்துகொண்டிருக்கும். இருப்பினும் ஆண்டு முற்பகுதியில் குருபலத்தாலும், ஆண்டு முழுவதும் சனி பலத்தாலும் அவர்கள் ஏதும் செய்ய முடியாமல் முடங்கிக் கிடப்பார்கள். பெண்கள் தாம் தூமென்று செலவு செய்து மிக அவசியமான செலவுக்கு பணமின்றித் தவிப்பார்கள். சிலர் மனக் குழப்பத்தால் சரியான தூக்கமின்றித் தவிப்பார்கள். பெண்களுடன் சிலருக்கு வேண்டாத தொடர்புகள் ஏற்பட்டு ஆடம்பரப் பொருள்களை இழப்பீர்கள். சிலருக்கு அவர்களுடைய அனாவசிய ஆடம்பரத்துக்கும், பந்தாவுக்குமே செலவாவதால், உங்கள் நகைகளை அடகு வைக்கும் நிலைக்கு வருவீர்கள். சிலர் அரசாங்கத்தின் தண்டனைக்கு ஆளாகி தண்டம் கட்ட வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு தீர்ப்பு சாதகமாக இருக்காது. உழைப்பு அதிகமாக இருக்கும். ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. தொழில் ரீதியாக சில பின்னடைவுகள் ஏற்படும். உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த முடியாமல்போகும். உங்களிடம் கடனுக்குப் பொருள்களைப் பெற்றிருந்த வியாபாரிகளிடம் பனத்தை வசூல் செய்ய முடியாமல் போய், உங்களுக்கு திரும்ப முதலீடு செய்ய முடியாமல் தொழில் நலிவடையும். வரவேண்டிய பணமோ அல்லது தொழிலில் லாபமோ கிடைக்காததால், உங்களால் நாணயத்தைக் காப்பாற்ற முடியாமல் போகும். உங்கள் கௌரவம், அந்தஸ்து பாதிக்கப்படும். குடும்பத்தினர் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி, அதன் மூலம் வீட்டுக்குள் பிரச்சினை ஏற்பட்டு, உங்கள் கடுகடுப்பு அதை மேலும் அதிகப்படுத்தும். குடும்ப மகிழ்ச்சி குறையும். அடிக்கடி மருத்துவச் செலவுகள் வரும். கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை தோன்றும். கூட்டு வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு கூட்டாளிகள் பிரிவர். நண்பர்களும் உங்கள் சிடுசிடுப்பால் பிரிவார்கள். மனோதைரியம் குறையும். சகோதரர்களால் விரயச் செலவுகளும் தொல்லைகளும் வரும். உடல்பொலிவு குறையும். தாயாரின் உடல் நலம், மருத்துவ செலவு வைக்கும். மனம் எப்போதும் ஒரு சோகத்திலேயே இருக்கும். காரணம் தெரியாத , இனம் புரியாத கவலை மனதை அரித்துக்கொண்டே இருக்கும். குடும்பத்திலுள்ள அனைவரின் பேச்சும் செயலும் உங்களுக்கு துக்கத்தைக் கொடுக்கக்கூடியதாகவே இருக்கும். எப்போதும் எரிச்சலும் கோபமும் உண்டாகும். இந்த காலக் கட்டத்தில் பண விஷயத்தில் யாருக்காவது ஜாமீன் கொடுத்துவிட்டு முழிப்பீர்கள். பல சமயங்களில் நீங்களே அவர்களது கடனை அடைக்க வேண்டியிருக்கும். கல்வியில் பின்னடைவு ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும். உங்களுடைய புத்திசாலித்தனம் இந்த சமயத்தில் கை கொடுக்காது. பூர்வீகச் சொத்தை விற்கும் நிலைக்கு வருவீர்கள். உங்கள் கைக்கு வரவேண்டிய பூர்வீகச் சொத்துகள் உங்கள் கைக்கு வராது. குல தெய்வ வழிபாடு , தெய்வ காரியங்கள் பிதுர் காரியங்கள் , தீர்த்த யாத்திரைகள் போன்றவை தடைப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப் பிரசவம் ஏற்படலாம். புத்திர- புத்திரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திருமண காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். இந்த சமயத்தில் சுபச் செலவு செய்யக்கூடும் என்பதால், கொஞ்சம் முய்ற்சி செய்தால், உங்கள் பிள்ளைகளின் சுப காரியங்கள் நிறைவேறவும் கூடும். மாமன் வகை உறவு உள்ளவர்கள் இப்போது விரோதம் காட்டுவார்கள். கால்நடைகள், வீடு, வாகனம் முதலியவற்றில் விரயச் செலவு ஏற்படும். தந்தையின் உடல் நலம் பாதிக்கப்படும்.

இப்படியாக ஆண்டின் பிற்பாதியில் குருவின் சஞ்சாரம் சரியில்லாமல் போவதால், எதிலும் எச்சரிக்கை தேவை. ஆனால், மிகவும் ஆறுதலான விஷயம் என்னவென்றால், சனியின் லாப சஞ்சாரம்  திகழ்வதால், ஆண்டு  முழுவதுமே கவலையில்லை.  கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்துகொண்டால், கவலை ஏதும் இல்லாமலே போய்விடும். இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாகவே இருக்கும்.

பரிகாரம்:

உங்களுக்கு கோச்சாரப்படி ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. துர்க்கையம்மனை யும் மஹலக்ஷ்மியையும் வெள்ளிக்கிழமைகளில் பூஜிக்கவும்.கருப்பு உளுந்தை தானம் செய்யவும். குருபகவானின் சஞ்சாரம் ஆண்டின் பிற்பாதியில் சரியில்லை. எனவே, தக்ஷிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று,  வியாழக்கிழமைகளில்,கொண்டக்கடலை மாலையும் , செவ்வந்திப்பூ மாலையும் போட்டு வழிபடவும்.துன்பங்கள் பறந்துவிடும்.

இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு சுபமான ஆண்டாகப் பிறக்கும். வாழ்க பல்லாண்டு!

விருச்சிக ராசி

 

இந்த  2012-ம் ஆண்டு உங்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்ததாக இருக்கும். ஆனால், அதிக பாதிப்புகள் ஏற்படாத வகையில் குருவின் சஞ்சாரமும் பார்வையும் அமைந்து விட்டதால், நீங்கள் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியடையவே வாய்ப்புண்டு. ஆண்டு தொடக்கத்தில் குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அதாவது விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தும் நல்லதல்ல. ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், கேது உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.

ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், ஏன் அலைகிறோம் என்பதே தெரியாமல் அலைந்துகொண்டிருப்பீர்கள். அலைச்சலால் உங்கல் உடல்நலம் பாதிக்கப்படும். அடிக்கடி பயணம் செய்ய நேரும் . ஆனால், அதனால் உங்களுக்கு எந்தவித பயனும் ஏற்படாது. இந்தக் காலக் கட்டத்தில் உங்கள் அறிவுத் திறமை எந்த விதத்திலும் படயன்படாது. நீங்கள் எப்போதும் டென்ஷனாகவே இருப்பீர்கள். தொழில் மந்தமாகும். வருமானம் குறையும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும்.  செலவுகள் எதையும் குறைக்க முடியாது.  வேற்று மதத்தினருடன் கூட்டுத் தொழில் தொடங்க நேரும். அப்படி நேருமானால் புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்துவிடுதல் நலம்.  ஏனெனில் சிக்கலில் மாட்டிவிட்டு விடுவார்கள். புதிய தொழில் தொடங்கினால், தொல்லைதான். தொடங்கியதை நடத்தவும் முடியாமல், இருப்பதை தொடரவும் முடியாமல், கஷ்டப்படுவீர்கள். வீடு மாறுவீர்கள். தொழில் ஸ்தாபனங்களையும் வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். மேலதிகாரிகள்  வேலையில் குறைகாண்பார்கள்.  கூட வேலை செய்பவர்க்ள ஒத்துழைக்க மாட்டார்கள். வேலையில் நொந்து போய் ஏதாவது பேசினீர்கள் என்றால், வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்கள். நேரான வழியில் நடந்தால் தோல்வியே வருகிறதே என்று நொந்து போய் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பீர்கள். அதன்மூலமும் கஷ்டப்படுவீர்கள். ஒருமுறை மாட்டிக்கொண்டுவிட்டு அதிலிருந்து தப்பிக்க , மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்வீர்கள். எதிரிகளின் பலம் ஓங்குவதால், அவர்களிடம் அவமானப்படநேரும். உடல்நலத்தில் கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு,. விஷக்கடி ஏற்படலாம். சகோதரர்களுடனும் நண்பர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். தாயாரின் உடல் நலம் கெடும். உங்கள் கௌரவம், அந்தஸ்து பாதிக்கப்படும்.

இனி கேதுவின் 7-ம் இடத்து சஞ்சாரமும் கிட்டத்தட்ட மேற்கூறப்பட்டதுபோன்ற கெடுபலன்களையே கொடுப்பார். கூட்டாளியை அனுசரித்துப்போகாவிட்டால் கூட்டாளிகளால், பெரும் ஆபத்து வர வாய்ப்புண்டு. வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். பலவிதமான குழப்பங்கள் மனதில் நிலவும். சிலர் சட்ட விரோதமான, நூதனமான தொழிலை மேற்கொண்டு, மோசம்போவது மட்டுமின்றி அரசாங்கத்தின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் மற்றவர்களின் சந்தேகத்துக்கும் அதிருப்திக்கும் ஆளாவீர்கள். திடீர் கண்டங்கள், ஆயுள் பாதிப்புகள் ஏற்படும்.   குடும்பத்தினர், உறவினர்களின்  விமர்சனத்துக்கும்  ஆளாவார்கள். இரட்டைக் கணக்கு வைத்துள்ள வியாபாரிகள் இப்போது மாட்ட்டிக்கொள்ள நேரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

இனி சனியின் விரய ஸ்தான சஞ்சாரம் எப்படி உள்ளது என்று பார்க்கலாம். சிலருக்கு கண்டம், பொருள் இழப்பு திருடர்களால்,  போன்றவை ஏற்படும். ஆரோக்கியம் குறையும். பயணங்களின் போது குடிக்கும் தண்ணீரையும், சாப்பிடும் உணவுப்பொருளையும் சுத்தமாக இருக்கிறதா என்று சோதித்த பின் சாப்பிடவும். குளிர் சம்பந்தப்பட்ட நோய்களான சளி, மூச்சிறைப்பு, இருமல் போன்றவை உண்டாகும். சிலருக்கு பணக்கஷ்டத்தால் செய்யும் தொழிலில் மூலதனம் குறைவதால், தொழிலை வெளிநாடு, அல்லது வெளியூருக்கு மாற்றவேண்டியிருக்கும். வேலையில் இருப்பவர்கள் கூட இருக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க தானே சென்று இடமாற்ற கேட்டு ம் வாங்கிச் செல்வார்கள். வெப்ப நோய் தாக்கும் அபாயமும் உள்ளது.  சனியின் சஞ்சாரத்தால் அதிக பாதிப்பு ஏற்பட வழியில்லை. ஏனன்றால் சிந்திக்கும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். நான் நினைப்ப்துதான் சரி மற்றவர்கள் சொல்வது தவறு என்ற போக்கை மாற்றிக்கொண்டால் கொஞ்சம் நற்பலன்களாக நடக்க வழியுண்டு. பதவி உயர்வு, சம்பள உயர்வு முதலியவை கிடைக்கும். மேலும், மே 16-ம் தேதிவரை சனிபகவான் சஞ்சரிக்கும் துலா ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் பாதக பலன் ஏற்பட வாய்ப்பில்லை. மே மாதம் 17-ம் தேதி முதல், குரு 7-ம் இடத்துக்கு வந்து விடுவதால், இந்த ஆண்டு முழுவதும் நன்றாகவே இருக்கும்.

இனி குருவின் சஞ்சாரத்தைப் பார்க்க்லாம். மே மாதம் 17-ம் தேதிவரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திலும் மே மாதம் 17-க்குப் பிறகு 7-ம் இடத்துக்கு வருகிறார். குரு 6-ம் இடத்தில் இருக்கும்போது மனதில் எப்போதும் ஒரு சோகம் இருக்கும். குடும்பத்தினரின் பேச்சும் செயலும், உங்களுக்கு கவலையளிப்பதாகவே இருக்கும். எப்போதும் எரிச்சலும் கோபமும் இருக்கும். கடுகடுப்பாக இருப்பீர்கள். எதிரிகளைப் பற்றிய பயம் இருக்கும். தொழில் மந்தமாக இருப்பதால், வருமானம் இருக்காது. கோபமாகப் பேசுவதால் நண்பர்களை இழப்பீர்கள். ஜாமீன் கையெழுத்து போட்டு  மாட்டிக்கொள்வீர்கள். அவர்கள் வாங்கிய கடனை நீங்கள் அடைக்க வேண்டியிருக்கும். யாருக்கும் எதற்கும் வாக்களிக்க நேர்வதால் சிரமப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் ஏற்படும். குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். கர்ப்பிணிப்பெண்களுக்கு குறைப் பிரசவம் ஏற்படும். எல்லாவற்றிலும் தடையும் தடங்கல்களுமாக இருக்கும்.

இந்த நிலை வருகிற மே மாதம் 17-ம் தேதி முதல் மாறி நற்பலங்களாக நிகழும். வியாபாரம் மேன்மையடைந்து, வருமானம் பெருகும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். அலைச்சல்கள் குறையும். நல்ல ஓய்வு, நல்ல உணவு, நல்ல உடை என்று சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாகனங்க்ள் வாங்குவீர்கள். அந்நியப் பெண்களால் தொல்லை ஏற்படும். மனோபலம் அதிகரிக்கும். சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அடகில் உள்ள நகைகளை மீட்பீர்கள். திருமணம் தாமதமானவர்களுக்கு திருமணம் கூடிவரும் . சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி, மேற்படிப்பு, வாலைவாய்ப்பு என்று அனைத்திலும் நல்ல வாய்ப்பை அடைவார்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நடந்தேறும். பெரியோர்கள், ஞானிகள் மற்றும் சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். சகோதரர்களால் உதவி கிட்டும். இதுவரை குடத்திலிட்ட விளக்காக இருந்த நீங்கள் இப்போது வெளி உலகுக்கு தெரிய ஆரம்பிப்பீர்கள். எதிரிகள் உங்களிடம் பலமிழப்பார்கள். தந்தை மேன்மை அடைவார். சிலருக்கு தவறிப்போன பிதுர்காரியங்களை செய்ய வாய்ப்புகிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

எனவே இந்த ஆண்டு உங்களுக்கு பொதுவாக  நல்ல பலன்களே,  ஏற்படும். ராகு, கேது, சனி இவற்றின் சஞ்சாரம்  சரியில்லாவிட்டாலும்கூட குரு-பார்வை பலனும், குருவின் 7-ம் இடத்து சஞ்சாரமும் நிலைமையை சீராக்கி யோகமான பலன்களாகக் கொடுக்கும்.

பரிகாரம்:

சனியின் விரய ஸ்தான சஞ்சாரம் சரியில்லாததால், சனிக்கிழமைகலில் சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று எள்தீபம் ஏற்றுங்கள். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’ பாராயணம் செய்யவும். வயோதிகர்களுக்கும் ,உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யவும். கறுப்பு பொருள்களை தானம் செய்யவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. துர்க்கையம்மனை வழிபட்டு, கறுப்பு உளுந்தை தானம் செய்யவும். மகாலக்ஷ்மி தேவியை வணங்கவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லை. எனவே வினாயகர் கோவிலுக்குச் சென்று, சுத்தம் செய்வது போன்ற சேவைகளைச் செய்யவும். கொள்ளுதானம் செய்யவும். குருவின் சஞ்சாரம் மே மாதம் 16-ம் தேதிவரை சரியில்லாததால், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மற்றும் மஞ்சள் நிற மாலைசாற்றி வழிபடவும்.

இந்த ஆண்டு உங்களுக்கு மிக நல்ல ஆண்டாகவே இருக்கும். வாழ்க வளமுடன்.!

துலாம் ராசி

இந்த புது வருடம் 2012  உங்களுக்கு நல்ல பலன்களாகவே நடக்கும் .

இந்த ஆண்டு தொடங்குமுன்பே, சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்.  குரு பகவான் ஆண்டின் முற்பாதியில் அதாவது மே மாதம் 16-ம் தேதி வரையில் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின்  அதாவது மே மாதம் 17-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்துக்கு வருகிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் 2, 8-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

ராகு 2-ம் இடத்தில் சஞ்சரிப்பது உகந்தது அல்ல. ஆனால், நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், குரு உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் எந்தவித கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றிவிடுவார். இதை மனதில் கொண்டு ராகு சஞ்சார பலன்கள் எப்படி இருக்கும்? பார்க்கலாம்.

குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை நம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும் உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டயம் ஏற்படும். உடல் நலம் குறையும் . முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகளால் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் ஏற்பட்டுவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சி மேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் ,அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.

இனி கேது சஞ்சார பலன்களைப் பார்க்கலாம்.

பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். சிலருக்கு உயிர் பற்றிய பயமும் ஏற்பட வாய்ப்பு உருவாகும். இதைப் படிக்கும்போது பயப்பட வேண்டாம். இதற்குரிய பலன் இது என்று சொல்லவேண்டியதாகிறது. கூறப்படும் பலன்கள் பிறந்த ஜாதகத்தின்ப் பொறுத்தும், திசா புத்திப் பலன்களைப் பொறுத்துமே அமையும். உங்களை பக்குவப்படுத்திக்கொண்டு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு சரியான பரிகார முறைகளை மேற்கொண்டால்கெட்ட நேரமானாலும்கூட வெற்றிக்கொள்ள முடியும். சிலருக்கு தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ளும் எண்ணம் தோன்றலாம். ஆனால், சிறைத் தண்டனை அடைந்த ஒருவன் எப்படி விடுதலையாக இன்னும் ஓரிரு மாதம் இருக்கும்போது தப்பிக்க முயர்ச்சித்து பிடிபட்டுவிட்டால், தண்டனையை மீண்டும் முதலிலிருந்து முழுவதுமாக அனுபவிக்க வேண்டியிருக்கும். அதுபோல கர்ம வினைகளை அனுபவித்து தீர்ப்பதே நல்லது.

இந்த அசந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிக ஏற்படும். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழிலில் கூட்டாளியைப் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. குரு சாதகமாக இருப்பதால் அப்பீலில் பார்த்துக்கொள்ளலாம். பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.

இனி சனியின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். ஜென்மசனியாக உங்கள் ராசியில் சஞ்சரிக்கப்போகும் சனியினால் உங்களுக்கு பெரிய பாதிப்புகள் வராது. ஏனென்றால், ராசியாதிபதி சுக்கிரனுக்கு சனி நண்பராதலால், உங்கள் ராசியில் உச்ச சனியாக வலம் வருவதால், பயப்படத் தேவையில்லை. மேலும் குரு தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதும் நல்லதே. இதனால் திருமணத் தடை நீங்கும். தகுந்த வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவரும் தொய்வான நிலை மறைந்து பணப்புழக்கம் அதிகரிக்கும். உதியோகத்தில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகிப் போய்விடுவார்கள். புத்திரர்கள் சம்பந்தமான நற்காரியங்கள் சிறிது தாமதமாக நடந்தேறும். ஜென்ம சனி உறவினர்களிடையே பகையை வளர்க்கும். சம்பந்திகளிடையே தேவையற்ற மனத்தாங்கல் வரும். திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் பல விஷயங்களில் மனக்கஷ்டம் உண்டாகலாம். கணவன் அல்லது மனைவி வகையில் அடிக்கடி பிரிவு வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கிரக நிலைகளை அனுசரித்து நடந்துகொண்டால், விதியை மதியால் வெல்லலாம். நிலம், வீடு வாங்கும் விஷயங்களை தள்ளிப்போடுவது ந்ல்லது. கடன், நோய் ஏற்படும். உங்களுக்கு சொந்தமான மூதாதையர் நிலங்கள் உறவினர்களிடம் பறிபோக உள்ளது. ஆரோக்கியக் குறை ஏற்படலாம். சனியும் குருவும் அடுத்தடுத்து பார்த்துக்கொள்ள இருப்பதால், பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும். புத்திரர்களுக்கான சுபச் செலவுகளை மேற்கொள்வீர்கள்.  கடன் வாங்கி கடன்காரனாகவும் ஆவீர்கள். நகையை அடகு வைத்து கஷ்டப்பட்ட நீங்கள் இப்போது மனைவி ,பிள்ளைகளுக்கு தேவையான நகைகளையும் ஆடை ஆபரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி, கிரண்டர் போன்றவைகளையும் வாங்குவீர்கள்.

இனி குருவின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். குரு உங்கள் ராசிக்கு 7-ம் இயடத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் வருகிற மே மாதம் 16-ம் தேதிவரை நீடிக்கும். அதன்பிறகு 17-ம் தேதி முதல் ஆண்டு இறுதிவரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் இடத்துக்கு மாறுகிறார். ஆண்டு தொடக்கத்தில் குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்துகொண்டு, உங்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறார். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் நன்மை உண்டு. அலைச்சல்கள் குறையும். நல்ல உடை மற்றும் அணிகலன்களை அணிந்து மகிழ்வீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயர்ச்சிகள் அனைத்தையும், புத்தி சாதுர்யத்துடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரால் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும். மனோபலம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைத்து உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும். அடகு வைத்த நகைகளை மீட்பதுடன், புதிதாக ஆபரணங்களும் வாங்குவீர்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். தவறிப்போன குலதெய்வ வழிபாடு இப்போது நடைபெறும். சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுவார்கள். கோவில் தர்மகர்த்தா பதவி கிடைக்கும். பெரியோர் ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். மூத்த சகோதரர் தேவையான உதவிகள் செய்வார்கள். இந்த சமயத்தில் இளைய சகோதரர்களும் உதவியாக இருப்பார்கள். இளைய சகோதரர்கள் மேன்மையடைவார்கள். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த உங்களது திறமை, இப்போது வெளி உலகுக்குத் தெரிய வரும். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள்கூட உங்களுக்கு சாதகமாக முடியும். தந்தையின் உடல்நலம் பாதிப்படையும். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படும். சிலருக்கு பல், காது, கணுக்கால், கழுத்து, வாய், மூலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். எட்டாம் இடத்து கேது பயணங்களில் தொல்லை கொடுப்பார். உணவில் ஒவ்வாமை ஏற்படும். அலுவலகத்தில் உங்களுக்கு வேலைப்பளு குறையும். கூட வேலை செய்பவர்கள் உதவியாக இருப்பார்கள். சிலர் நூதன பொருள்களை விற்பதன் மூலம் எதிபர்பாராத லாபம் அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கும் இது அதிர்ஷ்டமான காலம்.

குரு பகவான் மே மாதம் 17-ம் தேதி முதல், 8-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்க காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அதன் மூலம் அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வார்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு  ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சிலர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து தொலை தூரங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.  குருவின் 8-ம் இட சஞ்சாரத்துக்காக நீங்கள் அதிகம் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால், சனி உங்களுக்கு யோக காரகன் என்பதால், உங்களுக்கு கெடுதியை ஏற்படுத்தமாட்டார்.

பரிகாரம்:

ஆண்டு பிற்பகுதியில் குரு 8-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும். சனிஜென்மசனியாக வலம் வருவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின் 2-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். கேதுவின் 8-ம் இட சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகர் கோவிலுக்குச் சென்று சேவை செய்யவும். கோவிலை சுத்தம் செய்து  வினாயகப் பெருமானை வணங்கவும் . கொள்ளு தானம் செய்யவும்.

கன்னி ராசி

இந்த 2012-ல் பிறக்கப்போகும் புத்தாண்டு ,உங்களுக்கு இரண்டும் கலந்ததாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளாக ஏழரைச் சனியில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தவகையில் பார்த்தால், இனி வரப்போகும் காலம் நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரம்தான். ஏழரைச் சனி முழுவதுமாக நீங்கிவிடவில்லை என்றாலும், இறுதி இரண்டரை ஆண்டில் இருக்கிறீர்கள். எனவே இது உங்களுக்கு ‘அப்பாடா ‘ என்று பெருமூச்சு விடவேண்டிய நேரம்தான்.

இனி கிரக சஞ்சார பலன்களைப் பற்றிப் பார்க்கலாம். சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும், குரு பகவான் மே மாதம் 16-ம் தேதிவரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திலும், சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் மே மாதம் 17-ம் தேதியன்று உங்கள் ராசிக்கு 9-ம் இடத்துக்கு மாறி சஞ்சரிக்கப் போகிறார்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து, உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுப்பார். ஏனென்றால், ராகுவுக்கு 3-ம் இடம் என்பது ஸ்தான பலம் உள்ள இடமாகும். மனதில் தைரியம் மிகுந்து எந்த பிரச்சினையும் சந்தித்து எதிர்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பீர்கள். பல துணிச்சலான காரியங்களில் இறங்கி, அவற்றை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள், செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியே அடைவீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். தற்போது உங்கள் முகத்தைப் பார்த்தாலே உங்களுக்கு வேண்டாதவர்கள்கூட உங்களுக்குத் தேவையானதை செய்துகொடுக்கத் தயங்க மாட்டார்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். பயணங்கள் உங்களுக்கு அலைச்சலைக் கொடுத்தாலும், அந்தப் பயணங்களால், வாழ்க்கைக்கு உதவும் முன்னேற்றங்களும், வெற்றிகளும் கிடைக்கும்.  தொழில், வியாபாரம் மேன்மை அடையும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பொருளாதார வசதி அதிகரிக்கும். வாழ்க்கையில் அந்தஸ்து கூடும். சிலருக்கு புதிய பதவிகள், பட்டங்கள், கௌரவப் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால், உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். அதுபோல தற்போது சில புதிய அரசியல்வாதிகள் , பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் அறிமுகமும் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். போட்டிகள், பந்தயங்கள், பங்குச் சந்தைகள் முதலியவற்றில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு  வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும்.  சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பார்கள். அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்து அவர்களது கனவுகள் நனவாகும். வெளிநாட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பணி உயர்வு, வேண்டிய பணியிடமாற்றம் இவைகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் உங்கள் மதிப்பு உயரும். உங்களது சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சிலர் விருந்து ,கேளிக்கைகள் என்று மகிழ்ச்சியில் திளைப்பார்கள். மாணவர்கள் படிப்பில் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். நிறைய மதிப்பெண்கள் பெறுவார்கள். கலைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நேரம். புதிய ஒப்பந்தங்கள் உருவாகி முன்னேற்றம் கிடைக்கும்.  குடத்துக்குள் இருக்கும் விளக்கு போல இவர்களுடைய திறமை இதுவரை வெளி உலகிற்கு தெரியாமல் இருக்கும். இனி இவர்க்ள் குன்றின் மேலிட்ட விளக்காகப் பிரகாசிப்பார்கள். இவர்கள திறமையை அனைவரும் உணர்ந்து பாராட்டுவார்கள். இதன் காரணகமாக இவர்களுக்கு நல்ல வெகுமதிகளும் பாராட்டுகளும் கிடைக்கும். உடன்பிறந்த சகோதர –சகோதரிகள் மேன்மை அடைவார்கள். வேண்டிய சமயத்தில் அவர்களால், உங்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடந்த காலத்தில் உங்களைவிட்டுப் பிரிந்துபோன உடன்பிறந்தவர்கள் இப்போது உங்களைத் தேடி வருவார்கள். உங்களுடன் உறவாட விரும்புவார்கள்.  புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எப்போதோ வாங்கிப்போட்ட நிலம் இப்போது பல மடங்கு விலை உயர்ந்து கோடிகளைக் கொட்டிக்கொடுக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் தீரும். இதுவரை தாமதப்பட்டுவந்த நல்ல காரியங்கள் இப்போது தடைகள் நீங்கி நல்லபடியாக முடிவடையும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டினை தொடரும் நிலை உண்டாகும். புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். நீங்கள் இழந்த பொருட்கள் திரும்பக் கிடைக்கும். மக்கள் மத்தியில் உங்களுக்கென்று தனி மரியாதை ஏற்படும்.

இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். இதுவரை ஒரு குறிக்கோள் இல்லாமல் சென்றுகொண்டிருந்த உங்களது வாழ்க்கை இப்போது ஒரு குறிக்கோளுடன் செல்ல ஆரம்பிக்கும். வாழ்க்கை நல்ல முன்னேற்றமான பாதையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். எதையும் தர்மப்படி, நியாயப்படி செய்யவேண்டும் என்கிற உயர்ந்த எண்ணமும் உயர்ந்த குறிக்கோளும் மனதில் உதயமாகும். வாழ்க்கையில் உங்களுக்கென்று ஒரு லட்சியம் பிறக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தந்தை மட்டுமல்லாது உங்களைச் சேர்ந்த மற்றபெரியவர்களுக்கும் இப்போது உடல்நலம் பாதிக்கக் கூடும். தடைப்பட்டுப்போன குலதெய்வவழிபாடு இப்போது நல்ல முறையில் நடைபெறும். மனம் ஆன்மீகத்தில் லயிக்கும். சிலருக்கு கோவில்,மடம் போன்ற இடங்களில் கௌரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு ஞானிகள், சாதுக்கள் ஆகியோரின் சந்திப்புகளும் ஆசிகளும் கிடைக்கும்.  இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த உங்களது பெருமை இப்போது யாவருக்கும் புரிய ஆரம்பிக்கும். உலகியல் விஷயங்களில் ஆர்வம் குறையும். பொருள் சேர்க்கவேண்டும் என்று நினைப்பதைவிட நல்ல பெயரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். சிலர் உத்தியோகம் காரணமாகவோ அல்லது வியாபாரம் காரணமாகவோ குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிற்கு செல்லவேண்டியிருக்கும். கட்டுமானப் பணிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி  கட்டுமானப் பணிகள் இனிது முடிவாடையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பேச்சில், சாந்தமும், பொறுப்பும், நிதானமும் பெருகும். அதனால், யாரிடமும் எந்தக் காரியத்தையும் சாதித்துக்கொள்வீர்கள். கோர்ட் கேஸ்களில் வெற்றி உண்டாகும். மனைவிவழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும் வாய்ப்பு உண்டாகும்.

இனி குரு பகவானின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது, இந்த வருடம் 2012-ல் குரு உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எட்டாம் இடம் என்றதும் நீங்கள் பயம் கொள்வது புரிகிறது. நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், குரு பகவான் உங்கள் ராசிக்கு 4,7-ம் வீடுகளுக்கான கேந்திர அதிபதியாகிவிட்டதால், உங்களுக்கு நற்பலன்களாகவே நிகழும். சிலருக்கு வீடு மாற்றும் யோகம் உண்டாகும். குருபகவான் உங்கள் ராசிக்கு அந்த இடங்கள் சிறப்படைகின்றன. வாக்கு வன்மை அதிகரிக்கும். தங்களின் பேச்சுக்கு வெளியில் நல்ல மதிப்பு உண்டாகும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் தீர்ந்து குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள்மிகுதியாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மீண்டும் பழைய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். 4-ம் இடம் குருவின் பார்வை பெறுவதால், தாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தங்களுக்கு சுகங்களும் சந்தோஷங்களும் அதிகரிக்கும். சிலருக்கு புதுமனை வாங்கும் யோகம் உண்டாகும். ஏற்கெனவே கட்டி பாதியில் நின்றுவிட்ட வீடு, கட்டிடங்களை கட்டி முடிக்க முயற்சி செய்து கட்டி முடிப்பீர்கள். தாயை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.  12-ம் இடம் குருவின் பார்வை பெறுவதால், தாங்கள் செய்யும் அனைத்து செலவுகளும், சுபவிரயங்களாக இருக்கும். அனைத்து செலவுகளும் தங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவதாக இருக்கும். கடன் சுமைகள் குறையும். தகப்பனாரின் உடல்நலனில் அக்கறை எடுதுக்கொள்ள வேண்டியது அவசியம். பிறரிடம் பேசும்பொழுது எச்சரிக்கையாகவும் யோசித்தும் பேசுவது நல்லது. பிறருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நலம். இளைய சகோதரருடன் சிறு சிறு பிரச்சினை உண்டாகலாம். தொழிலில் மாற்றம் உண்டாகும். மனைவியின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பீர்கள். தொழில் புரிபவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவது நலம். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். லாபம் ஒரே சீராக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும். வெளியூர் பிரயாணங்கள் அதிகம் ஏற்படும். இப்படிப்பட்ட பலனாக அளித்துவந்த குருபகவான், வருகிற 17-ம் தேதி மே மாதம் 2012-ல் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்ரிக்கப் போகிறார்.

குருவின் 9-ம் இட சஞ்சாரம் என்னேன்ன பலன்களைக் கொடுக்கும் என்று பார்க்கலாம். இந்த சஞ்சாரம், உங்களுக்கு பல யோகங்களை உண்டாக்கும். பணப் பிரச்சினை பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து புது மனிதனாவீர்கள். தந்தை வழியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அகன்று, ஒன்று சேர்வீர்கள். தந்தையின் பேச்சுக்கு மதிப்பளித்து அவர் சொற்படி நடந்தால், ஒரு சில பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். ஆன்மீகத்தில் மனம் அதிகம் ஈடுபடும். கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனிதே முடியும். நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்தத் துறையில் பகழடைவீர்கள். இதுவரை பிறரிடம் வேலை செய்து வந்தவர்கள் இனி சொந்தத்தில் தொழில் தொடங்குவார்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவும் லாபகரமாகவும் அமையும். இதுவரை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் இருந்தவர்கள்கூட உங்கள் முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மற்றவர் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடை ஆபரணங்கள் , ஆடம்பரப் பொருள்கள் அத்தனையும் வாங்கி மகிழ்வீர்கள். படிப்பில்  மந்தமாக இருந்த பிள்ளைகள்  படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். தங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.

இனி சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிப்பதற்கான பலன்களைப் பார்ப்போம். கடந்த 5 வருடமாக நீங்கள் பட்டு வந்த துயரமெல்லாம் நீங்கப் போகிறது. வாழ்க்கையில் நீங்கள் எதையெல்லாம் சந்திக்கக்கூடாது என்று நினைத்தீர்களோ அதையெல்லாம் சந்தித்து எல்லாவற்றிலும் துன்பம், துயரம், தோல்வி, ஏமாற்றம், குடும்பத்துக்குள் போராட்டம், தொழிலில் இழப்பு, தீராப் பகை என்று பலவித கஷ்ட  நஷ்டங்களையும் பார்த்து நொந்து போய்விட்ட சமயத்தில்தான் இந்த சனிப்பெயர்ச்சி, கோடை காலத்தில் மழைபோல வந்துள்ளது. இப்போது இரண்டாம் இடத்துக்கு வரப்போகும் சனி உச்ச சனியாக வரப் போகிறார். இதனால், உங்கள் தனமும், வாக்கும், குடும்பமும் உச்சமாகிக் கொடுக்கப் போகிறார். கூடுதல் அனுசரணையாக மேஷ ராசியில் இருக்கும் குருபகவானும் தன்னுடைய சுபப் பார்வையையை சனியின் மீது வீசுகிறார். வீடு, நிலம், தொழில் பூர்வீகச் சொத்தில் இருந்துவரும் கடன், வம்பு வழக்குகளில் இருந்து முற்றிலும் விடுதலை ஏற்படும்.  . இதனால் மன நிம்மதி உண்டாகும். சிலருக்கு புதிய வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாமதமாகிவரும் திருமண பாக்கியம் சுப முடிவு சொல்லும். கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த அத்தனை பிரச்சினைகளும் விலகி பதவி உயர்வு, சம்பள உயர்வு, வழக்கில் வெற்றி முதலியவை ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சொந்தத் தொழிலில் இருந்துவரும் தொய்வு நிலை நீங்கி, விறுவிறுப்பை எட்டும். கடலில் தத்தளிப்பவனுக்கு கை கொடுப்பதுபோல உங்களுக்கு உதவி செய்ய பல பெரிய மனிதர்கள், நண்பர்கள் முன்வருவார்கள். அவர்களில் சிலருக்கு உள்நோக்கம் வேறு மாதிரியாகக்கூட இருக்கும். அவர்களில் சிலரால் குடும்பத்தில் குழப்பம் வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே யாரையும் எளிதாக நம்பிவிடாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் உங்களை வஞ்சிக்கக் காத்திருப்பவர்களின் நய வஞ்சகத்தைப் புரிந்து அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அறிவையும் குருபார்வையிலிருந்தும் குருவின் சஞ்சாரத்தின் மூலமும் நீங்கள் பெறலாம். இனிமேல் வேலை இல்லாமல் இருப்போருக்கு வேலை கிடைக்கும். பணவரவு பெருகிஉங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் எதிர்பார்த்தபடியே வெளிநாட்டு வேலையும் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து திடீர் அழைப்புகல் வந்து உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் குளிப்பாட்டும். கணவன் –மனைவி உறவில் ஏகாந்தமான சூழ்நிலை உருவாகும். வெறுப்புடன் இருந்துவந்த மனைவிகூட தமது கணவர் நல்லவர்தான் என்று மெச்சும்படியான நேரம் வந்துவிட்டது. இதுவரை பொட்டுத் தங்கம்கூட இல்லாத வீட்டில்கூட தங்க நகைகளை வாங்கும் சூழ்நிலை யில் செல்வம் கொழிக்கும். கடன்கள் குறையும். கணவன்—மனைவி உறவில் நாளடைவில் மகிழ்ச்சி பெருகும். மனதில் இருந்துவரும் பயம் தன்னம்பிக்கைக் குறைவு நீங்கும். உத்தியோகத்தில் புதிய மதிப்பு, மரியாதை உண்டாகும். மூளையை மூலதனமாக்கி செய்யும் அத்தனை வேலையிலும் ஜொலிப்பீர்கள். முயற்சிக்குத் தகுந்த அளவு குறைவின்றி வருமானமும் புகழும் கிடைக்கும்.

இப்படியாக உங்களுக்கு இந்தப் புத்தாண்டு மிக நல்ல பலன்களை வழங்கும். ஆண்டின் தொடக்கமான முன்பாதியில் குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதைத் தவிர மற்ற கிரகங்களான சனி, ராகு, கேது, ஆண்டுப் பின்பகுதியில் குரு என்று அனைத்து கிரகங்களும் உங்களுக்கு நற்பலன்களைத் தரப்போவதால், இந்தப் புத்தாண்டு உங்களுக்கு மிகவும் நன்றாகவே இருக்கும்.

பரிகாரம்:

ஏழரைச் சனியின் இறுதிப் பகுதியில் இருப்பதால், நீங்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்தீபம் ஏற்றி வழிபடவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவிசெய்யுங்கள். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் ‘ஹனுமான் சலீஸா’ பாராயணம் செய்யவும்.  குருபகவான் ஆண்டின் முற்பகுதியில் எட்டில் இருப்பதால்,  வியாழக்கிழமைகளில் குருதட்சிணாமூர்த்தியைகொண்டக் கடலையையும், மஞ்சள் நிற மலர்களும் கோண்டு மாலை சாத்தி வழிபடவும்.

வாழ்க பல்லாண்டு. ! மகிழ்வுடன் கொண்டாடுங்கள் இந்த இனிய புத்தாண்டை!

அடுத்த பக்கம் »